மோசடிகளை தடுக்க க்யூஆர் கோடை ஏடிஎம் கார்டு போல பயன்படுத்தலாம்!
க்யூஆர் கோட் மூலம் ஏடிஎம் மில் பணம் எடுக்கலாம்!
பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் குறைவாக நிரப்பப்படுகிறது. இல்லையெனில் அவுட் ஆப் சர்வீஸில் இயந்திரம் இருக்கும். இதையெல்லாம் தாண்டி செயல்பட்டால் ஏடிஎம் இயந்திரம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் மெனு ஆப்சன்களைக் கொண்டிருக்கும். பணத்தை எடுக்க டெபிட் கார்டுகள் உதவுகின்றன. இதில் நிறைய மோசடிகள் நடந்து வந்தன. அதையெல்லாம் ஒழிக்க கார்டுகளைக் கூட நவீனப்படுத்தி ஒருவரின் பெயர் இல்லாமல் தயாரிப்பது, கார்டை ஸ்வைப் செய்யாமல் காட்டினாலே போதும் என நிறைய ஆப்சன்களை உருவாக்கினார்கள்.
இப்போது ஆர்பிஐ போனை ஏடிஎம் கார்டாக பயன்படுத்த யோசனை ஒன்றை சொல்லியிருக்கிறது. ஏடிஎம் சென்று யுபிஐ வசதியை இயக்கி, போனைத் திறந்து யுபிஐ வசதிக்காக பாரத் பே, சிட்டி யூனியன் மணி பிளஸ், அல்லது படுஸ்லோவாக வேலை செய்யும் யூனியன் பேங்க் ஆப்பைப் பயன்படுத்தலாம். ஏடிஎம் ஸ்க்ரீனில் உள்ள க்யூஆர் கோடை போனில் வெரிபை செய்தால் போதும். காசை மெஷினில் நிரப்பிப் பெற்றுக்கொள்ளலாம. இதற்கு முக்கியமாக இணைய வசதி கொண்ட போன் அவசியம். இல்லையெனில் பணத்தை எடுக்க முடியாது.
அதேசமயம் டெபிட், கிரடிட் கார்டுகளைப் பயன்படுத்தியே பெரும்பாலான பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. அதாவது இதை வியாபார வகையில் புரிந்துகொண்டால் சரி. கூகுள் பே, போன் பே, பேடிஎம் ஆகிய நிறுவனங்களின் ஆப்களை பயன்படுத்தி பணம் அனுப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆர்பிஐ க்யூஆர் கோட் வசதியை கூடுதலான ஒன்றாகவே கூறியிருக்கிறது. இதனால் இதைப் பயன்படுத்த கூடுதல் கட்டணம் ஏதும் கிடையாது.
கருத்துகள்
கருத்துரையிடுக