சாதனை பெண்கள் - தமிழ்நாடு
pixabay |
பெண்கள் தினம்!
போராட்டம்
தொடங்கி ரொட்டிசியஸில் வெஜ் பப்ஸ் வாங்கித் தருவதில் இருந்து பெண்கள் எந்த விஷயத்திலும்
கொண்டாட்ட மனநிலையில்தான் இருக்கிறார்கள். அதேசமயம் தான் எடுத்துக்கொண்ட பல்வேறு பொறுப்புகளையும்
செவ்வனே செய்து தங்களை நிரூபித்து வருகிறார்கள். அப்படி தங்களை மட்டுமல்லாது பிறரையும்
மாற்றும் வண்ணம் சாதித்த பெண்களைப் பற்றிய செய்திகளை இங்கே பார்க்கலாம்.
சுத்தம்
என்பது நமக்கு...
ஸ்ரீனிவாசபுரம்
ஏராளமான குப்பைகளையோடு கவலைதரும் ஆபத்தான நோய்களை எதிர்நோக்கி இருந்தது. ஆனால் இன்று
அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டார்கள். அங்குள்ள வால்மீகிபுரம் பெண்கள்தான் இந்த சாதனைக்கு
சொந்தக்காரர்கள். திடக்கழிவுகளை ஒழுங்கு செய்ய தனிக்குழு அமைத்து இன்று அங்குள்ள
2500 வீடுகளிலிருந்தும் குப்பைகளைப் பெற்று அதனை முறையாக மறுசுழற்சிக்கு அனுப்பி வருகிறார்கள்.
பதினான்கு
பேர் கொண்ட குழு குப்பைகள் சரியாக மறுசுழற்சிக்கு செல்கிறதா என்று கவனித்து வருகின்றனர்.
முதலில் குப்பைகளை நாங்களே எங்களது தேவைக்கு உரமாக செடிகளுக்கு பயன்படுத்தி வந்தோம்.
இதில் வெற்றி பெற்றபிறகு மக்களுக்கும் இதைப்பற்றி கூறியதோடு, குப்பைகளை பிரிக்காமல்
எறிவதை அவமானமான செயலாக நினைக்க வைத்தோம் என்கிறார் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ஜெயந்தி.
வாசிப்போம்
வளர்வோம்
சோழிங்கநல்லூரில்
2015ஆம் ஆண்டு மழைவெள்ளம் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அங்கு ஏராளமான பொருட்கள் குப்பைகளாக
தேங்கின. அவற்றை சுத்தப்படுத்தி இன்று இலவச நூலகத்திற்கு பயன்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார்கள்
அருணா வெங்கடேஷ்வரன், சுப்ரியா சந்தானம். இருவரும் இணைந்து சோழிங்கநல்லூரில் உள்ள சென்ட்ரல்
பார்க்கில் நூலகத்தை உருவாக்கியுள்ளனர்.
நாங்கள்
உருவாக்கியுள்ள இந்த நூலகம் எங்கள் குடியிருப்புகளுக்கானது. இதில் சிறுவர்களை படிக்க
ஊக்குவிக்கிறோம். இங்குள்ள தாத்தா, பாட்டிகளை நாங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்ல அழைத்து
வருகிறோம். இதன்மூலம் குழந்தைகளுக்கு பாடம் தாண்டிய அறிவைக் கற்றுத்தர முடியும் என்கிறார்
சுப்ரியா.
கொருக்குப்பேட்டை
கடவுள்கள்
தொண்ணூறுகளில்
அருணோதயம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உருவானது. இந்நிறுவனம் அப்பகுதியில் உள்ள
தொழிற்சாலைகளுக்கு சென்று வந்து குழந்தை தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகளைச் செய்து
வந்தது. இந்த அமைப்பு ரோஜா தன்னார்வக்குழு என்ற அமைப்பை தொடங்கி அங்குள்ள பெண்களுக்கு
சிறு கடன்களை வழங்கி குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தை திருமணங்களையும் ஒழித்து வருகிறது.
இந்த சுய உதவிக்குழுவில் தற்போது இருபது பெண்கள் உள்ளனர். இதில் கல்வி கற்காத பெண்களுக்கும்
கல்வி கற்றுத்தரும் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அங்கு வாழும் பெண்கள் சார்ந்த
பல்வேறு பிரச்னைகளை இக்குழு தீர்த்து வைத்துள்ளது. இந்த சுய உதவிக்குழுவின் தலைவியாக
இருப்பவர் எம்.லோகநாயகி.
நன்றி - டைம்ஸ் - காமினி மத்தாய், சரண்யா சக்ரபாணி