கேம்ஸாப், ஏத்தர் வெற்றிக்கதை - 40 அண்டர் 40 பார்ச்சூன் பட்டியல்!

 





தருண் மேத்தா, இயக்குநர், ஏத்தர்

ஸ்வப்னில் ஜெயின், தருண் மேத்தா, ஏத்தர்

யாஸாஸ் அகர்வால், கௌரவ் அகர்வால், கேம்ஸாப்

கேம்ஸாப்




கேம்ஸாப்

யாஷாஸ் அகர்வால்

கௌரவ் அகர்வால்

கௌரவ், புதிர்களைத் தீர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். யாஸாஸ் அகர்வாலுக்கு மொபைலில் விளையாட்டுகளை விளையாடுவதில் ஆர்வம் உண்டு. இதுதான் கேம்ஸாப் நிறுவனம் தொடங்குவதற்கான விதை. இந்திய நாட்டிலுள்ள 65 சதவீத மக்கள் தொகையினர் 35 வயதினராக இருக்கிறார்கள். தொழிலுக்கு இதை விட நல்ல விஷயம் என்ன வேண்டும்?

பல்வேறு விளையாட்டுகளை டெவலப்பர்களிடம் பேசி உரிமம் பெற்று வாங்கி அதை பிரபலமான ஆப்கள், வலைத்தளங்களில் இணைத்துவிடுவதே கேம்ஸாப்பின் வேலை. இப்படி செய்து கடந்த ஆண்டு 42 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளனர். இதில், அவர்களோடு இணைந்துள்ள வலைத்தளம், ஆப்களுக்கு 50 சதவீத தொகையை ஒப்பந்த தொகையை வழங்கிவிட்டனர்.

கேம்ஷாப்பின் இயக்குநர், யாஸாஸ் அகர்வல். கேம்ஸாப் வேலை செய்யும் என்று தெரிந்தவுடன் கௌரவ், தான் பெய்ன் கன்சல்டன்சியில் பார்த்து வந்த வேலையைக் கைவிட்டார். அட்வெர்கேம் டெக்னாலஜிஸ் பி. லிட் என்பதே கேம்ஸாப்பின் தாய் நிறுவனம். இன்று கேம்ஸாப்பின் விளையாட்டுகளை எழுபது நாடுகளில் உள்ள 5 ஆயிரம் ஆப்கள் பயன்படுத்துகின்றன. ஒரு கோடிக்கும்  அதிகமானோர் விளையாடி வருகிறார்கள்.

2020ஆம் ஆண்டு கேம்ஸாப், 32 கோடி ரூபாயை பல்வேறு முதலீட்டு முயற்சிகளின் வழியாக திரட்டியது. பிட்கிராப்ட் வென்ச்சர்ஸ் என்ற முதலீட்டு நிறுவனமே, கேம்ஸாப்பின் முக்கியமான பெரிய முதலீட்டு ஆதாரமாக உள்ளது. இதற்கடுத்து எஃப்ஜே லேப்ஸ், வெலோ பார்ட்னர்ஸ் ஆகியோர் முதலீடு செய்திருக்கிறார்கள்.

ராஜீவ் ரஞ்சன் சின்கா

ஃபார்ச்சூன் மே 2023

3

ஏத்தர் வெற்றி

தருண் மேத்தா, 33

இயக்குநர், ஏத்தர் எனர்ஜி

 

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 80 சதவீத வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றுவதே ஏத்தரின் இலக்கு. 2013ஆம் ஆண்டு, ஐஐடி மாணவர்களான தருண் மேத்தா, ஸ்வப்னில் ஜெயின் ஆகியோர் மின்வாகனங்களுக்கான பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கினர். இதன்படிதான், ஏத்தர் நிறுவனத்தை தொடங்கினர்.  2018ஆம் ஆண்டு ஏத்தர் 340, 450 என இரு மாடல்களை அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கியது. 2020ஆம் ஆண்டு 450எக்ஸ் என்ற மாடலை உருவாக்கியது. அடுத்து, மூன்றாம் தலைமுறை வாகனமான 450எக்ஸ் என்பதை 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய பெரு நகரங்களில் ஏத்தர் இயங்குகிறது. இந்தியாவில் 80 நகரங்களில் ஏத்தரின் வாகனங்களை நீங்கள் வாங்க முடியும்.  இ எனும் வாகன வரிசைக்காக 128 மில்லியன் டாலர்களை நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் இன்ப்ராட்ரக்சர் ஃபண்ட் லிட். ஹீரோ மோட்டார் கார்ப் ஆகிய நிறுவனங்கள் முதலீடாக வழங்கியுள்ளன. 2022ஆம் ஆண்டு வருமானம் 408 கோடியாக உயர்ந்துள்ளது. ஏத்தர் வாகனங்களை சார்ஜ் செய்ய 1,200 சார்ஜிங் நிலையங்களை உருவாக்கியுள்ளது.

ருக்மணி ராவ்

ஃபார்ச்சூன் மே 2023


கருத்துகள்