மாணவர்களிடையே தேய்ந்து வரும் எழுதும் பழக்கம்! - விளைவு என்ன?

 










தேயும் எழுதும் பழக்கம்!

பெருந்தொற்று காலகட்டம் மாணவர்களின் கல்வியை பின்னோக்கி நகர்த்தியது. கூடவே, எழுதும் பழக்கத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாக, மீண்டும் எழுதுவதற்கு பயிற்சி தேவைப்படும் நிலையில் மாணவர்கள் உள்ளனர். ஸ்மார்ட்போன், கணினி, டேப்லெட், பல்வேறு ஆப்கள் என யாருக்குமே பேனாவை பிடித்து எழுதும் அவசியம் இல்லை. பள்ளிகளில்மட்டும் தான் மாணவர்கள் பல்வேறு எழுத்து வேலைகளை செய்கிறார்கள்.

பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் மாணவர்களின் மனநிலை பற்றி பலரும் கவலைப்பட்டனர். ஆனால், இரண்டு ஆண்டுகள் எதையும் எழுதாமல் இருக்கும் மாணவர்கள் பள்ளி தொடங்கியதும் எப்படி எழுதுவார்கள் என இப்போதுதான் பெற்றோர் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்காக டில்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் எழுத்துப் பயிற்சிக்கான மையங்கள் உருவாகி வருகின்றன. மும்பையில் கையெழுத்துப் பயிற்சி அளித்து வருகிறார் குன்சால் கலா. இவரது வகுப்பில், 5 ஆயிரம் பேர்களுக்கு மேல் பயிற்சியளித்துள்ளார். எழுதுவதில் சுணங்கினால் எழுத்து தேர்வுகளை நேரத்திற்கு எழுத முடியாது என்பதே பெற்றோரின் கவலை. மாணவர்கள் பலருக்கும் பேனா, பென்சிலை சரியாக விரல்களில் பிடிப்பதே மறந்துபோய்விட்டது. 

”ஆன்லைன் கல்வியில் பேனாவை எடுத்து குறிப்புகள் எடுக்கவேண்டியதில்லை. அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்தாலே போதுமானது. இதனால் தான் குழந்தைகளுக்கு எழுதுவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது” என்றார் குளோபல் பென்மேன்ஷிப் அகாடமியின் நிறுவனர் இம்ரான் பெய்க். இன்று பள்ளிகள் வழங்கும் வீட்டுப்பாடங்களும் டிஜிட்டல் முறையில், கணினியில் செய்யும்படி மாறியிருக்கிறது. இதுவும் எழுத்துப்பயிற்சி மாணவர்களுக்கு குறைந்துபோக முக்கியமான காரணம். ”மாணவர்கள் நிமிடத்திற்கு 20 வார்த்தைகளை எழுதினால், இரண்டரை மணி நேரத்திஃ  3 ஆயிரம் வார்த்தைகளை எழுதுவார்கள். எழுதும் பயிற்சி சரியாக இருந்தால்தான் மனதில் பதிந்த விடைகளை சரியாக எழுத முடியும்” என்றார் பெங்களூருவைச் சேர்ந்த எழுத்துக்கலை  பயிற்றுநரான கே.சி. ஜெகநாதன். 


 

 




the declining of hand writing (lhendup g bhutia)

help they can't write anymore 

https://openthemagazine.com/feature/the-decline-of-handwriting/

https://www.inkedhappiness.com/kc-janardhan-writer-of-the-lost-arc/

கருத்துகள்