தொல் வரலாற்றுப் பெண்களின் பங்களிப்பை, மேற்குலகின் ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்! - எழுத்தாளர் ஏஞ்சலான சைனி
எழுத்தாளர் ஏஞ்சலா சைனி |
ஆண்களின்
மேலாதிக்கம் எப்போது தொடங்கியிருக்கும்? விவசாயம்
செய்யத் தொடங்கியபோதா அல்லது தனிச்சொத்துடைமை உருவானபோதா, புதிய மாகாணங்கள் உருவானபோதா,
அடிமை முறை தொடங்கியபோதா இப்படி நிறைய கேள்விகளை மானுடவியலாளர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொண்டு
அதற்கான பதில்களை தேடுகிறார்கள். தேடலை விளக்கி ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார்கள்.
அந்த வகையில்
ஆய்வாளர் ஏஞ்சலா சைனி, 'தி பேட்ரியாச் – ஹவ் மேன் கேன் டூ ரூல்' என்ற நூலை எழுதியிருக்கிறார்.
பாலின பாகுபாடு, ஆண் மேலாதிக்கம் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.
மேலும், மரபணு, தொல்பொருளாய்வு ஆகியவை தொடர்பாக எழுந்த யூகங்களுக்கும் பதில் கூறியுள்ளார்.
மேலாதிக்கம் பற்றி ஆராய்ச்சி செய்யத்
தூண்டிய காரணங்கள் என்ன?
கடந்த நாற்பது
ஆண்டுகளாக மேலாதிக்கம் கொண்ட சமூகம் பற்றி மிக குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். இது
எனக்குஆச்சரியமான தகவலாக இருந்தது. பெண்ணிய இலக்கியங்களில், தொடர்ந்து ஆண் மேலாதிக்கம் பற்றிய
அழுத்தங்களை பதிவுசெய்திருந்தனர். இதைப் பற்றிய வேறுபாடுகளை யோசித்தேன்.
எனவே, நான் மேலாதிக்கம் பற்றிய முழுமையான வரலாற்றை
முதன்முறையாக மக்களுக்கு நூல் வழியாக வழங்க முடிவு செய்தேன். நியோலித்திக் காலம் தொடங்கி, மக்களின்
குடியேற்றம் 9 ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. எனவே, இந்த காலத்தில்தான் ஆண்களின் மேலாதிக்கம்
தொடங்கி வந்திருக்கவேண்டும். வரலாறு, அகழாய்வு, அறிவியல் ஆகியவற்றின் மூலம் முன்னெப்போதையும்
விட துல்லியமாக தகவல்களை திரட்ட முடிந்த காரணத்தால் தொன்மை கால வரலாற்றை தெளிவாக விளக்க
முடிந்தது.
ஆண்களின் மேலாதிக்கம் பற்றிய மையப்பொருளை
ஏராளமான அகழாய்வாளர்கள், ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். ஆனால், இதில் பாகுபாடான முடிவுகளே
கிடைத்துள்ளன. இந்த நிலையில் நீங்கள் பாலின பாகுபாடு பற்றிய முடிவுகளை எப்படி அணுகி தீர்மானித்து கடந்து வந்தீர்கள்?
மேற்கு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஆண்களின் மேலாதிக்கம் என்பது சமூகத்தில் இயல்பானது, தெய்வீகத்தன்மை கொண்டது என்று கருதினார்கள். அப்படி ஆணாதிக்கத்தோடு இருந்தால்தான் சமூகம் நிலையாக வாழ முடியும் என நம்பினர்.
அதை பல நூற்றாண்டுகளாக தங்களின் ஆய்வு நூல்களில் எழுதி வந்தனர். இதன் விளைவாக அகழாய்வில் கிடைத்த உண்மையான ஆதாரங்கள் அனைத்துமே மாற்றப்பட்டன. எடுத்துக்காட்டாக, ஆண்டிஸ் மலைத்தொடரில் 9 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. அவளின் உடலுடன் வேட்டையாடுவதற்கான பொருட்களும் இருந்தன. ஆனால், சில ஆய்வாளர்கள் இந்த பெண்ணை வேட்டையாடுபவர் என ஏற்றுக்கொள்ளவே இல்லை.
பெண்கள் வேட்டையாடுபவர்களாக, இனக்குழுவை வழிநடத்துபவர்களாக,
போரில் படைகளை வழிநடத்துபவர்களாக இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தாலும் கூட
அதை வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோன்ற ஆதாரங்களை, ஆய்வாளர்கள் விதிவிலக்கான
ஒன்றாகவே பார்க்கிறார்கள். எனவே, இதுபோன்ற கோணத்தில் பாலின பிரிவுகளை வரலாற்றில் ஆய்வு
செய்து காண்பது தவறானது.
உங்களின் நூல் தொடங்கும்போதே காளியின்
பிரார்த்தனையோடு தொடங்குகிறது. இது, நவீன கால பெண்களைப் பற்றிய கருத்துகளுக்கு சவால்
விடும் வகையில் உள்ளது. ஆசிய துணைக்கண்டத்தில் ஆண்களின் மேலாதிக்கம் எப்போது தொடங்கியது?
அதுபற்றிய
குறைவான ஆதாரங்கள்தான் நம்மிடம் உள்ளது என்பதால், உறுதியாக கூற முடியாது. ரிக் வேதத்தில்
ஆண் பிள்ளைகளுக்கான மேலதிக முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளதால், அதுவே அன்றைய சமூக ஆண் மேலாதிக்கத்தை எடுத்துக்காட்டுவதாக
உள்ளது.
தெற்காசியாவில்
சற்று மாறுபட்ட நிலைமை நிலவியுள்ளது. கேரளாவின் நாயர்கள், மேகாலயாவின் காசி ஆகிய இனக்குழுக்களில்
தாய் வழி சமூகம் உள்ளது. பெண்களின் சுதந்திரமும் கலாசாரத்தைப் பொறுத்து நிறைய மாற்றங்களைப்
பெற்றுள்ளது.
வீடு தொடங்கி
சமூக இயக்கங்கள் வரை பாலினம் என்பது பன்மைத்தன்மை கொண்டதாக உள்ளது. எனவேதான். இந்தியாவில்
பல்வேறு விதமாக தன்மையில், வாழ்க்கையைக் கொண்டவர்களாக மக்கள் உள்ளனர். அதைப்பற்றி நூலில்
விளக்கி எழுதியுள்ளேன்.
சோசலிச ரஷ்யாவில் பெண்களுக்கான வாய்ப்பு
வழங்கப்பட்டதாக கூறுகிறீர்கள். அந்நாட்டிடமிருந்து நாம் பெறவேண்டிய பாடங்கள் என்னென்ன?
இருபதாம்
நூற்றாண்டில் ஆண்களின் மேலாதிக்கத்தை உடைக்கும் விதமான நவீன நடவடிக்கைகள் சோசலிச ரஷ்யாவில்
தொடங்கின. போல்ஷ்விக் புரட்சி காரணமாக, சில தலைமுறைகளிலேயே சமூகத்தில் அடிப்படையான
நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.
1920ஆம் ஆ ண்டு பெண்கள் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு
செய்துகொள்ளலாம் என சட்டம் கொண்டு வந்த நாடு ரஷ்யா. அங்கு, ஆண்களைப் போலவே பெண்கள் படிக்கவும், தொழில் நிறுவனங்களில் வேலை செய்யவும்
வாய்ப்பு கிடைத்தது. மேலும், பெண்கள் விவாகரத்து பெறுவதும் கூட எளிதானது. வீட்டுவேலை, பிள்ளைகளை பராமரிப்பது,
துணி துவைப்பது, சமையல் செய்வது ஆகிய செயல்களில் ஆண், பெண் ஆகியோரின் பங்களிப்பு மாற்றம்
பெற்றன.
அதேசமயம் சோசலிச அரசு மாற்றங்களை ஜனநாயகப்பூர்வமாக செய்யாமல் மக்களை கட்டாயப்படுத்தி பலப் பிரயோகத்தில் செய்ய வைத்ததை மறுக்க
முடியாது. ரஷ்யாவிடமிருந்து சமூகத்தில் பாலின பாகுபாட்டை அகற்றவேண்டும் என்ற பாடத்தைக் கற்கலாம்.
இதையும் நடைமுறையில் ஜனநாயகப்பூர்வமாக செய்யவேண்டியது அவசியம்.
கருக்கலைப்பு உரிமைகளுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் நடைபெறும்
வழக்குகள், மேலாதிக்கத்திற்காக முயலும் தாலிபான்கள் சமூகத்தில் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகின்றனர்.
இதை எப்படி பார்க்கிறீர்கள்?
மனித சமூகத்தில்
பல்வேறு கருத்தியல்களைக் கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள். எனவே, சமூக முரண்பாடுகள் எழுவது
இயல்பானதுதான். சிலருக்கு சில வகையான மேலாதிக்க முறைகள் ஏற்புடையதாக தோன்றும். எனவே
அதை ஆதரிக்கிறார்கள். ஆனால் நாம் பாலின பாகுபாடற்ற சமூகத்தை உருவாக்குவதில் ஆற்றலை
செலவிட வேண்டும். தாராளவாதிகளே இந்த செயல்பாட்டில்
வெல்வார்கள. ஆனால், நாம் இந்த செயல்பாட்டில் எளிதாக மனநிறைவு கொண்டுவிடக்கூடாது.
பாலின பாகுபாட்டிற்கான போராட்டம் என்பது
எப்போது நிறைவுபெறும் என நினைக்கிறீர்கள்?
உலகின் அனைத்து நாடுகளிலும் பாலின பாகுபாட்டிற்கு எதிரான சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். இந்த செயல்பாடு நிறைவேற நீண்டகாலம் ஆகும்.
உளவியல், கலாசார மாற்றங்களுக்கு அதிக காலம் தேவை. ஆண் பிள்ளைகளுக்கான முன்னுரிமை, பெண், கணவரின் பெற்றோருடன் வாழ்வது ஆகிய நிபந்தனைகள் பாலின பாகுபாடு காரணமாகவே உருவான வழக்கங்கள் ஆகும்.
வகுப்பு, சாதி பாகுபாடு என அனைத்துமே களையப்பட்ட நிலையில்தான் பாலின பாகுபாடற்ற
சமூகம் அமையும். குறிப்பிட்ட இனக்குழுவை மனிதர்களாக மதிக்கவேண்டியதில்லை என்று கூறப்படும்வரை,
நாம் அனைவருமே மனிதர்களாக மதிக்கப்பட மாட்டோம். பாகுபாடு பற்றி இப்படித்தான் கூறவேண்டியுள்ளது.
ஸ்னேகா புரா
டைம்ஸ் ஆஃப்
இந்தியா ஏப்ரல் 30,2023
----------------------------------------------------------
The
patriarch:How Men Came to Rule
Angela
saini
கருத்துகள்
கருத்துரையிடுக