கழுத்தை நெரித்தபடியே உடலுறவு கொள்வது பாலியல் வன்முறை - சில பெண்களின் அனுபவங்கள்...
தற்போது,
இணையம் பெரும் சக்தியுடன் இயங்கி வருகிறது. இதன் வழியாக மக்கள் ஆபாச படங்கள் பார்ப்பது
சகஜமாகிவிட்டது. உண்மையாக ஒரு பெண்ணுடன் நேரடியாக உடலுறவு என்ற நிலையை சாதிக்கும் முன்னரே,
ஆண் கற்பனையில் பலநூறுமணி நேரம், உடலுறவு கொண்டுவிடுகிறார்.
இந்த அதீத நிலையை ஆபாச படங்கள் ஆதரிக்கின்றன. ஊக்கம் கொடுக்கின்றன.
ஆபாச படங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கான கண்ணோட்டத்தில்
உருவாக்கப்படுகின்றன. இதனால், அதில் ஆண்களின் முகம் காட்டப்படாவிட்டாலும் யாரும் பெரிதாக
கவலைப்படுவது கிடையாது. ஆனால் பெண்ணின் முகம் நிச்சயம் தேவை.
இப்படங்களில்
பெண் ஏறத்தாழ ஒரு பொருள் போலவே கையாளப்படுகிறாள். பலமணிநேரங்கள், இப்படி ஆபாச படங்களைப்
பார்க்கும் ஆண்கள் நிஜவாழ்க்கையில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்போது அவர்கள் செயல்கள்
பாலியல் வன்முறை கொண்டதாக மாறிவிடுகிறது. அதாவது, கழுத்தை நெரித்தல், முகத்தில் எச்சில்
துப்புதல், கைகளை துணி கயிறால் கட்டுவது என சில செயல்களை வேட்கையுடன் செய்கிறார்கள்.
உண்மையில் இதை பெண்கள் விரும்புகிறார்களா என்பதைப் பார்ப்போம்.
சாரா, 42
விளம்பரப்படத்துறை
அண்மையில்,
சில ஆண்டுகளாக அறிமுகமாகி பேசி வந்த ஆண் ஒருவனுடன் உடலுறவு கொண்டேன். அது முதல்முறை
அல்ல. ஒரு திருமண நிகழ்ச்சியில்தான் அவனை முதலில் பார்த்தேன். ஓரிரவு அவனுடன் செலவழித்தபிறகு,
எங்களுக்குள் நட்பு உருவானது.
அண்மையில்
நாங்கள் உடலுறவு கொண்டபோது, காதலனின் கை எனது தொண்டையை நெரிக்கத் தொடங்கியது. நான்
அவனிடம் இனி இப்படி தொண்டையை நெரிக்காதே என்று கூறியபிறகுதான், அவன் கையை எடுத்தான்.
உண்மையில் நான் இப்படி கூறியது, அவனுக்கு ஆச்சரியம் தந்திருக்க கூடும். மேலும், எங்கள்
உடலுறவில் அதுவரை செய்த செயல்களைப் பற்றி முழுக்க விவாதிக்க விரும்பவில்லை.
எனக்கு இந்த சம்பவத்தில் ஏற்பட்ட ஆச்சரியம் என்னவென்றால்,
உடலுறவின்போது ஒரு பெண்ணின் கழுத்தை நெரிப்பது என்பதை அவன் இயல்பாகவே எடுத்துக்கொண்டிருந்தான்.
அதாவது, உடலுறவு இன்பம் அனுபவிப்பதில் கழுத்தை நெரிப்பது என்பது ஒரு பகுதி என நம்பியிருந்தான்.
இன்று ஆபாசப்படங்களின் பரவலால் ஆண், பெண் என இரு பாலினத்தவருமே அதில் காட்டப்படும்
தவறான விஷயங்களை எளிதாக நம்பிவிடுகிறார்கள். இதனால்தான் பெண்களின் கழுத்தை நெரிப்பது
போன்ற சம்பவங்கள் நடந்தேறுகின்றன. என்னுடைய நாற்பது வயதின் தொடக்கத்தில் உடலுறவு பற்றிய
கருத்துகளில் சில பார்வைக் கோணங்கள் உருவாகத் தொடங்கியிருந்தன.
ஆண்கள் அப்போது,
கழிவறைகளில் ஸ்மார்ட்போன் ஒரு கையிலும் மற்றொரு கையில் ஆண் குறியைப் பிடித்துக் கொண்டு
சுய இன்பம் அனுபவித்து வந்தனர். என்னுடைய இருபது வயதில் ஆண்கள்,பெண்களின் கண்களை துணியால்
கட்டுவது, கைகளைக் கயிறால் கட்டுவது ஆகியவற்றை உடலுறவு செயல்களில் செய்து வந்தனர்.
ஆனால் எவரும் பெண்களின் கழுத்தை நெரித்துக்கொண்டு உடலுறவில் ஈடுபடவில்லை.
என்னுடைய
முப்பதுகளில் என் வயதை விட குறைந்த ஆண்களுடன் உடலுறவு கொண்டிருக்கிறேன். இந்த பத்தாண்டுகளில்
நான் உறவு கொண்டுள்ள ஆண்களின் அனுபவத்தில், அவர்களின் நினைவில் ஆபாச படங்களின் தாக்கம்
அதிகமாக உள்ளது.
அவர்கள் நேரடியாக
ஒரு பெண்ணிடம் உறவு கொள்வதை விட பார்ன்ஹப் போன்ற ஆபாச இணையதளங்களில் பல மணி நேரங்களை
செலவழிக்கின்றனர். இதன்மூலம், அவர்கள் உறவு கொள்ளும் பழக்கமும் இயற்கைக்கு விரோதமாக
மாறிவிட்டது. ஆண்கள், உணர்வுகள் நிரம்பியவர்கள் என்றாலும் அவர்கள் தங்கள் ஆண்மையின்
மேலாதிக்கத்தை நிறுவ பெண்களை முகத்தில் அறைவது, எச்சிலை முகத்தில் துப்புவது, கழுத்தை
நெரிப்பது ஆகியவற்றை செய்து வருகின்றனர்.
என்னை விட
இளமையான ஆண்கள் மட்டுமல்ல, என்னுடைய வயதொத்த ஆண் ஒருவர் கூட இந்த வகையில்தான் நடந்துகொண்டார்.
நான் அவருடன் சில ஆண்டுகளாக, டேட்டிங் செய்து வந்தேன். ஒருமுறை நாங்கள் இருவரும் உடலுறவு
கொண்டபோது நானே எதிர்பாராதவிதமாக என்னை முகத்தில் அறைந்தார்.
உடலுறவில் எனக்கு என்ன தேவை என்பதை நான் உணர்ந்துள்ளேன்.
அதை கேட்டுப் பெறுவது உண்டு. ஆனால் அதற்கென சில எல்லைகள் உள்ளன. பிடிஎஸ்எம் முறையில்
அடிப்பது, அறைவது என்ற செயல்பாடுகள் உள்ளன என்பதை அறிவேன். ஆனால், எனது கழுத்து அடிபட்டு
சிவந்து கன்றிப்போய் இருப்பதை உடலுறவு மகிழ்ச்சியின் மீறக்கூடாத எல்லையாக, வரம்பாகவே
பார்க்கிறேன்.
கைகளைக் கட்டுவது, தொண்டையில் கைகளை வைத்து கழுத்தை
நெரிப்பது, அழுத்துவது என்பதை அதிகாரத்தை வெளிக்காட்டுவதாக பார்க்கிறேன். இதை ஆண் பெண்
மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை, அடிமைப்படுத்தும் நிலை என கூறலாம். இருவரும் ஏற்கும்
நிலையில், உடலுறவில் இந்த நிலை மகிழ்ச்சி அளிக்க
கூடியது. என்னைப் பொறுத்தவரை இந்த செயல்பாடு, குறிப்பாக கழுத்தை நெரிப்பது ஆதிக்க நிலையைக்
குறிப்பதல்ல. வன்முறையான செயலாகவே பார்க்கிறேன். உடலுறவின் மகிழ்ச்சியான நிலையில் ஆண்,
ஒரு பெண்ணின் கழுத்தை நெரித்து, அவர் மூச்சுக்காற்றுக்காக தவிப்பதை யோசித்துப் பாருங்கள்.
இந்த செயலை உடலுறவின் முக்கியமான விளையாட்டு நிலையாக
நான் கருதவில்லை. பெண்ணைப் பற்றிய பாகுபாடான கருத்துகொண்ட, தவறாக பார்க்கும் நிலையின்
பிரதிபலிப்பு என்பேன்.
உடலுறவின்
போது இதைக் கூறுவது ஆண்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். இன்று பல்வேறு அமைப்புகள்,
சமூக வலைத்தளங்கள் உடலுறவு பற்றிய பெண்களின் விருப்பமாக தவறான செயல்களை கூறி வருகிறார்கள்.
ஆனால், அதற்காக நான் தயங்கி நிற்கவில்லை. ஆண்களே, தயவு செய்து உங்கள் கைகளை எனது கழுத்திலிருந்து
எடுங்கள். எனது படுக்கை அறையில் பாலியல் வன்முறை செயல்பாடுகளில் ஈடுபடாதீர்கள் என்று
கூற விரும்புகிறேன்.
லாரா
மேலாளர்
டெக் ஸ்டார்ட்அப்
முதல்முறையாக
உடலுறவின்போது ஆண் எனது கழுத்தை நெரித்துப் பிடித்தபோது, ‘’இப்படி செய்யாதே நிறுத்து’’
என்று கூறக்கூட என்னால் முடியவில்லை. மூச்சுவிடவே
முடியாத சூழலில் எப்படி பேசுவது? இப்போது அதை உங்களிடம் சொல்லும்போது நாடகத்தனமாக தோன்றலாம்.
ஆனால் அப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அடுத்த நாள் எனது தோழிகளிடம் இதுபற்றி
கூறியபோது,’’ ஓ அதுபோன்ற சம்பவமா? உனக்கு இதுபோல முன்னர் நடக்கவே இல்லையா?’’ என கேள்வி
கேட்டு அதை இயல்பாக எடுத்துக்கொண்டனர்.
மேற்சொன்ன
சம்பவத்தில் என்னோடு உடலுறவு கொண்ட ஆணை, ஆப் ஒன்றின் வழியாக சந்தித்தேன். முதலில் அவனை
ஓரிவில் உடலுறவுக்காகவே தொடர்பு கொண்டேன். அப்போது எங்கள் இருவருக்கும் 22 வயதுதான்.
பின்னாளில் இருவரும் சில மாதங்கள் டேட்டிங்கில் இருந்தோம். பிறகுதான் அந்த உறவு தீவிரமானதாக
மாறியது. உண்மையில் உடலுறவின்போது கழுத்தை நெரிப்பதை ‘ எனக்கு பிடிக்கும்’,’ உச்சம்
தொட உதவும்’ என்று அவன் நினைத்தான் என்பதை பின்னர் அறிந்தேன். அறிந்தே என்னை காயப்படுத்த
நினைக்கவில்லை. உண்மையில் ஆண்களில் அவன் மட்டும் இதுபோன்ற நம்பிக்கையுடன் இருப்பதாக
நினைக்கவில்லை. தற்போது ஆண்கள், பெண்களோடு
உடலுறவு கொள்ளும்போது முரட்டுத்தனமாக, ஆக்ரோஷமாக அவர்களோடு இயங்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
இதை எனது ஆண் நண்பர்கள், டேட்டிங் செய்தவர்களோடு பேசியபோது அறிந்துகொண்டேன். இதை அவர்களாகவே ஊகித்துக்கொள்கிறார்கள் என்பதுதான்
பிரச்னை.
இரவில் விளக்குகளின்
வெளிச்சத்தை குறைத்துவிட்டு, ஸ்பாட்டிஃபை ஆப்பில் பாடல்களை ஒலிக்கவிட்டு வாசனை கொண்ட
மெழுகுவர்த்திகளை ஏற்றிவிட்டு உடலுறவு கொள்வது ஒருவகை. அதைப்போலவே, பெண்களை கன்னத்தில்
அறைந்து, கூந்தலைப் பற்றி இழுந்து, கழுத்தை நெரித்து உடலுறவு கொள்வது உடலுறவை கார சாரமான
ஒன்றாக்குகிறது என நவீன கால ஆண்கள் நம்பத் தொடங்கிவிட்டனர்.
ஒருமுறை என்னுடைய
முன்னாள் காதலனோடு உடலுறவு கொண்டபோது என் கழுத்தை நெரித்தபடியே இயங்கினான். இப்படியே
இரண்டு மூன்று முறை உடலுறவு நடைபெற்றது. உன் கழுத்தை நெரிப்பது பிடித்திருக்கிறதா,
இப்படி செய்யலாமா என்று என்னிடம் அவன் கேட்கவேயில்லை. உண்மையில் அவன் கழுத்தை நெரித்தபடி
உடலுறவு கொள்ளும்போது, எனக்கு மூச்சு திணறத் தொடங்கியது. இப்படியே செய்யாதே என்று சொல்லக்கூட
முடியவில்லை.
கழுத்தை நெரிக்காதே
என கூறினால், அவன் என்னைவிட்டு போய்விடுவானோ, உடலுறவில் ஆர்வம் இல்லாதவள் என தவறாக
நினைத்துக் கொள்வானோ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் அவனை விரும்பும் ஒரு
பெண்ணை இப்படித்தான் கழுத்தை நெரித்து காயப்படுத்துவானா? என்று யோசிக்கத் தொடங்கினேன்.
ஒருமுறை, தைரியத்துடன் ‘என் கழுத்தை நெரிக்காதே’
என்று சொன்னபோது, முன்னாள் காதலன், அதற்கு மன்னிப்பு கேட்டான். அப்போது, அவன் முகத்தில்
குழப்பமும் சங்கடமும் ஒருங்கே சூழ்ந்திருந்தது.
முந்தைய தலைமுறையை
விட இன்றுள்ள இளைஞர்கள் மிகவும் அதீதமான பாலியல் ருசியைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
பெண்களுடன் முரட்டுத்தனமாக உடலுறவு கொள்வதை இயல்பானதாக ஏற்கிறார்கள். நமது வயதுள்ள
மனிதர்களைப் பொறுத்தவரை, இணையம் உருவாகிய காலத்தில்தான் வளர்ந்தோம். ஆபாசப்படங்களை
எங்கே, எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்ற சூழல் இருந்தது. ஆபாச படங்களில்
பெண்களை எந்தளவு அதீதமான செயல்பாடுகளில் ஈடுபடுத்துகிறார்களோ, அதேயளவு தீவிரத்தை வீட்டு
படுக்கையறையிலும் செயல்படுத்த நினைக்கிறார்கள்.
இளம்வயதில்
ஆபாசப்படங்களை வாரக்கணக்கில் பார்த்ததை எனது ஆண் நண்பர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்கள்,
அதில் மாட்டிக்கொண்டதால், நிஜ வாழ்க்கையில் பெண்ணுடன் இயல்பாக உறவு கொள்வது கடினமாகி
விட்டது. அவர்கள் ஆபாச படங்களில் பிடிஎஸ்எம், குழு உடலுறவு ஆகியவற்றை அதிகம் பார்த்தனர்.
தனியாக வாழும்
எனது பெண் தோழிகளுக்கு கின்க் எனும் பாலியல் உறவில் இயல்புக்கு மாறாக நடக்கும் நடத்தைகளை
பிடிக்கத் தொடங்கிவிட்டது. அதைபற்றி அவர்கள் மகிழ்ச்சியுடன் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். இவர்களுக்கு இயல்பாக நடைபெறும் உடலுறவு என்பது சலிப்பூட்டுவதாக
மாறிவிட்டது. பப்களில் இதுபற்றி பேசும்போது ஆண் நண்பர்கள், பெண்களின் கழுத்தை நெரிப்பது
என்பதை ஆதரித்து பேசுவதைக் கண்டிருக்கிறேன். ‘’நீ அப்படி செய்வதை தவறு என நினைக்கிறாயா?,
என்னுடன் உடலுறவு கொண்ட பெண்களுக்கு அப்படி செய்வது பிடித்திருந்தது’’ என்று பேசினார்கள்.
ஆண்கள் இப்படி
சொன்னாலும் பெண்களிடம் கேட்டபோது, அவர்களின் கருத்துகள் பல்வேறு கலவையாக இருந்தது.
முரட்டுத்தனமாக நடந்த உடலுறவால் வலியில் துடித்து அழுததாக சில தோழிகள் கூறினர். இன்னும்
சிலர், கூந்தலை இழுப்பது, கழுத்தை நெரிப்பது, முகத்தில் அறைவதை ஆண்களிடம் அவர்களாக
கேட்டு செய்யச்சொன்னதாக கூறினர். அதிலும் ஒரு பெண்தோழி, காதலனிடம் முகத்தில் எச்சிலை
துப்பச் சொல்லி உடலுறவு கொண்டிருக்கிறாள். அதாவது, இருவரும் ஒருவரின் முகத்தில் ஒருவர்
மாறி மாறி துப்பிக்கொள்வதுதான் கான்செப்ட்.
பெண்கள் கழுத்தை
நெரிப்பதை கேட்டு அதை ஆண்கள் ஏற்றுக்கொண்டால் சரிதான். ஆனால் பெரும்பாலான உடலுறவு சம்பவங்களில்
ஆண்கள், தான் செய்வது பெண்களுக்கு பிடிக்கும் என நினைத்து எதையும் கேட்பதில்லை. கழுத்தை
நெரித்தபடி, உறவு கொள்வது பெண்களுக்கு உச்சம் தொட உதவும் என அவர்களாகவே நினைத்துக்கொண்டு
செயல்படத் தொடங்கிவிடுகிறார்கள். எனவே, பெண்கள் உடலுறவின்போது மூச்சுத் திணறியபடியே
உயிர் போய்விடுமோ என்ற பீதியில் இருக்கிறார்கள்.
ரெபெக்கா,
26
வங்கி பணியாளர்
என்னுடைய
இருபதுகளில் ஆண்களோடு உடலுறவு கொள்ளும்போது
கழுத்தை நெரிக்கும் செயல் நடந்திருக்கிறது.
என்னால் அதை குறிப்பாக விவரங்களோடு கூற முடியவில்லை. முதலில் மென்மையாக இருக்கும் ஆணின்
கரங்கள், பெண்களின் கழுத்தை வளைத்துப் பிடித்து, வலிமையுடன் மெல்ல மூச்சுக்குழல்களை
நசுக்கத் தொடங்கும். இதை நான் உடலுறவு கொண்ட பெரும்பாலான ஆண்கள் செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக, ஓரிரவு க்கென வரும் ஆண்கள் இப்படி செய்வது இயல்பாக உள்ளது. இப்படி உடலுறவு கொள்ளும்போது கழுத்தை நெரித்தபடி இயங்கப்போகிறேன்
என்று யாரும் என்னிடம் எச்சரிக்கை கூட செய்தது இல்லை. அவர்கள் உடலுறவின் போக்கில் திடீரென
எனது கழுத்தை நெரித்து மூச்சு திணறச் செய்வார்கள்.
நான் வளர்ந்த
காலத்தில் பாலியல் சுதந்திரம் பற்றி பேச்சு தீவிரமாக இருந்தது. உடலுறவில் ஈடுபடும்போது
ஒருவர் பெண்ணின் கழுத்தை நெரிப்பபை இந்த வகையில் இயல்பானது என அப்போது எடுத்துக்கொண்டேன்.
ஆனால் இன்று அப்படி யோசித்தது எவ்வளவு முட்டாள்தனமானது ன நினைக்கிறேன்.
ஆணோடு உறவு
கொள்ளும்போது, அவர்கள் செய்யும் செயல்களை பெண் பொறுத்துக்கொள்வதற்கு உடலுறவில் அவள்
நாணம் கொண்டவள் அல்ல கற்பனையை விரும்புபவள் என்று கூற விரும்புவதுதான் காரணம். உண்மையில்
கழுத்தை நெரிப்பது போன்ற செயலை பெண்கள் வேண்டாம்
என்று தடுப்பதற்கு அவர்களது மனதில் தைரியம் இருப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அதை
விரும்புவதா, இல்லையா என்ற தெளிவு கிடைப்பதில்லை.
என்னுடைய
தோழிக்கு வயது 25. அவளுடைய காதலன், மென்மையாக நாகரிகமாக நடந்துகொள்பவன்தான். ஆனால்
ஒருகட்டத்தில் அவள் அவனை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டாள். அவர்கள் உடலுறவு கொள்ளும்போது
, காதலன் வெறித்தனமாக அவளின் கழுத்தை நெரித்தபடியே உறவு கொண்டிருக்கிறான். ‘இப்படி
செய்யாதே’ என்றால் உடனே மன்னிப்பு கேட்பவன், உடலுறவின்போது திரும்பத் திரும்ப கழுத்தை
நெரித்துக்கொண்டே இருந்தான். எனவே, பொறுத்தது போதும் என பொங்கியெழுந்த தோழி, அவனை வீட்டை
விட்டே துரத்திவிட்டாள். அவளது காதலனின் வன்முறையான செயல்பாட்டிற்கு அவன் பார்த்த ஆபாச
படங்கள்தான் காரணம். இன்னொரு சம்பவத்தைப் பார்போம்.,
நான் எனது
ஆண்தோழன் ஒருவனுடன் குளியலறையில் உடலுறவு கொண்டேன். அப்போது அவன் திடீரென எனது கழுத்தை
நெரிக்கத் தொடங்கினான். அதேசமயம் ஷவரில் தண்ணீர் வேறு கொட்டத் தொடங்கியது. எனக்கு மூச்சுத்
திணறத் தொடங்கியது. இப்படி செய்யாதே எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லக்கூட எனக்கு
வாய்ப்பில்லை. அந்த நேரத்தில் ஷவரில் குளிர்ந்த நீர் கொட்டத் தொடங்கியதால், எனக்கு
விடுதலை கிடைத்தது.
இன்று நான்
எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன். படுக்கையறையில் ஆணால் எனது கழுத்து நெரிக்கப்படுவதை
நான் விரும்பவில்லை. அதை உடலுறவின் எந்த வடிவத்திலும் நான் ஏற்கவில்லை. கழுத்தை நெரிப்பது
மூலம் ஆண் உச்சம் பெற்றாலும் கூட அந்த செயலை அதிகாரம், கட்டுப்பாடு என்பதாக பார்க்கிறேன்.
இன்று நானும்
எனது தோழியும் கழுத்தை நெரிக்கும் செயலுக்கு நோ சொல்ல தயாராகிவிட்டோம். உண்மையில் ஆண்கள்,
உடலுறவில் தங்களின் விருப்பம் என்ன, அந்த விருப்பத்தின் வேர் என்ன என்பதை தேடி அறிவது
முக்கியம்.
HOW PORN
HIJACKED THE SEXLIFE OS GENERATION Z
தி டைம்ஸ்
மேகஸின்
image -Guardian
--------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக