பிஹேவியர் இன்டர்வியூ ஈஸி!- சிம்பிள் டிப்ஸ்கள்




பிஹேவியர் இன்டர்வியூ ஈஸி!- சிம்பிள் டிப்ஸ்கள்- -.அன்பரசு
 

சாதாரண இன்டர்வியூவில் வேலைக்கு சர்வ லட்சணங்களும் பொருந்தியவரா என்று பார்க்க சில பல கேள்விகளை அர்ஜூன்னின் அம்பாய் வீசுவார்கள். நீங்களும் உங்கள் ஐக்யூவை கேடயமாக வைத்து அநாயசமாக சமாளித்துவிடுவீர்கள். ஆனால், பிஹேவியர் இன்டர்வியூ என்பது குறிப்பிட்ட சிச்சுவேஷனில் எப்படி நீங்கள் நடந்துகொள்வீர்கள், என்ன முடிவெடுப்பீர்கள் ரக கேள்விகள் அதிகமாக இருக்கும்.

இவைதான் தேவை!

குறிப்பிட்ட சூழ்நிலை, செய்யவேண்டிய வேலைகள், நீங்கள் அங்கு செய்தது, ரிசல்ட். இவைதான் பிஹேவியர் இன்டர்வியூவில் நீங்கள் கூறவேண்டிய பதில்கள். இந்த இன்டர்வியூவில் நீங்கள் சந்தோஷப்படும் ஒரு விஷயமிருக்கிறது. கூறும் எந்த பதிலும் சரி, தவறு என்ற வகைக்குள் அடங்காது என்ற ரூல்தான் அது. பதிலில் திறமையோடு ஹானஸ்டும் கூட்டு சேர்ந்தால் உங்களுக்கு வேலை ஷ்யூர். சிம்பிளான சில கேள்விகள் உங்களுக்காக..

பிரஷரான டெட்லைனில் வேலை செய்த அனுபவத்தை கூறுங்கள்.

குறிப்பிட்ட நாளில் ஒப்படைக்கவேண்டிய ப்ராஜெக்டை பணியாளர்களுக்கு பகிர்ந்தளித்து முன்னதாகவே எப்படி நிறைவு செய்தீர்கள் என்பதை சுருக்கமாக கூறலாம். .கா இரண்டு மாதத்தில் முடிக்கவேண்டிய ப்ராஜெக்டை 45 நாட்களில் முடித்து கொடுப்பது போன்றவை.

ஆபீசில் சந்தித்த சவாலான அனுபவத்தை பகிருங்கள்.

குறிப்பிட்ட நாளில் உங்கள் மேலதிகாரி இல்லாத சூழலில் வேலைகளை எப்படி முடித்தீர்கள் என்பதை ஷார்டாக சொன்னால் குட்மார்க் கிடைக்கும். .கா: உங்கள் மேலதிகாரி அன்று திடீர் லீவ். ஸ்பான்சர்ஷிப் கிடைக்க உடனடியாக பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனை, உங்களுக்கு கிடைத்த குறிப்புகளின் படி தயாரித்தது போன்ற அனுபவங்களை கூறலாம்.

அவசிய திறன்கள்! அவசரம்!

தகவல்தொடர்பு மிகவும் முக்கியம். உங்களுடைய மேலதிகாரியோ, சக ஊழியரோ என்ன சொல்கிறார் என்பதை கவனித்து கேட்பது அவர்களுக்கான மதிப்பை தருவதில் சேரும் என்பதோடு நம்மோடு குழுவாக பணியாற்றுவதில் பலரையும் ஊக்குவிக்கும்.

திட்டமிடுதல் என்பது தனிநபர்களுக்கும் முக்கியம். நிறுவனங்களுக்கு இன்றியமையாதது. எனவே தொலைநோக்காக திட்டங்களை பிளான் செய்வதோடு அதனை குழுவினருக்கு ஏ டூ இஸட் புரியவைத்து அவர்களின் பிரச்னைகளை டவுட்களை தீர்ப்பது அவசியம்.

ஊழியர்களை புரிந்துகொள்ளுதல் தேவை. உங்கள் மேலதிகாரி ப்ராஜெக்ட் டெட்லைன் பரபரப்பில் இருப்பார். பணியாளர்களோ சீட் கிழிஞ்சுருமோ என பயத்தில் இருந்தால் வேலை எப்படி நடக்கும்? அவர்களின் பாய்ண்ட் ஆஃப் வியூவில்  பிரச்னையை அணுகி தீர்வு கண்டுபிடிக்கும் டேலன்ட் வேண்டும்.

பிஹேவியர் இன்டர்வியூ என்பது அனைத்து நிறுவனங்களிலும் இன்று சகஜமான ஒன்று. வேலை அறிவிப்புகளின் குறிப்பை கவனமாக படித்து விட்டு அப்ளை செய்வது, வேலை கிடைக்கும் சான்ஸை அதிகரிக்கும். அப்புறமென்ன ஜெயிப்பது நீங்கள்தான்.
     
 நன்றி: தினகரன் கல்வி வேலைவாய்ப்பு மலர்

  






பிரபலமான இடுகைகள்