பத்திரிகை சுதந்திரத்தில் பின்தங்கும் இந்தியா! - இந்தியா 75

 









2022ஆம் ஆண்டு இந்தியா, உலக பத்திரிகை சுதந்திர தொகுப்பு பட்டியலில் சரிந்துள்ளது. மொத்தம் 180 நாடுகள் உள்ள பட்டியலில், இந்தியா தற்போது 150ஆவது இடத்தை வகிக்கிறது. இந்த பட்டியலை ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்  என்ற ஊடக கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. 

ஊடக சுதந்திரத்தில் முன்னிலையில் உள்ள மூன்று நாடுகளைப் பார்ப்போம். நார்வே, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளே முன்னிலை வகிக்கின்றன. 

பாரிசில் இருந்து செயல்பட்டு வரும் ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற அமைப்பு, தன்னார்வமாக பத்திரிகை சுதந்திரத்தை காக்க செயல்பட்டு வருகிறது. பத்திரிகை சுதந்திரம் தொகுப்பு பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான செய்திகளை உண்மையை உடல், மன அச்சுறுத்தல் இன்றி பத்திரிகையாளர்கள் வழங்குவது என பத்திரிகை சுதந்திரத்தை இந்த அமைப்பு விளக்கியுள்ளது. 

நாடுகளை பட்டியலிட என்ன மாதிரியான அம்சங்களை கணக்கிடுகிறார்கள்?

0 முதல் 10 வரையிலான புள்ளிகளை வழங்குகிறார்கள். இதில் ஜீரோ என்பது பத்திரிகை சுதந்திரமே படுகுழியில் இருக்கிறது என்பதைக் காட்டும் புள்ளி. அதிக புள்ளிகள் வாங்குவது நாட்டிற்கு பெருமையான, ஜனநாயகம் உயிர்பிழைத்திருக்கிறது என்பதைக் காட்டும் அடையாளம். மேற்படி புள்ளிகளை பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் வழங்குகிறார்கள். அரசியல், சட்டம், பொருளாதாரம், சமூக கலாசாரம், பாதுகாப்பு ஆகியவற்றை பிரிவுகளாக அமைத்து புள்ளிகளை வழங்குகிறார்கள். நாடுகளை பிரிக்கிறார்கள். 

கடந்த வகையில் இந்தியா பெற்ற குளோபல் ஸ்கோர் 53.44. தற்போது புள்ளிகள் சரிந்து 41 ஆக மாறியிருக்கிறது. அரசியல்வாதிகள், அரசு பொதுமக்களது நன்மைக்காக செய்யும் செயல்பாடுகள் என இதைக் கூறலாம். 

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்,  அரசியல்ரீதியாக பாகுபாடு, ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களின் செயல்பாடு ஆகியவையும் இதில் முக்கியமானது.  ஆன்லைன் தாக்குதல், பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை வன்முறை ஆகியவற்றை கணக்கில் கொள்கிறார்கள். 

இந்திய பிரதமர் மோடி, ஊடகங்களை தனக்கும் தனது ஆதரவாளர்களுக்குமான உறவை மாசுபடுத்துவதாகவே கருதுகிறார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் அச்சு மற்றும் ஆன்லைன் முறையில் 130 பில்லியன் டாலர்களை செலவிட்டு வருகின்றனர். இன்றும் அந்த ளவு முதலீடு செய்யப்படும் துறையாக ஊடகத்துறை உள்ளது. சமூக கலாசார அளவில் பன்மைத்துவம் கொண்ட மக்களை ஊடகம் மிக குறைவாகவே பிரதிபலிக்கிறது. இந்துமதத்தைச் சேர்ந்த உயர்சாதிக்காரர்கள் ஊடக நிறுவனங்களின் உயரதிகாரர்களாக உள்ளனர். இதனால்தான் ஊடகங்கள், சாதாரண மனிதர்களை பிரதிபலிக்க முடியவில்லை. 

ஜி சம்பத்

இந்தியன் எக்ஸ்பிரஸ் 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்