ரூட்டை மாத்தி வேலையை பிடிங்க!




இன்டர்வியூ டிப்ஸ்

ரூட்டை மாத்தி வேலையை பிடிங்க! - ஈஸி டிப்ஸ்கள்  -.அன்பரசு


குறையாத ஓவர்லோடு வேலைகள், இன்க்ரிமென்ட் இம்சை, கேங்வார், புதிய டீமுக்கு மாற்றுவது என்ற காரணங்களுக்காக டக்கு டக்கென வேலையை மாற்றுபவர்கள் இன்று மேக்சிமமாகி வருகிறார்கள்உடனே ரெஸ்யூம் அப்டேட் செய்து இன்டர்நெட்டில் பதிவு செய்தாலும், யாருமே உங்களை கூப்பிடவில்லை என்ன செய்யலாம்? டோண்ட் வொரி, நாங்க இருக்கோம்!

தினசரி அப்டேட்! தித்திக்கும் வெற்றி!

திருப்பதி லட்டில் முந்திரி போல டிமாண்ட் அதிகரிக்க வேண்டுமா? ரெஸ்யூமை அனைத்து வேலைவாய்ப்பு தளங்களிலும் உடனே அப்டேட்டி வையுங்கள். தொடர்ந்து அப்டேட் செய்யும் ரெஸ்யூம்கள்தான் கம்பெனிகள் தேடும்போது உடனே கண்ணுக்கு முந்திரியாக தென்படும். உடனே நிறுவனங்கள் உங்களை அழைக்க அதிக வாய்ப்புண்டு.

இன்ஸ்டன்ட் பதிலுக்கு உடனே வேலை!

காதலியின் செல்ஃபீக்கு லைக்ஸ், அப்பாவின் அக்கவுண்டுக்கு பணம் ட்ரான்ஸ்பர், நண்பனுக்கு தலப்பாக்கட்டியில் பிரியாணி ஆர்டர் என ஆல்வேஸ் பிஸியாகவே இருந்தால் ஹெச்ஆரின் மெயிலுக்கு எப்படி உடனே பதிலளிக்க முடியும்? உடனடியாக பதிலளிக்காவிட்டால் வேலையில் ஆர்வம் இல்லை என்பதாக புரிந்துகொண்டு அடுத்த ஆள் நோக்கி நகர்ந்துவிடுவதே ஹெச்ஆர்களின் தலைமுறை தர்மம். எனவே முதல் மரியாதைக்கு முந்துங்கள்.

புரோஃபெஷனல் புலி!

கம்பெனி முதலாளியே நேரத்திற்கு வந்துவிடும்போது நீங்கள் பஸ் முன்னாடி கோமாதா வந்திருச்சுங்க சார், ஆக்சிடெண்ட் சார் என்றெல்லாம் சிம்பதி சீரியல் கதை சொன்னால் அதை ஹெச்ஆர் என்ன, கம்பெனி ப்யூன் கூட காது கொடுத்து கேட்கமாட்டார்கள். இன்டர்வியூக்கென நேரம் ஒதுக்கி அது வீணாவது, உங்களுக்கு மாறாத கெட்டபெயரை உருவாக்கி தரும். எனவே, ஷேர் ஆட்டோவில் ஃபுட்போர்டு அடித்தாவது  நேரமே வந்து பங்க்சுவாலிட்டி ஜென்டில்மேன் என்பதை நிரூபித்தால் வேலை கிடைக்காமலா போகும்?

ஹானஸ்ட் ராஜாக மாறுங்கள்!

ரெஸ்யூம் என்பது திரைக்கதை எழுதும் இடமல்ல. முன்பு வேலை செய்த இடம், வேலையை விட்டு வெளியே வரும் காரணங்களை ஹானஸ்டாக எழுதுவது அவசியம். உங்களைப் பற்றி நிறுவனம் துல்லியமாக விசாரிக்கும் என்பதால் மினி பொய்கூட வேலையை ஒத்திவைத்துவிட சான்ஸ் அதிகம். எனவே அமீபா அளவும் பொய் வேண்டாமே ப்ளீஸ்! அப்புறமென்ன ஜமாய்ப்போம் வாங்க!

நன்றி: 
 வெளியீட்டு அனுசரணை: தினகரன் கல்வி வேலைவாய்ப்பு மலர்