இடைவேளை விட்டுத் தொடரும் உண்ணாவிரதம் - உடல் எடையை கணிசமாக குறைக்கிறது!

 










உடல் எடையைக் குறைக்கும் உண்ணாவிரதம்

ஒருவர் மூன்று வேளை உணவு உண்டாலும் மாதம் ஒருமுறை மூன்று வேளை உணவுகளில் ஒருவேளையை தியாகம் செய்து உண்ணாவிரதம் கடைபிடிக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் பயன்கள், உடலிலுள்ள நச்சுகள் வெளியேறுவது, அடுத்து உடலின் செரிமான மண்டலம் சீராவது.

ஒருவர் முழுநாளும் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் அது சற்று கடுமையானது. அதற்கென பயிற்சி செய்து அதைக் கடைபிடிக்கலாம். இன்டர்மிட்டர் ஃபாஸ்ட் எனப்படும் உண்ணாவிரதம் பதினாறு மணிநேரம் தொடங்கி சில நாட்கள் வரை நீள்கிறது. இதில் உணவு என்பது முழுமையாக நீக்கப்படுவதில்லை. அதற்குப் பதில் திரவ ஆகாரங்கள், பழங்கள் ஆகியவற்றை உண்ணலாம். பிறகு உண்ணாவிரதத்தைத் தொடரலாம். மூன்று வேளை உணவுண்டு பழகியவர்களுக்கு இந்த முறை ஏற்றது. 

 அமெரிக்கர்கள் மத்தியில் இன்டர்மிட்டன் ஃபாஸ்ட் தீவிரமாகி வருகிறது. வெறுமனே டிரெண்டிங் என்பதாக அல்ல. அதில் பயனும் கிடைக்கிறது. எந்த டயட்டைக் கடைபிடித்தாலும் இடைவேளை விட்டுத் தொடரும் உண்ணாவிரதம் மூலம் அவர்களுக்கு எடை குறைகிறது என்று கூறுகிறார்கள். 

நீரிழிவு நோயாளிகளுக்கும் இன்டர்மிட்டன் ஃபாஸ்ட் உதவுகிறது என்பது ஆச்சரியமான சமாச்சாரம். உண்ணாவிரதம் மூலம் நீரிழிவு நோயாளிகளின் உடலில் இன்சுலின் எதிர்ப்பு குறைகிறது. அதை உடல் உள்வாங்கிக் கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தொன்மைக்காலத்தில் காட்டில் விலங்குகளை வேட்டையாடி உண்டபோது, வேட்டையில் உணவு முழுமையாக கிடைத்துவிடாது. அதாவது, விலங்குகள் அகப்படலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். இந்த சூழலில் மனிதர்கள் பட்டினியாக கிடப்பார்கள். அப்போது அவர்களது உடலில் சேமிப்பில் இருக்கும் கொழுப்பு மெல்ல கரையும். அதுதான் உடல் இயக்கங்களுக்கு ஒரே எரிபொருள். அந்த வகையில் இன்டர்மிட்டன் ஃபாஸ்ட், உடலிலுள்ள கரையாத கொழுப்புகளை கூட கரைய வைக்கிறது. இதற்கு இன்சுலினையும் பயன்படுத்துகிறது என ஆய்வாளர்கள் கருத்துகளை முன்வைக்கிறார்கள்.

வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைக்கு பால் கொடுப்பவர்கள் இன்டர்மிட்டன் ஃபாஸ்டை கடைபிடிக்கும்போது மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இல்லையெனில் உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஊட்டச்சத்துக் குறைவு, புரத பற்றாக்குறை ஆகியவை ஒருவருக்கு ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

 

 இடைவேளை விட்டு உண்ணாவிரதம் இருக்கும் முறை

இந்த முறை மேற்கு நாடுகளின் உணவுப்பொருட்களை அடிப்படையாக கொண்டது. கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள், மருத்துவரிடம் ஆலோசித்து கலோரி அடிப்படையில் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தலாம். தேநீர் என குறிப்பிட்ட இடங்களில் மூலிகைகளைப் பயன்படுத்தி தேநீரை தயாரிப்பது சிறப்பு. 

  

நேரக்கட்டுப்பாடு கொண்ட உண்ணாவிரத முறை

காலை 8 மணி

பாலில்லாத காபி

பத்து மணி

பெர்ரி ஐஸ்டு தேநீர்

நண்பகல் 12 மணி

காளான்களைக் கொண்ட மூன்று ஆம்லெட்டுகள், மிளகு, சீஸ், பொரித்த கோதுமை பிரெட், பழங்கள்

மாலை 3 மணி

ஸ்ட்ராபெர்ரி பனானா ஸ்மூத்தி, க்ரீக் யோகர்ட், புரத பவுடர், கீரை

5.30  மணி

கோழிக்கறி, கேரட், காளிஃப்ளவர், சாலட், ஒயின் சிறிதளவு

 

5:2 உண்ணாவிரதம்

விருந்து தினம்

காலை  8 மணி

க்ரீம் கொண்ட காபி

பெர்ரிகளைக் கொண்ட ஓட்ஸ் உணவு, தேன்

நண்பகல் 1 மணி

அவகாடோ கொண்ட சாலட்

மாலை 4 மணி

தானியங்களாலான பிஸ்கெட்டுகள்

இரவு 7 மணி

சீஸ் பீட்ஷா, மீன்

8 மணி

கருப்பு சாக்லெட், சில பிஸ்கெட்டுகள்

உண்ணாவிரத தினம்

8 மணி

க்ரீம் கொண்ட காபி

11 மணி

எலுமிச்சை சாறு கொண்ட நீர்

நண்பகல் 1 மணி

சூப்

மாலை 5 மணி

தேநீர்

 

ஒருவேளை உணவு

காலை 8 மணி

கருப்பு காபி

11 மணி

வெள்ளரிக்காய் கொண்ட நீர்

மதியம் 2 மணி

அவகாடோ கொண்ட சாண்ட்விட்ச, ஃபிரென்ச் ஃபிரை, சாலட்

மாலை 6 மணி

தேநீர்


டைம் வார இதழ்

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்ட் - இடைவேளை விட்டு தொடரும் உண்ணாவிரதம்

 

கருத்துகள்