பொது விவகாரங்களில் பிரபலங்களின் கருத்து!

 













வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குற்றச்செயல்களை செய்த இளையோர் ஆகியோரைப் பற்றிய செய்திகளை எழுதும்போது கவனம் தேவை. சிறுவர்களைப் பற்றிய செய்தியை எழுதுகிறீர்கள் என்றால் முறையாக பெற்றோர், ஆசிரியர், சட்டரீதியான பாதுகாவலர் ஆகியோரிடம் அனுமதி பெற்று புகைப்படங்களை எடுத்து பிரசுரிக்கலாம்.

சில குற்ற வழக்குகளில் இளையோர் தொடர்பு இருந்தால் அதில் நீதிமன்றத் தலையீடுகள் இருக்கலாம். எனவே, செய்திக்காக அவர்களின் புகைப்படங்களை எடுத்து பிரசுரிக்க கூடாது. அப்படி பிரசுரம் செய்தால், தொடர்புடைய இளையோருக்கு பாதிப்பு நேரிடலாம். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

சினிமா பிரபலங்களை, அவர்களின் கருத்துகளை  வெளியிட்டு சம்பாதிக்கும் நிறைய வார, மாத இதழ்கள் உண்டு. இந்த வகையில்  செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு அடையாளமே குறிப்பிட்ட பிரபலங்களை தேடிப்பிடித்து பேசியதால் கிடைத்த புகழ்தான். எனவே, இதுபற்றிய செய்தியில்  ஜாக்கிரதை தேவை.  பிரபலங்களைப் பற்றிய தொழில் சார்ந்த செய்திகளால் இதழ் வளரலாம். அதேசமயம் பிரபலங்களின் குடும்பம் பற்றி எழுதும்போது, கவனமாக இருப்பது நல்லது.

பொது விவகாரங்களில்  மக்கள் பிரச்னைகளில் பிரபலங்களிடம் சில பத்திரிகையாளர்கள் கருத்து கேட்பார்கள். உண்மையில் அப்படி கருத்து கேட்பதால் அந்த செய்திக்கு என்ன முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை பத்திரிகையாளர் முடிவு செய்துகொள்வது முக்கியம். இல்லையெனில் பிரபலத்திற்கும், அக்கருத்தை பதிவு செய்த பத்திரிகையாளரான உங்களுக்கும் நிறைய பிரச்னைகள் உருவாகலாம்.

-------------------------

இப்போது சில சூழ்நிலைகளைப் பார்ப்போம். இதற்கான பதில்களை நீங்கள்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

 

வெளிநாட்டினர் அடிக்கடி வந்து போகும் மதுபான விடுதி. அங்கு திடீரென வெடிகுண்டு வெடிக்கிறது. காவல்துறை அதிகாரி, இதுதொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறோம். ஆனால் அவர் மீது வழக்கு பதியவில்லை என்று கூறுகிறார்கள். பிடித்து வைத்து விசாரிக்கப்படுபவர், சிறுபான்மையின மக்களைச் சேர்ந்தவர். அவரின் வயது,தொழில் ஆகியவை உங்களுக்குத் தெரிய வருகிறது. நீங்கள் நாளிதழுக்கு என்ன தகவல்களை எழுதிக் கொடுப்பீர்கள். இந்த விவகாரத்தில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்னென்ன?

முன்னணி கட்டுமான நிறுவனம் ஒன்று, தனது நிறுவனத்தின் புதிய செயல் தலைவரை அறிவிக்கிறது. புதிய தலைவர் பெண்மணி. அவர்தான் நாட்டிலேயே முதல் பெண் செயல் தலைவராக பதவியேற்கவிருப்பவர். அவருக்கு மூன்று குழந்தைகள் உண்டு. உள்ளூர் பல்கலைக்கழகத்தில் பெண்மணியின் கணவர் இசை ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்த செய்தி நாளிதழில் பிரசுரிக்க ஏற்ற இயல்பில் உள்ளதா, அப்படி இருந்தால் அந்த தன்மைகள் என்னென்ன என்று  கூறுங்கள்.

பிரபல பாடகர் ஒருவர், இளையோர்களிடம் பரவி வரும் குடிப்பழக்கத்தை தவிர்க்க அரசைத் தூண்டும் வகையில் பேரணித் திட்டம் ஒன்றில் ஈடுபட்டிருக்கிறார். இருபத்தொரு வயதுக்கு குறைவானவர்களிடம் மது விற்பனை செய்யக்கூடாது என பிரசாரம் செய்வதே திட்டம். அப்போதுதான் காவல்துறை, குடிபோதையில் வண்டியோட்டி வந்ததாக பத்தொன்பது வயது இளம்பெண்ணை கைது செய்கிறார்கள். அவர், பேரணியை ஏற்பாடு செய்து வரும் பாடகரின் மகள். நீங்கள் அந்த பாடகரின் மகளைப் பேட்டி எடுப்பீர்களா, அந்த செய்தியை நாளிதழில் பிரசுரிப்பீர்களா?

 குக்கிராமத்தில் இயங்கி வரும் குழந்தைகளுக்கான பள்ளி. எட்டு மாணவர்கள்தான் பள்ளியில் இருக்கிறார்கள். அங்கு ஒரு மாணவரை பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தியதாக பள்ளி ஆசிரியர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், நீதிமன்றம் வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் பெயரை வெளியிடக்கூடாது என கூறியிருக்கிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் உங்களைச் சந்தித்துப் பேசுகிறார். பேட்டி தர ஒப்புதல் தருகிறார். நீங்கள் அந்த சிறுவனை சந்தித்து பேட்டி எடுப்பீர்களா?

நன்றி

தாம்சன் ராய்ட்டர் பவுண்டேஷன்

டெனர்

கருத்துகள்