செய்தி ஆதாரங்களை பாதுகாப்பது முக்கியம்

 









பத்திரிகையாளர்களுக்கு செய்திகளைக் கொடுக்கும் ஆதார ஆட்கள் பல்வேறு துறைகளிலும் இருப்பார்கள். இவர்கள், பத்திரிகையாளர்கள் எழுதிக் கொடுக்கும் செய்தியில் ஆதிக்கம் செலுத்துவார்கள். செய்தி ஆதார மனிதர்கள் இல்லையென்றால் துறைசார்ந்த பல்வேறு முக்கிய தகவல்களை நாளிதழ்களில் எழுதுவது சாத்தியப்படாது.

செய்திகளைத் தரும் ஆதாரங்களிடம் தொழில்முறையாக நேர்மையாக, மரியாதையாக நடந்துகொண்டு வருவது முக்கியம். செய்தி ஆதாரங்களிடம் மிகவும் நெருங்கிப் பழகுவது, செய்தியைப் பார்க்கும் கோணத்தை மாற்றிவிடும். எனவே, சற்று தள்ளி இருந்து செய்திகளைப் பெறுவது நல்லது. இந்த முறையில் செய்திகளை பல்வேறு கோணத்தில் பார்வையில் பார்த்து எழுத முடியும். பத்திரிகையாளர், ஆதார மனிதர்கள் என இருதரப்பிலும் நம்பிக்கை உருவாவது முக்கியம். அப்போதுதான் செய்திகளை எளிதாக பெறமுடியும்.

செய்தி ஆதார மனிதர்களின் பெயர்களை, பத்திரிகையாளர் எந்த சூழ்நிலையிலும் வெளியிடக்கூடாது. வெளியிடும் செய்தி காரணமாக பத்திரிகையாளர் அரசு அதிகாரத்தால் மிரட்டப்படும்போது கூட செய்தி ஆதார மனிதர்களை பாதுகாக்க வேண்டும். செய்தி ஆதார மனிதர்கள் கொடுத்த ஆதாரங்கள், ஆவணங்கள் தவறானவை என்ற தருணத்தில் மட்டும்  செய்தியை மக்களிடம் நம்ப வைக்க அவர்களின் பெயரை கூறலாம். மற்றபடி செய்தி ஆதார மனிதர்களை பத்திரிகையாளர்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இதுதான் அடிப்படைக் கொள்கை.  

செய்தி ஆதார மனிதர்களின் அடையாளத்தை வெளியிடும்போது அவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உண்டு. இதன் அர்த்தம், நீங்கள் செய்தி ஆதார மனிதர்களைப் பற்றி  உங்கள் நாளிதழ் ஆசிரியருக்குக் கூட சொல்லக்கூடாது என்பதல்ல. செய்தி நிறுவனத்தில் யாருக்குத் தேவையோ அவர்களிடம் இந்த தகவல்களை வெளியிடலாம். மற்றபடி ரகசியம் காப்பது அவசியம்.

 tenor.com


 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்