கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் ஆங்கில மொழிபெயர்ப்பில்.... - புதிய நூல்கள் அறிமுகம்

 






















புதிய நூல்கள் அறிமுகம்


வீ மூவ்

குர்நாய்க் ஜோகல்

செர்பன்ட் டெய்ல்

499

இங்கிலாந்தில் குடியேறிய ஆசிய மக்கள் பற்றிய கதைகளை நூலில் கூறுகிறார்கள். மேற்கு லண்டன் பகுதியில் ப்ரீத்தி வாழ்கிறாள். இவளது பாட்டி பஞ்சாபி மொழியைப் பேசுகிறாள். இருவருக்குமான இடைமுகமாக இருப்பது ப்ரீத்தியின் அம்மாதான். இவர்களது உலகம் சார்ந்த சிக்கல்களை ஆசிரியர் விவரித்திருக்கிறார். 


நியூ அனிமல்

எல்லா பாக்ஸ்டர்

பிகாடர்

799


அமெலியா, இறந்து போனவர்களின் உடல்களை அலங்கரிக்கும் தனது குடும்ப நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அவள் ஆன்லைனில் தனது காதலைக் கண்டுபிடிக்கிறாள். இடையில் அந்த உறவை இழக்கிறாள். பாலுறவு, இறப்பு, துக்கம் என பல்வேறு விஷயங்களை அவள் எப்படி அடையாளம் காண்கிறாள் என்பதே கதை. வலி என்பது உடல்தோறும் மாறிக்கொண்டே இருப்பதை வாசிக்கையில் வாசகர்கள் எளிதாக உணரலாம். 



லாஸ்ட் கேர்ள்

சனா ஷெட்டி

ஹார்ப்பர் கோலின்ஸ் இந்தியா

299

சிம்லாவில் நடைபெறும் திரில்லர் கதை. இங்கு பணியில் ஓய்வு பெற்ற அதிகாரி வனெஸ்ஸா தனது கணவர் அடியனோடு வாழ்கிறார். ஒருநாள் சாலையோரத்தில் உள்ள புதர்ப்பகுதியில் பெண் ஒருவர் அடிபட்டு குற்றுயிராக கிடப்பதைப் பார்த்து அவரை மீட்கிறார். அவருக்கு கடந்தகாலம் ஏதுமே நினைவில் இல்லை. காயமான அந்த பெண் மெல்ல தனது வளர்ப்பு பெற்றோரின் கஃபேயை அடையாளம் காட்டுகிறாள். அந்த நேரம் அந்த நகருக்கு வரும் மனிதர் ஒருவரால் அவளது கடந்த காலத்தை எட்டிப்பார்க்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கிறது. அது எப்படியானது என்பதை அறிய வாசியுங்கள். 





ஹங்க்ரி ஹியூமன்ஸ்

கரிச்சான் குஞ்சு

ஆங்கிலத்தில் சுதா ஜி திலக்

பெங்குவின் வைக்கிங்

499

1978ஆம் ஆண்டு வெளியான கரிச்சான் குஞ்சுவின் நாவல், பசித்த மானிடம். அதுதான் ஆங்கிலத்தில் ரிச்சாக விலை வைத்து வெளியிட்டிருக்கிறார்கள். முடிந்தால் வாங்கிப் படியுங்கள். தொழுநோயால் பாதிக்கப்பட்ட கணேசன் என்பவன், சொல்லும் தன் வரலாற்று கதை தான். வெளிவந்த காலம் தொட்டு வாசிக்கப்பட்டு வரும் முக்கியமான நாவல். கதை நடக்கும் இடம் , கும்பகோணம். 





தி இந்து ஆங்கிலம்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்