ஆடியோ கதைகள் மூலம் மக்களின் மனதை வென்ற பாக்கெட் எஃப்எம்! - பார்ச்சூன் 40 அண்டர் 40
நிஷாந்த், ரோகன், பிரதீக்- துணை நிறுவனர்கள், பாக்கெட் எஃப்எம் |
பாக்கெட் எஃப்எம்- ஆடியோ கதைசொல்லி |
ரோகன் நாயக்,
நிஷாந்த், பிரதீக் தீக்ஷித்
துணை நிறுவனர்கள்
பாக்கெட்
எஃப்எம்
யூட்யூபை
திறந்தால், ‘’பார்க்கிறதுக்கு பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். இவனுக்கு பேங்கில அக்கவுண்ட்
இருக்கா, இந்த பிச்சைக்காரனுக்கு ஹோட்டல் டேபிளா,, அதை எங்களுக்கு கொடுங்க. பாக்குறதுக்கு
சர்வர் மாதிரி இருக்க, இரண்டு கிளாஸ்ல டீ போட்டு எடுத்துட்டு வா ‘’ என்ற டோனில் பெண்
குரல் பேசும் மோசமான அனிமேஷன் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அந்த கம்பெனிதான் பாக்கெட்
எஃப்எம். கதைகளை ஆடியோ வடிவில் கூறும் நிறுவனம்.
ரோகன், நிஷாந்த்
ஆகிய இருவரும் காரக்பூரல் ஐஐடியில் படித்தவர்கள். இவர்கள் பிரதீக்கை சந்தித்தபிறகு
பாக்கெட் எஃப் நிறுவனத்தை உருவாக்கினர். இன்று
பாக்கெட் எஃப்எம்மின் மதிப்பு, 400 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம். அண்மையில்தான்
93.5 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றது.
பாக்கெட்
நாவல் என்ற சகோதர நிறுவனத்திலிருந்து பாக்கெட் எஃப் எம் நிறுவனம் உருவானது. திகில்
கதைகளில் யட்சினி என்ற கதையை பொறியியல் மாணவர் ஒருவர் எழுதி, அக்கதை 300 மில்லியன்
முறைக்கு மேல் மக்களால் கேட்கப்பட்டுள்ளது. அதுதான் பாக்கெட் எஃப்எம்மின் மகத்தான சாதனை. இந்த நிறுவனம் இந்தி,, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு,
கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் செயல்படுகிறது. 50 ஆயிரம் எழுத்தாளர்கள், டப்பிங்
கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் 1 லட்சம் மணி நேர நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம்
25 மில்லியன் என்ற அளவுக்கு சென்றுகொண்டிருக்கிறது. பாக்கெட் எஃப்எம் நிறுவனத்திற்கு, 80 மில்லியன்
பயனார்கள் உள்ளனர். இவர்கள் தினசரி இரண்டு மணி நேரம் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை
கேட்கிறார்கள். கதையில், ஒரு அத்தியாயம் பதினைந்து நிமிடங்களாக உருவாக்கப்படுகிறது.
மொத்தம் ஐந்நூறு எபிசோடுகள் என்பது குறைந்தபட்ச அளவு. நிறுவனத்திற்கு 80 சதவீத வருமானம்
சந்தா மூலமும், இருபது சதவீத வருமானம் விளம்பரம் மூலமும் வருகிறது.
டெல்லியில்
எழுதப்பட்ட கதை என்றால், கேட்கும் நகருக்கு ஏற்றபடி நகரங்களின் பெயர்களை மாற்றி கதைகளை
பல்வேறு மொழிகளில் பதிவு செய்கிறார்கள். பிரதீக், கதைகளை நிலப்பரப்பிற்கு ஏற்றதாக மாற்றும்
பணியை ஏற்று செய்துவருகிறார்.
வி கேசவ்தேவ்
ஃபார்ச்சூன்
இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக