கொரோனாவுக்கு சானிடைசர் பாதுகாப்பு தருமா?





Joking Jimmy Fallon GIF by The Tonight Show Starring Jimmy Fallon




டாக்டர் எக்ஸ்
இன்று கைகளைக் கழுவுங்கள், அதுவும் சோப்பு போட்டுக் கழுவுங்கள் என்று அரசு முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அக்கறையாக உள்ளன. உண்மையில் கைகழுவினால் வைரஸ் நம் கையை விட்டுவிடுமா என்பது சந்தேகமே. ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை ஹோல்சேல் ரேட்டில் அனைவரும் வாங்கி வருகிறார்கள். அனைத்து இடங்களிலும் சானிடைசர்களை அழுத்தும் இஸ்க் இஸ்க் ஒலிதான் கேட்கிறது. எங்கள் அலுவலக வளாகத்திலுள்ள மருந்தகங்களில் மாஸ்க் சேல்ஸ் விண்ணுக்கு பறக்கிறது. அப்படியும் விற்பனைக்கு மாஸ்குகள் சரிவர கிடைப்பதில்லை. இதுபற்றி சில கேள்விகள் நமக்கு வந்திருக்கும். அதற்கான பதில்கள் இதோ...

சானிடைசரில் எதற்கு ஆல்கஹால் வாசம் வீசுகிறது?

இதை கடும் நெடி என்று கூட சொல்லலாம். ஆல்கஹால் நுண்ணுயிரிகளின் உடலிலுள்ள புரத பாதுகாப்பை உடைக்கிறது. இதன்விளைவாக அதன் செயல்பாடு குன்றுகிறது. இதனால்தான் அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் எதிரான பொருட்களில் ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. இப்படி புரத அடுக்கை உடைப்பதை டிநேச்சுரேஷன் என்கிறார்கள். சில நுண்ணுயிரிகள் வெப்பம் அதிகரித்தால் செயல்திறன் குன்றி இறக்கும். முட்டைகளை வேக வைத்து சாப்பிடச்சொல்கிறார்களே அது இதற்குத்தான்.

சானிடைசரில் நூறுசதவீதம் ஆல்கஹால் பயன்படுத்தினால் கிருமிகள் வேகமாக சாகுமே?

உங்கள் நோக்கம் ஓகே. ஆனால் ஆவேசம் தவறு. சானிடைசரில் ஆல்கஹாலோடு நீரும் இருக்கவேண்டும். அதுதான் சரியான கலவை. வெப்ப காலத்தில் நூறு சதவீத ஆல்கஹாலைப் பயன்படுத்தக்கூடாது. வேகமாக ஆவியாகிவிடும். பனிக்காலத்தில் நீங்கள் ஆல்கஹாலைப் பயன்படுத்தலாம். அதாவது ஈரப்பதம் அப்போது குறைவாக இருக்கும். நுண்ணுயிரிகளை அழிக்க ஆல்கஹாலுக்கும் நீருக்கும் வாய்ப்பு கிடைக்கும். நீரும் ஆல்கஹாலும் சரியாக கலந்திருக்கும்போதுதான் நுண்ணுயிரிகளை சரியாக முழுமையாக செயலிழக்க வைத்து அழிக்க முடியும்.

வீட்டிலேயே சானிடைசர்களை தயாரித்து பயன்படுத்தலாமா?

இணையத்தில் ஏதோ படித்துவிட்டு இப்படி வம்பானந்தா கேள்விகளைக் கேட்கிறீர்கள். நிச்சயமாக தவறு. வோட்காவை கிருமிநாசினி போல இன்று சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதில் ஆல்கஹாலின் அளவு 40 சதவீதம்தான். கிருமிகளைக் கொல்ல 60 சதவீதம் ஆல்கஹால் தேவை.

சானிடைசர்களுக்கு காலாவதி நாட்கள் உண்டா?

நம்மைப்போலத்தான் பொருட்களும். என்னதான் துடிப்பாக வேலை செய்தாலும் நாற்பது வயதுக்கு மேலே என்றால், அடுத்த ஆப்சன் பார்க்கலாமே என ஹெச் ஆர் யோசிப்பார். சானிடைசர்களும் அப்படித்தான். அப்படியே ஷெல்பில் வைத்திருந்தாலும் ஆல்கஹால் விரைவில் ஆவியாகிவிடும். அப்புறம் அதை திறக்காமல் வைத்திருந்து என்ன புண்ணியம்மழ

நன்றி - ஈகோவாட்ச்