விற்பனையில் சாதனை படைக்கும் கணினி பிராண்டுகள்! - கோவிட் -19 கால முன்னேற்றம் இதுதான்












star trek computer GIF








அதிகரிக்கும் கணினி மவுசு!

கோவிட் -19 நோய்த்தொற்று மனிதர்களுக்கும், பல்வேறு தொழில்துறைகளுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. அதேசமயம் இணையம் சார்ந்த புதிய தலைமுறை நிறுவனங்களுக்கு அவை புதிய வர்த்தக வாய்ப்புகளையும் தந்துள்ளது.

தற்போது உலகம் முழுக்க பள்ளி, கல்லூரி கல்வி என்பது இணையம் வழியாகவே நடந்து வருகிறது. இதன் காரணமாக புதிய கணினிகள், வெப் கேமரா, ஸ்பீக்கர்கள், ஹெட்போன்கள், பிரின்டர்கள், இணையவசதிக்கான கருவிகள் வேகமாக விற்று வருகின்றன. இதன் காரணமாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களிலும் வெளிநாட்டு முதலீடுகள் கொட்டத் தொடங்கியுள்ளன.

மாணவர்களுக்கு மடிக்கணினிகள் தேவை என்றால் பல்வேறு தகவல் தொடர்பு பணியாளர்களுக்கு வீட்டிலிருந்தே பணி செய்ய, மடிக்கணினிகள் நிறைய தேவைப்படுகின்றன. ஐரோப்பாவில் இப்போது மடிக்கணினிகளுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. ஆனால் அதை நிறைவு செய்யும் வகையில் உற்பத்தி இல்லை என்பதுதான் உண்மை. ஐடிசி என்ற ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளரான மாலினி பால் இதுபற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான கணினி பாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு வந்தன. கோவிட் – 19 பாதிப்பால் அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்டெல் போன்ற நிறுவனங்களே தள்ளாடி வருகின்றன. இதில் ஆப்பிள் நிறுவனமும் விற்பனை 20 சதவீதம் வீழ்ந்து தடுமாறி வருகிறது. சீனாவில் மேசைக்கணினிகள் தயாரிப்பு சரிந்தாலும் மடிக்கணினி உற்பத்தி பெரியளவு வீழ்ச்சியாகவில்லை. ஆனாலும் இதனை வாங்குவதே அடுத்த காலாண்டில் கடினமாகவே இருக்கும்.

என்ன காரணம்? பெருந்தொற்று காரணமாக பல லட்சம் பேர் வேலையிழக்கப் போகிறார்கள். இதன் காரணமாக, கணினிகள் சந்தையில் கிடைத்தாலும் அதனை வாங்கும் அளவுக்கு யாரிடமும் பணம் இருக்காது என்கிறார் கனாலிஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இஷான் தத்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்