ஒரு குழந்தையை வளர்க்கும் மூன்று திருமணமாகாத இளைஞர்கள்!

 

 









த்ரீ டாட்ஸ்

ஜே டிராமா

ராக்குட்டன் விக்கி

 

ஜப்பான் டிராமா.

மூன்று திருமணமாகாத இளைஞர்கள். இருவர் கார்ப்பரேட் அலுவலகம் செல்லும் ஆட்கள். இதில்,  ஒருவர் மட்டும் எந்த சேமிப்பும் இல்லாமல் பெரிய கனவு இல்லாமல் வாழும் ஆள். அவர்தான் டக்குன். தொடருக்கு அவர்தான் நாயகன். எந்த நேர்த்தியும் ஆபீசுக்கு லேட்டாக போவது, மேனேஜரிடம் திட்டு வாங்குவது, குட்டைப்பாவாடை அணிந்த பெண்களின் கால்களுக்கு கீழ் ஃபைலை தவறவிட்டு தேடுவது என அனைத்து தில்லாலங்கடி வேலைகளையும் செய்கிறார். இவரைப் போலவே ஆபீஸ் போகும் இன்னொருவருக்கு கல்யாணம் கூட நிச்சயமாகிவிடுகிறது. அடுத்து, உடைகளை தைத்து விற்கும் ஃபேஷன் டிசைனர் ஒருவர். இவர் பிறர் வணக்கம் சொன்னால் கூட பதிலுக்கு சொல்லாமல் அமைதியாக செல்லக்கூடியவர்.

இந்த நேரத்தில் அவர்கள் தங்கியுள்ள அறையில் ஒரு இளம்பெண் நுழைந்து குழந்தை ஒன்றை வைத்துவிட்டு சென்றுவிடுகிறாள். அதில் இந்த குழந்தை உன்னுடைய குழந்தை என்று எழுதியிருக்கிற ஒரே ஒரு துண்டுச்சீட்டு. மூவருக்கும் எக்ஸ் காதலிகள் உண்டு. யார் கர்ப்பமாக இருந்தார் என யாருக்கும் திட்டமாக தெரியவில்லை. இந்த லட்சணத்தில் யாருடைய குழந்தை என்று நினைத்து பார்த்துக்கொள்வது  என்று தெரியவில்லை.

மூவரும் ஒருவரையொருவர் சந்தேகப்பட்டு உன்னுடைய குழந்தையா என கேட்டுக்கொள்கிறார்கள். ஆனால் குழந்தையை எங்கே கூட்டிச்சென்று கொடுப்பது என்று தெரியவில்லை. எனவே, அதை தாங்களே பராமரிப்பது என முடிவெடுக்கிறாரகள். டக்குன் வேலை செய்யும் அலுவலகத்தில் நர்சரி உள்ளது. எனவே, அங்கு செல்ல வசதியாக டக்குனிடமே குழந்தையை வளர்க்க தள்ளிவிடுகிறார்கள் இரு நண்பர்களும். அதை டக்குனாலும் மறுக்க முடியவில்லை. ஏனெனில் அவரிடம் குழந்தைக்கு செலவழிக்க காசு இல்லை. எனவே,  அதைப் பார்த்துக்கொள்ள வேறுவழியின்றி சம்மதிக்கிறார்.

இந்த குழந்தை மூவரின் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. மூவரும் பிறரைப் பற்றி கவலைப்படாமல் வாழ்கிறார்கள், குழந்தையைப் பராமரிக்கும் வேலையில் அவர்கள் தங்கள் வேறுபாடுகளை மறக்கிறார்கள். ஒரே அறையில் தங்கியிருந்தாலும் கூட சாப்டியா என்று கூட பிறரிடம் கேட்காமல் இருப்பவர்கள், பின்னாளில் ஒருவரையொருவர் காப்பாற்ற தங்களை இழக்கவே துணிகிறார்கள்.

டக்குனை பள்ளிப்பருவத்தில் இருந்தே ஜனா என்ற பெண் தோழி காதலிக்கிறாள். அவளுக்கு அவனை மணந்து பிள்ளை பெற்றுக்கொண்டு நல்ல அம்மாவாவதுதான் கனவு. இந்த நேரத்தில் அவன் வளர்க்கும் குழந்தையை பெரும்பாலும் அவளே பார்த்துக்கொள்கிறாள். எல்லாம் அவன் மீதான காதலுக்காக. இத்தனைக்கும் அவள் நர்சரியில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் ஆசிரியராக வேலை செய்கிறாள். அந்த நர்சரி கூட டக்குன் அலுவலகத்தில்தான் இருக்கிறது.

 ஆபீசுக்கு வேலைக்கு செல்லும் இன்னொரு ரூல்ஸ் பேசும் நண்பணின் பெண் தோழியாக ருய் இருக்கிறாள். அவளுக்கு தனது ஆண் தோழன் தன்னை ஏமாற்றுவது போல தோன்ற அறைக்கு வந்து பார்க்கிறாள். அங்கே குழந்தையையும், அவளது ஆண் தோழனையும் பார்த்து சந்தேகப்படுகிறாள். கூடவே, அவர்களது அறையை வாடகைக்கு விட்ட மினாக்கோ என்ற பெண்மணியும் மூன்று ஆண்கள் ஒரு குழந்தையை வளர்ப்பதை பார்த்து விடுகிறாள். அவள் அதை டக்குன், ஜனா ஆகியோருக்கு பிறந்த  குழந்தை என நினைத்துக்கொள்கிறாள்.

இந்த நிலையில் குழந்தையை ஓராண்டாக அங்கு வளர்க்கிறார்கள். அந் நிலையில், டிவியில் ஒரு அறிவிப்பு வருகிறது. அவர்கள் வளர்க்கும் குழந்தையின் போட்டோவைக் காட்டி, குழந்தை  காணாமல் போய்விட்டது. கண்டுபிடித்து கொடுங்கள் என்று கூறப்படுகிறது. இப்போது மூன்று ஆண் நண்பர்களும் நாம் கடத்தல்காரர்கள் ஆகிவிட்டோமே என பயங்கொள்கிறார்கள். குழந்தை அவர்களது வாழ்க்கையில் முக்கிய பகுதியாகிவிட்டது. எனவே, அதை விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. உண்மையில் அந்த குழந்தையை யார் கொண்டு வந்து வைத்ததுஎன்பதுதான் முக்கியமான திருப்பம்.

மனித உறவுகளை தேவைகளைப் பொறுத்து பயன்படுத்தி வந்த மூன்று நண்பர்கள், குழந்தையை வளர்க்கும் பொறுப்பை கையில் எடுத்து எப்படி  தன்னளவில் மாறுகிறார்கள், அன்பால் கனிகிறார்கள் என்பதே தொடரின் கதை.

நகைச்சுவையும் நெகிழ்ச்சியான உணர்வும்தான் தொடரின் முக்கியமான அம்சம்.

கோமாளிமேடை டீம்

Profile

  • Drama: Three Dads (English title) / 3 Papas (literal title)
  • Romaji: Sannin no Papa
  • Japanese: 3人のパパ
  • Director: Shingo Okamoto
  • Writer: Shota Koyama
  • Network: TBS
  • Episodes: 10
  • Release Date: April 19 - June 21, 2017
  • Runtime: Wednesday 23:56-24:06 (30 min.)
  • Genre: Comedy / Fatherhood
  • Language: Japanese
  • Country: Japan

கருத்துகள்