கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் சம்பார்க் பௌண்டேஷன் அமைப்பு!



Image result for sampark foundation"
வினீத் நாயர், நிறுவனர் சம்பார்க் அமைப்பு 



 கிராமப்புற தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். 


கல்வியில் இந்திய அரசு கூடுதலாக கவனம் செலுத்தினாலும் கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறன் குறைவாகவே உள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்கத் தெரியவில்லை.  99க்கு பிறகுள்ள எண்களை சொல்லுவதில் தடுமாற்றம் உள்ளது.
தொடக்க கல்வியில் வாசிப்பு, எழுத்தில் இத்தனை தடுமாற்றங்களை மாணவர்கள் கொண்டிருந்தால், அவர்கள் மேல்நிலைக்கல்வியில் எப்படி சாதிப்பார்கள்? இதில் மாணவர்களுக்குக் கற்றுத்தரும் பழமையான கற்றல்முறைகளின் பங்கும் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் 36 சதவீதம் மாணவர்கள் தொடக்க கல்வியோடு நின்றுவிடுகிறார்கள். இதைத் தடுக்க தொழில்நுட்பத்தோடு இணைந்த ஆசிரியப்பணி ( Technology-driven pedagogy) தேவைப்படுகிறது.

ஆங்கிலவழியில் மாணவர்களுக்கு கற்பித்தாலும்,கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் அம்மொழியை எப்படி பயிற்சி செய்வார்கள்? மொழிப்பாடங்களை திறம்பட கற்றுத்தரும் திறன் ஆசிரியர்களுக்கு இல்லையென்றாலும் பாதிப்பு மாணவர்களுக்குத்தான். இதற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சம்பார்க் பௌண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் உதவுகிறது.

ஆறு மாநிலங்களில் (உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம்) இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அரசு நிதியளிக்கும் 76 ஆயிரம் பள்ளிகளில் நவீன கல்விமுறைகளை செயல்படுத்தி வருகிறது. இம்முறையில் கிராமப்புறங்களில் உள்ள 70 லட்சம் மாணவர்கள் ஊக்கமூட்டும் வகையிலான கல்வியை பயில்கின்றனர்.  சம்பார்க் தீதி எனும் கருவி மூலம் பாடல்கள், கதைகள் மூலம் பாடங்களைக் கற்றுத் தருகின்றனர். இவர்களின் ஆப்பை இணையமின்றியும் பயன்படுத்த முடியும்.

 1 முதல் 3 வரையிலான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்து எப்படி மாணவர்களுக்கு கற்பிப்பது என்பதற்கு சம்பார்க் நிறுவனம் பயிற்சி அளிக்கிறது. மேலும் இதற்கான கருவிகளையும் மாணவர்களுக்கு இலவசமாக அளித்து வருகிறது. ஆங்கிலம் மற்றும் கணிதம் சார்ந்த பயிற்சிகளை இந்த நிறுவனம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அளிக்கிறது. இத்தகைய திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றினால் தொடக்க கல்வியில் ஏற்படும் தடைகள் அகல வாய்ப்பு உள்ளது.
தகவல்:FE

பிரபலமான இடுகைகள்