இயற்கைப் பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்த வலிமையான அரசியல் தலைமை தேவை - பெலிண்டா ரைட் , சூழலியலாளர்

 






பெலிண்டா ரைட், சூழலியலாளர்

பெலிண்டா ரைட், சூழலியலாளர் 




பெலிண்டா ரைட்

தலைவர், வைல்ட்லைஃப் புரடக்‌ஷன் சொசைட்டி ஆஃப் இந்தியா

இந்தியா, புலிகள் பாதுகாப்பில்,  50 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இத்தனை ஆண்டுகள் கழித்தும் காடுகள் அழியாமல் இருக்கின்றன. அதில் வாழ்ந்த புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது என்ற செய்தி அதிசயமாகவே உள்ளது. புலிகளின் வாழிடத்திற்கு அருகில் வாழ்ந்து வந்த மக்களின் சகிப்புத்தன்மை, புலிப்பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பான அணுகுமுறை ஆகியவற்றை பற்றி இந்தியா நிச்சயமாக பெருமைப்படலாம்.

ஆனால், எதிர்காலத்தில் இந்தியா மனிதர் விலங்கு மோதல் என்ற பெரிய சவாலை சந்திக்கவேண்டியுள்ளது. மக்களிடம், காடுகளில் உள்ள புலிகளைப் பாதுகாப்பதில் முன்னர் காட்டிய சகிப்புத்தன்மை மெல்ல மறைந்து வருகிறது. அரசின் எரிவாயுவிற்கான மானியம் குறையும்போது காட்டில் உள்ள விறகுகளைத் தேடி மக்கள் வருவார்கள்,

நகர கட்டுமானத்திற்கான சட்டவிரோத மணல் குவாரிகள், காட்டு விலங்குகளைத் தடுக்கும் சட்டவிரோத மின்சார வேலிகள் ஆகியவற்றை நாம் அடையாளம் காண வேண்டும். காட்டுத்தீ மற்றும் காட்டில் பெருகும்  காட்டு நாய்களால் வேட்டை விலங்குகள் அழிந்து வருகின்றன. இரைச்சல் காடுகளுக்கு அருகில் அதிகரித்து வருகிறது. காட்டுக்கு அருகில் உள்ள கிராமங்களில் டிஜேக்களை வைத்து விழாக்களைக் கொண்டாடுவதால், விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.

புலிகளின் காப்பகங்களில் அதை வேட்டையாடும் நடவடிக்கைகள் குறைந்திருக்கிறதா? உலக சந்தையில் இந்தியப் புலிகளைக் கொன்று அதன் உடல் பாகங்களை விற்கும் நிலை மாறியிருக்கிறதா?

சரிஸ்கா, பன்னா  ஆகிய காப்பகங்களில் புலிகளை சரியாக பாதுகாக்க காரணத்தால், அவை வேட்டையாடப்பட்டு முழுமையாக அழிக்கப்பட்டன. இந்த சம்பவங்கள், 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு நடைபெற்றன. புலிகளின் காப்பகங்களின் அருகில் உள்ளூர் அளவில் அதை வேட்டையாடுவதற்கான செயல்கள் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளன.

உலகளவில் இந்தியப் புலிகளைக் கொன்று அதன் உடல் பாகங்களை கள்ளச்சந்தையில் விற்கும் செயல்பாடு முழுமையாக நிற்கவில்லை. தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. வயது, நோய், சண்டையால் காயமடைவது, வாகனங்கள், ரயில் விபத்து ஆகியவற்றால் இறந்துபோகும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இயற்கை பாதுகாப்பு சட்டங்கள், வளர்ச்சி என்ற பெயரில் நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றனவா?

இந்தியாவில் உள்ள புலி காப்பகங்கள் உண்மையில் நமக்கு கிடைத்த இயற்கை பொக்கிஷங்கள் என்று தான் கூறவேண்டும். நெடுஞ்சாலைகளை, அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை அமைக்க காடுகளை அழிக்க கூடாது. அதற்கு வேறு தீர்வுகளைத் தேட வேண்டும். இப்போது பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மீது அழுத்தம் கூடி வருகிறது. புலிகளுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. காப்பகங்களை சுற்றி தோராயமாக 1,70,000 என்ற எண்ணிக்கையில் கிராமங்கள் இருந்தால் அதுவே புலிகளின் வாழ்வுக்கு பெரும் அழுத்தமாக மாறி, அதை அழித்துவிடும்.

புராஜெக்ட் டைகர் திட்டம் சரியான நேரத்தில் மேம்படுத்தப்படவில்லை என்கிறீர்களா?

1993- 2009 காலகட்டத்தில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்டன. அவற்றின் எலும்புகள், தோல், உடல் பாகங்கள் நாட்டின் தலைநகரான டெல்லியில் மீட்கப்பட்டுள்ளன. இதன் அர்த்தம், புராஜெக்ட் டைகர் திட்டம் சரியான அளவில் நாட்டின் பல்வேறு இடங்களில் விரிவுபடுத்தவில்லை என்றே ஆகிறது. புலிகளை வேட்டையாடும் பல்வேறு சட்டவிரோத வேட்டைக் குழுக்கள் சிறப்பாக  இயங்கி வருவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். பல்வேறு உதவிகளுடன் புராஜெக்ட் சிறப்பாக விரிவுபடுத்தப்பட்டு இருந்தால், களத்தில் இன்று உருவாகும்  பல்வேறு பிரச்னைகளை முன்னமே களைந்திருக்கலாம்.

சட்டவிரோத வேட்டைக்காரர்களை  நீதிமன்றம் மூலம் தண்டிப்பது சவாலாக உள்ளதா?

சட்டவிரோத வேட்டை வழக்குகள் பதினைந்து முதல் இருபது ஆண்டுகள் வரை நீண்டுகொண்டே செல்கின்றன. இந்த காலகட்டத்தில் குற்றவாளி, குற்ற ஆதாரங்கள், சாட்சிகள் என பலவும் காணாமல் போய்விடுகின்றன. இன்றுள்ள குடிமைச்சமூகம் இந்த பிரச்னையை அடையாளம் கண்டு சற்று வேகமாக செயல்படும் ஃபாஸ்ட்டிராக் நீதிமன்றங்களை அமைத்துள்ளன. குறிப்பாக, வேட்டைக்காரர்கள், புலிகளை வேட்டையாடும் வழக்குகள்.

புலிகளைப் பாதுகாக்க இன்னும் வலிமையான சட்டங்கள் தேவையென நினைக்கிறீர்களா?

இந்தியாவில் இயற்கை வளங்களை பாதுகாக்க வலிமையான சட்டங்கள் உள்ளன. ஆனால், அவை முழுமையாக பரவலாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. வனப்பணியாளர்களுக்கு களப்பணி சார்ந்து நிறைய பயிற்சிகளை அளித்து ஊக்கப்படுத்தப்படுவது அவசியம். பாதுகாப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்த வலிமையான அரசியல் தலைமை தேவை.

அஜய் சிங்

டைம்ஸ் ஆஃப் இந்தியா

 --------------------------------

https://en.wikipedia.org/wiki/Belinda_Wright_(conservationist)

https://www.wpsi-india.org/wpsi/index.php

கருத்துகள்