பசுமை பேச்சாளர்கள் -4: (அலெக்ஸாண்ட்ரா குஸ்டெவ்) ச.அன்பரசு
பசுமை பேச்சாளர்கள் -4:
அலெக்ஸாண்ட்ரா குஸ்டெவ்
ச.அன்பரசு
1998 ஆம் ஆண்டு ஜார்ஜ் டவுன் கல்லூரியில்
அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் வென்றவருக்கு, 2016 ஆம் ஆண்டு
இவரது பணிகளைப் பாராட்டி தேடி வந்த கௌரவம்தான் இவர் படித்த கல்லூரியின் கௌரவ டாக்டர்
பட்டம். 2000 ஆம் ஆண்டில்
தன் குடும்ப தொழிலான அறிவியல், கல்வி, சட்டம்
என்ற வகையில் எர்த்எக்கோ இன்க் என்ற நிறுவனத்தை தனது சகோதரர் பிலிப்புடன் சேர்ந்து
தொடங்கினார். பின்னர்,
2007 வரையில் கடல் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகராகவும், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ பகுதிகளிலுள்ள
நீர்நிலைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். "நீர் பற்றாக்குறை என்பது நமது நாட்டினை சீரழிக்கும் என்பது உறுதி. புயல், வெள்ளம், பஞ்சம்,
ஆகியவற்றின் விளைவாக நீரின் தரம் குறைந்துள்ளது. நீரற்று அகதிகளாக சுற்றித்திரியும் நிலைமையை நாளை நமக்கு நேர அதிக காலமில்லை"
என அப்போதே அடித்துக் கூறிய தீர்க்கதரிசி அலெக்ஸாண்ட்ரா. விழிப்புணர்வை உண்டாக்க தொழில்நுட்பங்களை
பயன்படுத்தவேண்டும் என்பதில் பெரும் விருப்பம் கொண்டவர் இவர்.
"நாம் கதை சொல்வதால் வளர்ந்த
இனம். என் தாத்தா மிகப்பெரும் கடல் ஆராய்ச்சியாளரோ கண்டுபிடிப்பாளரோ
அல்ல. ஆனால் அவர் கடல் குறித்து கூறிய அனுபவக்கதைகளின் வழியாகத்தான்
எனக்கு சூழலியல் ஆர்வத்தை ஊட்டினார்.சூழலியலை இப்படியும் அடுத்த
தலைமுறைக்கு கடத்தலாமே!" என ஆச்சரியகரமான ஐடியாக்களை தன்
பேச்சினூடே பேசி அனைவரையும் ஈர்ப்பது இவரின் ஸ்பெஷாலிட்டி.
சூழலியல் கதைசொல்லி
அறிந்த மொழிகள் - ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ்
புகழ்பெற்றது: தி அண்டர்வாட்டர் வேர்ல்ட் டிவி தொடர்.
அமைப்பு: ப்ளூ லீகஸி
என்ஜிஓ
விருது: ஈகோ ஹீரோ
விருது(2016)
தற்போதையபணி: கடல் குறித்த ஆவணப்படம்.
நன்றி: முத்தாரம் வார இதழ்