சோயா பால் குடித்தால் ஹார்மோன் மாறுமா?








மிஸ்டர் ரோனி

சோயாபீன்ஸ் பயன்படுத்தினால் பெண்களைப் போன்ற உடல் அமைப்பு ஆண்களுக்கு வருமா?

பசுவிலிருந்து பெறும் பாலுக்கு மாற்றாக சோயா பாலை ஆரோக்கிய வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். சோயா பாலை அதிகம் பயன்படுத்தினால் உடலில் ஹார்மோன் மாற்றம் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் நாம் நினைப்பது போல பெண்களுக்கான மார்பகங்கள் ஆண்களுக்கு உருவாகி விடாது. உணவுதான் உடலை உருவாக்குகிறது. எனவே அது சோயா உணவுகளுக்கும் பொருந்தும். பிற உணவுகளை விட அதிக புரதம் கொண்டது சோயா.

நாம் சாதாரணமாக சமைத்து சாப்பிடும் பீன்ஸ் எடமாமே என்று ஜப்பானில் அழைக்கப்படுகிறது. இது முதிர்ச்சியடையாத பீன்ஸ். முதிர்ச்சி அடைந்த பீன்ஸ் மூலம்தான் டோபு, பால், சாஸ் உள்ளிட்டவை பெறப்படுகிறது. முதிர்ச்சியடைந்த பீன்ஸ் மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும்.

பழமையான முறையில் தயாரிக்கப்படும் சோயா சாஸில் ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம். இன்று நவீன முறையில் பல படிமுறைகளைத் தவிர்த்துவிட்டு சந்தைக்காக வேகமாக தயாரிக்கின்றனர். இதனால் அவற்றில் சத்துகள் குறைவு. அடிப்படையான முறையில் தயாரிக்கப்படும் சோயா சாஸிலுள்ள ஆன்டி ஆக்சிடன்களின் அளவு சிவப்பு ஒயினை விட அதிகம்.

பசுவின் பாலுக்கு சிறந்த மாற்றான சோயா பாலில் அடிப்படையான ஒன்பது அமினோ அமிலங்கள் உள்ளன. இதனால் இறைச்சி, பாலுக்கு மாற்றாக சோயா பால், டோபு ஆகியவற்றை நீங்கள் உண்ணலாம். வதந்திகளை மறந்துவிடுங்கள். வாழ்க்கையை அனுபவியுங்கள்.

நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்