டைம் வார இதழ் / செயற்கை நுண்ணறிவு சாதனையாளர்கள், ஆய்வாளர்கள், தொழிலதிபர்கள் - இறுதிப்பகுதி

 





ராஜி

ரம்மன் சௌத்ரி




யி ஸெங்

சீன அறிவியல் துறை, பேராசிரியர்

சீனாவைச் சேர்ந்த பேராசிரியர். யுனெஸ்கோவில் ஏஐ சார்ந்த பாதுகாப்பு விதிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடையே கொள்கை அடிப்படையில் ஒற்றுமை வேண்டும் என கூறுகிற மனிதர். மனிதர்களின் மூளையைப் போல செயற்கை நுண்ணறிவை உருவாக்க மெனக்கெட்டு வருகிறார்.

வில் ஹென்ஷால்

 

ரம்மன் சௌத்ரி

இயக்குநர், நிறுவனர் – ஹியூமன் இன்டெலிஜென்ஸ்

முன்னாள் ட்விட்டர் ஊழியர். எலன் மஸ்கால் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் அங்கு, எந்திரவழிக் கற்றல் கொள்கை சார்ந்த குழுவில் வேலை செய்தார். தற்போது ஹியூமன் இன்டெலிஜென்ஸ் என்ற தன்னார்வ லாப நோக்கற்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அண்மையில் பல்வேறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிய நான்காயிரம் ஹேக்கர்களை வைத்து சோதித்தார். இதன் வழியாக அதன் பாதிப்புகளை எளிதாக கண்டறிய முடிந்தது. ரம்மன் சௌத்ரிக்கு அமெரிக்க அரசு கொடுத்த ஆதரவால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.  குறைகளை கண்டறிந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பணப்பரிசு வழங்கப்பட்டது.

காலிகா பலி

முதன்மை ஆராய்ச்சியாளர், மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் இந்தியா

செயற்கை நுண்ணறிவை வைத்து அழியும் நிலையிலுள்ள மொழிகளைக் காப்பாற்ற முடியுமா என ஆராய்ந்து உழைத்து வருகிறார் காலிகா பலி. இதற்கென தனது வேலை தொடர்பான முன்னேற்றங்களைக்கூட தள்ளி வைத்துவிட்டு, ஐந்து மொழிகளை மேம்படுத்த பல்வேறு டேட்டா மாடல்களை உருவாக்கி ஆய்வு செய்து வருகிறார். இதற்கு மைக்ரோசாஃப்ட்,  பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனங்கள் உதவி வருகின்றன.

மொழியைப் பற்றி எதற்கு செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றால், மொழி தெரியவில்லை என்ற காரணத்திற்காக மக்கள் தொழில்நுட்பத்தை புறக்கணிக்க கூடாது என்பதற்காகத்தான். உள்ளூர் மக்கள் தாங்கள் அறிந்த மொழியிலேயே கணினியை, தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டும். அதற்காகவே காலிகா பலி ஆய்வ செய்து வருகிறார்.

பில்லி பெர்ரிகோ

புஷ்மீட் கோலி

துணைத்தலைவர், கூகுள் டீப்மைண்ட்

மைக்ரோசாஃப்டில் பதினொரு ஆண்டு பணி. பிறகுதான் கூகுளில் வேலைக்குச் சேர்ந்தார். கூகுளின் டீப்மைண்ட் திறமைகளை அறிவியல் ஆய்வுகளுக்கு பயன்படுத்துவதில் கோலிக்கு முழு நம்பிக்கை உள்ளது. தனது குழுக்களை அந்த பணியில் ஈடுபடுத்தி குறிப்பிடத்தக்க விதமாக வெற்றி பெற்றிருக்கிறார். குறிப்பிட்ட புரத அமைப்பு, அமினோ அமிலங்களின் வடிவத்தை தேடி உருவாக்க முன்னர் பல மாதங்கள், ஆண்டுகள் எடுக்கும். இப்போது அவற்றை நொடியில் உருவாக்கலாம். இதன்மூலம் நோய்த்தொற்றுகளுக்கான மருந்தை வேகமாக உருவாக்க முடியும். ஆராய்ச்சிகளை வேகப்படுத்தலாம். இந்த வகையில் டீப்மைண்ட் முக்கியத்துவம் பெறுகிறது.

வில் ஹென்சால்

 

 

 

யான் லே கன்

முதன்மை ஆராய்ச்சியாளர், மெட்டா

மனித மூளையைப் போலவே செயற்கை நுண்ணறிவு என்பதை நம்புகிற ஆராய்ச்சியாளர். இதனால் பல்வேறு இடங்களில் அவமானங்களை சந்தித்தாலும் தான் நம்புகிற நம்பிக்கையை கைவிடவில்லை. மெட்டாவில் முதன்மை ஆராய்ச்சியாளராக உள்ளவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். வீடியோக்களை வைத்து ஏஐக்கு பாடம் சொல்லி வருகிறார். ஏஐ பற்றிய பாதுகாப்பு பயம் பற்றி, புதிய தொழில்நுட்பங்கள் அனைத்திலும் சவால்கள் உண்டுதான் என இயல்பாக கூறி செல்கிறார்.

ஆண்ட்ரூ ஆர் சோ

இனியோலுவா டெபோரா ராஜி

 

2017ஆம் ஆண்டு கிளாரிஃபை என்ற  எந்திரவழிக் கற்றல் நிறுவனத்தில் ராஜி வேலை செய்தார். அவரது வேலை செயற்கை நுண்ணறிவுக்கு தடுக்கப்பட்ட புகைப்படங்களை எப்படி அடையாளம் காண்பது என புரிய வைக்கவேண்டும் என்பதுதான். ஆனால் இந்த வேலையில் அவர் வெற்றி பெற முடியவில்லை. காரணம், இன பாகுபாடு சார்ந்து செயற்கை நுண்ணறிவின் அல்காரிதம் அமைக்கப்பட்டிருந்தது. பலர் இதை சகித்துக்கொள்வார்கள். ஆனால் ராஜி இதை நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதுதான் ராஜியைப் பற்றி நாம் எழுதிக்கொண்டிருக்க முக்கியமான காரணம். கிளாரிஃபைக்கு பிறகு கூகுளில் ஏஐ கொள்கை தொடர்பான பணியில் இருந்தார். இப்போது மொசில்லா பவுண்டேஷனில் வேலை செய்கிறார். இணைய பாதுகாப்பு தொடர்பான கட்டற்ற மென்பொருட்களை சோதித்து பார்த்து வருகிறார்.

அடிப்படையான விஷயங்களில் நேரும் தவறுகள் பற்றி நீங்கள் கேள்வி கேட்கும்போது, அவை பண்டோரா பெட்டியைத் திறப்பது போல மாறிவிடும். நீங்கள் கேட்கும் கேள்வி முக்கியமானது என்கிறார்.

 

இவர்கள் மட்டும்தானா செயற்கை நுண்ணறிவுக்கு வேலை செய்கிறார்கள் என நினைத்துவிடாதீர்கள். இன்னும் ஏராளமானோர் உழைத்து வருகிறார்கள். அதில் குறிப்பிடத்தக்க விஷயங்களை சாதித்தவர்கள் மட்டும்தான் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். வரும் காலத்தில் இன்னும் சாதனையாளர்கள் பற்றி பார்ப்போம்.

டைம் வார இதழ் 100 /ஏஐ


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்