இவான் பாவ்லோவ் செய்த உளவியல் ஆராய்ச்சி

 

 

 

 

 

இவான் பாவ்லோவ்

 

 

1890ஆம் ஆண்டு, ரஷ்ய மருத்துவரான இவான் பாவ்லோவ் உளவியல் கோட்பாடுகளை ஆய்வு மூலம் அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு நிரூபிக்க நினைத்தார். விலங்குகளை பழக்க முடியும். அவற்றை குறிப்பிட்ட முறையில் பழக்கி எதிர்வினையைப் பெறலாம் என்பதே இவானின் ஆய்வு நோக்கம். ஆய்வகம் என்பது கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளைக் கொண்ட இடம். அங்கு விலங்குகளை வைத்து சோதனை செய்து அதன் வழியாக முடிவுகளைப் பெறுவது, அதை வைத்து சோதனைகளை மனிதர்களுக்கு செய்வது என்பதே இறுதி திட்டம்.

ஒருவரின் குணநலன் என்பது அவர் வாழும் சூழலோடு தொடர்புள்ளதாகவே உள்ளது. அதன் அடிப்படையில்தான் குண மாறுதல்கள் அடையாளம் காணப்படுகின்றன. ஊக்கமூட்டுதல் – எதிர்வினை என்ற கோட்பாட்டை ஜான் வாட்சன் உருவாக்கினார். இந்தக் கோட்பாடு ஒரு சிறிய உதாரணம்தான். இதன் அடிப்படையில் ஏராளமான கோட்பாடுகள் உருவாகின. அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள மக்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள முயன்றனர்.

அப்போது, வியன்னா நாட்டைச் சேர்ந்த நரம்பியலாளர் மனம் பற்றிய புதிய கோட்பாட்டை உருவாக்கினார். அதுவரை உளவியல் பற்றிய ஆய்வறிக்கைகள் கோட்பாடுகள் என அனைத்தும் ஆட்டம் கண்டன. உளவியலாளர் சிக்மண்ட் ஃபிராய்ட் செய்த உளவியல் ஆய்வுகளில், நினைவுகள், சிறவயது மன மேம்பாடு, குடும்ப உறவுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக பார்க்கப்பட்டன. இன்று அவரது ஆய்வுக் கொள்கைகளில் இருந்து உளவியலாளர்கள் வெகுதூரம் வந்துவிட்டனர். ஆனால் சிக்மண்ட் தனது கருத்துகளை கூறியபோது, அதைப் புரட்சியான கருத்தாகவே மருத்துவர்கள் பார்த்தனர். நோயாளிகள் மருத்துவர்களிடம் தங்கள் மனதில் உள்ள கடந்த கால வலி, வேதனைகளை பேசுவது டாக்கிங் கல்ச்சர் என கூறப்பட்டது. இந்த முறை இன்றுவரையும் கூட பல்வேறு பெயர்களில் தொடர்ந்து வருகிறது.

20ஆம் நூற்றாண்டில் குணநலன்கள், உளவியல் வாய்வு என இரண்டுமே உளவியல் செயல்பாடுகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, கெசால்ட் உளவியலாளர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் உளவியலை புனிதமான ஒன்றாக எடுத்துக்கொண்டு ஆய்வுகளை செய்து வந்தனர். இவர்கள் உளவியல் காட்டும் கோணத்தை அறிய முயன்றனர்.

இந்த நேரத்தில்தான் புலனுணர்வு சார்ந்த உளவியல் ஆய்வுகள் புகழ்பெறத் தொடங்கி. இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய காலங்களில் கெசால்ட் ஆய்வாளர்களின் ஆய்வு விரிவடையத் தொடங்கியது. 1950ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புலனுணர்வு சார்ந்த உளவியல் வலுப்பெறத் தொடங்கியது. கணினி அறிவியல், தகவல்தொடர்பு ஆகிய துறைகள் வளர்ச்சி பெற்றதால், உளவியல்துறையும் அதன் பயன்களைப் பெற்றது. நினைவுகள், கோணம், கவனம், மொழிகளைக் கற்பது, அதில் ஆளுமை செலுத்துவது, முடிவுகளை எடுப்பது, ஊக்கம் பெறுவது ஆகியவற்றை உளவியல் துறையினர் மாதிரிகள் மூலம் ஆய்வு செய்து அடையாளம் கண்டனர்.

தொடக்கத்தில் உளவியல் என்பது தனிநபரின் குணநலன், மனதிலுள்ள எண்ணங்களை அறிவது என்று மட்டுமே இருந்தது. பின்னாளில்தான் ஒருவர் வாழும் சூழ்நிலை, பிறரோடு தொடர்புகொள்வது ஆகியவை ஆய்வில் இணைந்தன. மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சீராக்கி அவர்களின் வாழ்வை நல்முறையில் கொண்டு செல்ல உளவியலாளர்கள் முயன்றனர்.


புகைப்படம் - தாட் கோ


கருத்துகள்