வேட்பாளர்களின் தகவல்களை தவறு என்றால் வழக்கு போடுங்கள்! - தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா








Silhouette, Balloon, Promise, Election Promises, Man








தேர்தல் ஆணையர், சுஷில் சந்திரா

இந்தியன் எக்ஸ்பிரஸ்

ரித்திகா சோப்ரா

வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய விவரங்கள் தவறு என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று கூறியிருக்கிறீர்களே?

நாட்டிலுள்ள ஜனநாயக முறைப்படி ஒருவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும் விவரங்கள் உண்மையாக இருக்கவேண்டும். அவர் தவறான, பொய்யான விவரங்களை அளித்துள்ளார் என்று எங்களுக்கு தெரிய வந்து விசாரணை செய்து உறுதி செய்வோம். தொடர்புடைய அரசியல் கட்சிக்கும் அறிவிப்போம். பின்னர் வழக்கு தொடர்வோம். குற்றம் சாட்டப்பட்டவர் தான் தவறு செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை அளித்தால் அதனை ஏற்போம்.

அப்படியெனில் நீங்கள் நேரடியாக புகார், அதில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு தொடரமாட்டீர்கள்?

உண்மையில் வேட்பாளர் தனது விவரங்களை போலியாக உருவாக்கி ஆணையத்தை ஏமாற்ற முயல்வது உறுதியானால், களப்பணி அலுவலர் காவல்துறையில் புகாரை பதிவார். பின்னர், நீதிமன்றத்திற்கு இதனை எடுத்துச்செல்வோம். இதுமட்டுமன்றி, தனிநபராக கூட ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அதனை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம்.

ஜம்மு காஷ்மீரில் டீலிமிட்டேஷன் கமிஷனில் நியமன அதிகாரியாக உள்ளீர்கள். அங்கு பணிகள் எப்படி நடந்து வருகின்றன?

இந்த ஆண்டிற்குள் நாங்கள் செய்து வரும் பணிகள் நிறைவுற்று விடும். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன பிரகாஷ் தேசாயின் தலைமையில் இதற்கான மூன்று சந்திப்புகள் நடந்துள்ளன. நாங்கள் 2011ஆம் ஆண்டு நடைபெற்றி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை வைத்து பஞ்சாயத்து, தாலுகா விவரங்களை சோதித்து வருகிறோம்.

பெருந்தொற்று பிரச்னை பீகார் தேர்தலை பாதிக்குமா?

பாதிக்க கூடாது என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். பீகாரில் 72 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. மையத்திற்கு ஆயிரத்தி அறுநூறு பேர் வாக்களிப்பார்கள். இதில் ஆயிரம் பேர் மட்டும் வாக்களிக்கும்படி செய்ய முயல்கிறோம். வாக்கு மையங்களின் எண்ணிக்கையை 30 ஆயிரமாக அதிகரிக்க உள்ளோம். அடுத்து, அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் வழியாக வாக்குகளை செலுத்த சட்ட அமைச்சகத்திடம் அனுமதி கேட்டோம். அவர்களும் அனுமதி வழங்கிவிட்டார்கள்.

பிரசாரங்களை எப்படி இருக்கவேண்டுமென வலியுறுத்தி உள்ளீர்கள்?

கட்சிகள் விர்ச்சுவல் முறையில் பேரணிகளை நடத்தலாம். அடுத்து, எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை சுகாதாரத்துறை கூறியுள்ளது. தேர்தல் நெருங்கும்போது நிறைய விதிகள் மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தியன் எக்ஸ்பிரஸ்


கருத்துகள்