கொள்ளைநோய் கோவிட் -19 விதிகள் - சட்டத்தை கடைபிடிக்காத மத்திய அரசு
newslaundry |
ஸ்பானிஷ் காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் முதல் ஏராளமான கொள்ளை நோய்களை உலகம் சந்தித்துள்ளது. இதற்கான விதிகளும் இயற்றப்பட்டு அச்சமயங்களில் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவில் பொதுவாக இப்பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பில்லை. காரணம் காய்ச்சலுக்கு சாகுபவர்களை விட கஞ்சிக்கு செத்தவர்கள் இங்கு அதிகம். அந்தளவு சோற்றுக்காக கஷ்டப்பட்டவர்கள். பசி, பட்டினி பாதிப்பு இந்தியாவில் அதிகம். அதற்காக நோய்களே வரவில்லை என்று கூற முடியாது. அதன் பாதிப்பு மிகவும் குறைவு.
பிரிட்டிஷாரின் ஆட்சியில் 1897ஆம் ஆண்டு தொற்றுநோய் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை பிரித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது நடைமுறைக்கு வந்தது. 1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சா பாதிப்பு ஏற்பட்டு பல்லாயிரம் மக்கள் இறந்தபோது இக்கட்டுப்பாடுகளை கடைபிடித்தனர்.
இன்று இதில் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும், 123 ஆண்டுகால சட்டத்தை பெரும்பாலான மாநிலங்கள் அப்படியே கடைபிடித்து வருகின்றன.
பொதுமக்களுக்கான சுகாதாரத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு புதிய விதிகள் இயற்றப்பட்டன. இதில் நோய்களின் பாதிப்பு, அவர்களுக்கான சிகிச்சை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை வரும். இதில் மாநிலங்களை விட மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் கொடுப்பவை.
இந்தியாவில் தனிநபருக்கான சட்டங்களை எதற்கு தனியாக சட்டமென்று அப்படியே நிறுவனங்களுக்கும் பொருத்திவிடுவது வழக்கம். இம்முறையில் கொள்ளைநோய் கோவிட் -19 யை அப்படியே தேசியப் பேரிடர் என மத்திய அரசு அறிவித்துவிட்டது. இதனால் 2005ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய பேரிடர் சட்டத்தை அவசர நிலைமையாக கருதி கடைபிடித்தால் வேலை முடிந்தது. உயிரியல் ரீதியான வைரஸ், பாக்டீரியா பிரச்னைகளுக்கான சட்டம் இல்லாமல் இல்லை. 2008ஆம் ஆண்டு இதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டு பத்திரமாக உள்ளன.
இதற்கான பயிற்சிகளை 2018ஆம் ஆண்டு எபோலா பிற நாடுகளில் பரவியபோது மத்திய அரசு பீகாரின் பாட்னாவில் செய்தது. அங்குள்ள விமானநிலையத்தில் இதற்கான பயிற்சிகளை செய்ததோடு சரி, அப்புறம் இந்தியர்களின் விட்டேத்தியான மனநிலையை அப்படியே மத்திய அரசு கடைபிடித்தது. அதனால்தான் திடீரென நோய்த்தொற்று பரவும்போது, சங்கத்தை உடனே கலைங்கடா என்று சொல்லி மத்திய அரசு கடையை உடனே அடைத்து, உடைத்த சோடாவிற்காக மக்களை அலைய வைக்கிறது.