நேருவின் சோசலிச கொள்கையும், சோவியத் யூனியனும்! - இந்தியா 75

 











இந்தியா 75


நேருவும், அவரின் சோவியத் சோசலிச உறவும். 


இன்று இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நிர்வாக திறனின்மைக்கு கூட மறைந்த முன்னாள் பிரதமர் நேரு குற்றம்சாட்டப்பட்டு வருகிறார். அவர் அக்காலத்தில் கடைபிடித்த கலப்பு பொருளாதாரம், சோசலிச கொள்கைகள், பெரும் தொழிற்சாலைகள் ஆகியவை அனைத்தும் இன்றைய கால கண்ணோட்டத்துடன் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. உண்மையில் நேரு சோவியத்தின் சோசலிச கொள்கைகளை முழுமையாக அப்படியே அமல்படுத்தினாரா என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கியமான நோக்கம். 

சோவியத் யூனியன்தான் சோசலிச தலைமையகம். அங்கு 1917ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சி, அதற்குப் பிறகு அங்கிருந்து உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் பல்வேறு நாடுகளில் புரட்சிக்கான காரணங்களை தேடக் காரணமாக அமைந்தன. சோசலிசம் என்பது நாடுகளுக்கு ஏற்றது போல பல்வேறு வடிவங்களுக்கு மாற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. உதாரணத்திற்கு சீனா. அங்கும் சோசலிச கொள்கைகள் உள்ளன. முதலாளித்துவத்தை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கு சர்வாதிகாரம் செய்து வருகிறது. 

ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை அவர் பெரிதாக முக்கியமாக நினைக்கவில்லை. 1926-27 காலகட்டத்தில் ஐரோப்பாவில் பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருந்த சோவியத் கம்யூனிஸ்ட்கள் பற்றி , நான் தனிப்பட்ட ரீதியாக ரஷ்யர்கள் மட்டுமல்ல வேறு யாரும் பிறரது விஷயங்களில் தலையிடுவதை விரும்பவில்லை என்று கூறினார். இந்திய - சோவியத் நட்பு சிறப்பானதாக இருந்தது நேருவின் காலகட்டத்தில் என்பதை தனியாக கூறவேண்டியதில்லை. 

ரஷ்ய அதிபர் லெனின் மீது மரியாதை கொண்டவர் நேரு என்றாலும் தனது மனதிற்கு சரியென்று தோன்றாத விஷயங்களை வெளியே சொல்லவும் தயங்கியதில்லை. இந்த வகையில் மதரீதியான மனநிலை, தொழிலாளர்களுக்கு அதிக வாக்குரிமை, அரசியல் கொள்கையில் காட்டும் தீவிரம், சர்வாதிகாரம், கம்யூனிச பாதிரியார் தனம், தனிப்பட்ட மனிதர்கள் அல்லாது குழுவிற்கான முன்னுரிமை ஆகியவற்றை நேரு சுட்டிக்காட்டினார். 

லெனின் இறந்தபோதும் கூட அவர் இறந்தபோது கூட சர்வாதிகாரியாகவே இருந்தார் என நேரு கூறினார். சோவியத் யூனியனில் இருந்த சிறை அமைப்புகளை நேரு பாராட்டினார். ஒருநாளைக்கு பனிரெண்டு மணிநேரம் உழைக்கும் இந்தியர்கள், இதைவிட சிறிய அறையில்தான் படுத்து தூங்குகிறார்கள். அதை விட சிறைகள் வசதியாக அமைந்துள்ளன என்று கூறினார். கைதிகளை திருத்தி நல்வழிப்படுத்தும் கொள்கைகளையும் மனதில் கொண்டுதான் நேரு இதுபோல கூறினார். 

இந்தியாவை திட்டமிடுவதற்கான பணிகளை செய்ய நேரு சோவியத்தின் சோசலிச கொள்கைகளை கையில் எடுத்தார். அவருக்கு கம்யூனிஸ்ட்டுகளை விட பிரிட்டிஷ் ஃபேபியன் சங்கத்தினரைப் பிடித்திருந்தது. இவர்கள் ஜனநாயக சோசலிசவாதிகள். இதில் ஹென்றி டி செயின்ட் சைமன், லூயிஸ் பிளாங்க் ஆகியோரை முன்மாதிரியாக நேரு கொண்டிருந்தார். சோவியத்தின் புரட்சி உருவாகுவதற்கு முன்னரே, ஃபேபியன் சங்க முன்மாதிரிகளின் மீது நேசம் கொண்டிருந்தவர் நேரு. தனது பல்வேறு நாட்டின் நிர்வாண திட்டமிடல்களை, ஃபேபியன் சங்க கொள்கைகளின் படியே அமைத்தார். 1927 -30களில் தான் நேருவுக்கு சோவியத் யூனியனின் கொள்கைகளைப் படித்து அதன் மீது ஈர்ப்பு வருகிறது. 

சோவியத்தின் சோசலிச கொள்கைகள் மூலம் கிராம பொருளாதாரத்தை உயர்த்தியதும், தொழிற்சாலைகளை உருவாக்கி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்ததையும் நேரு ஆதரித்தார். ஆனால் இதற்காக மக்களை கட்டாயப்படுத்தியதையும்,  சர்வாதிகார அரசையும், அதற்கான மோசமான விளைவுகளையும் அவர் கருத்தில் கொண்டார். இதனால் தான் அவர் சோசலிச கொள்கைகளை எடுத்துக்கொண்டாலும் அவர் அதை பல்வேறு நாடுகளின் அனுபவங்களிலிருந்து செயல்பாட்டிலிருந்து பெற்றார். இப்படித்தான் வெளியுறவுக் கொள்கையை அணிசேரா நாடுகள் என உருவாக்கினார். இடது, வலது என கூட்டு சேர்ந்த நாடுகள் பிற நாடுகளை விமர்சிப்பதை விரும்பலாம். ஆனால் நேரு அதுபோன்று எப்போதும் செயல்பட்டதில்லை. தனது முடிவுகளை ரஷ்யாவின் நட்போ, சோசலிச கொள்கைகளோ பாதிக்கவிட்டதில்லை. அமெரிக்காவை விட ரஷ்யா இந்தியாவுக்கு எப்போதும் நெருங்கிய நட்பு நாடாகவே இருந்துள்ளது. அரசுபூர்வமான உதவிகள், ராணுவ தளவாடங்கள், பொருளாதார உதவிகளை எப்போதுமே வழங்கி வந்துள்ளது. 

புவியியியல்ரீதியாக நேரு, ரஷ்யாவின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டிருக்கிறார். இந்திய துணைக்கண்டத்தில் ரஷ்யாவின் முக்கியத்துவம் மூலம் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியும். மேலும் கொரியா, சீனா ஆகியவற்றையும் மனதில் கொண்டே ரஷ்யாவின் இருப்பை முக்கியமாக நினைத்துள்ளது. ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் எதிரான முக்கியமான எதிரி முதலாளித்துவம் என்பதை நேரு அறிந்தேயிருந்தார். 



தி இந்து

மாதவன் கே பாலட் எழுதிய கட்டுரையைத் தழுவியது. 


கருத்துகள்