ரிட்ஸ் கிராண்ட் ஹோட்டலில் நடக்கும் பார்ட்டியில் பழிக்குப்பழி சம்பவங்கள்! - ஹேப்பி பர்த்டே

 











ஹேப்பி பர்த்டே

தெலுங்கு

வெண்ணிலா கிஷோர், சத்யா, லாவண்யா திரிபாதி, நரேஷ் அகஸ்தியா

ஹேப்பி என்ற கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கு பிறந்தநாள். அதை அவர், ரிட்ஸ் கிராண்ட் எனும் ஹோட்டலில் கொண்டாட நினைக்கிறார். ஜாலியாக பார்ட்டி செய்ய நினைக்கிறார். ஆனால், ஹோட்டலுக்குள் நுழைந்து பார்த்தால் அங்கு முழுக்க குடும்பங்கள் அதுவும் வயதான ஆட்களாக வந்திருக்கிறார்கள். எனவே, புஷ் பப் எனும் இடத்திற்கு ஹேப்பி செல்ல, அங்கு அவளுக்கு பாரில் உள்ள ஆள் மதுவில் மயக்க மருந்தைக் கலக்கி கொடுக்கிறார். இதனால் அவள் குத்துப்பாட்டு ஒன்றை வேகமாக ஆடிமுடித்து மயங்குகிறாள். பின்னர், காரில் அடைக்கப்படுகிறாள். அவளுக்கு என்னவானது|?  மயக்க மருந்தை மதுவில் கலந்து கொடுப்பவன் யார்? என்பதற்கான விடை தேடினால் படத்திற்குள் நீங்கள் நுழைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

ஹேப்பி பர்த்டே, வழக்கமான தெலுங்குப்படமல்ல. படம் முழுக்க அவல நகைச்சுவை காட்சிகளும், வசனவழி நகைச்சுவையும் நிறைந்துகிடக்கிறது.

படத்தை முழுமையாக கையில் எடுத்து சாதித்திருப்பது வெண்ணிலா கிஷோர்தான். அவரின் பாத்திரமே சற்று வேறுபட்டது. அதை அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதும் முக்கியமானது. லாவண்யாவின் பின்பகுதி பிளாஷ்பேக் காட்சி நன்றாக இருக்கிறது. 

குண்டா, மேக்ஸ் பெய்ன், அங்கிள் ஃபிக்ஸ் இட், ஸ்னைப்பர் சாம், தேகாகு எனும் ரகசிய அமைப்பு என படம் நெடுக வினோதமான உடல்மொழியும், வசனங்களும் கொண்ட ஏராளமான பாத்திரங்கள் உண்டு. இதில், ஹோட்டலில் வேலை செய்யும் லக்கி என்பவர்தான் ஏறத்தாழ நாயகன் அளவுக்கு இருக்கிறார். அவரும் அவரது தங்கைகளும் மொபைல் டேட்டா, வைஃபையில் பேசும் காட்சிகள் சற்று மிகையாக உள்ளன. இருந்தாலும் இந்த படமே சற்று காமிக்கலான படம். எனவே, அதை ஏற்றுக்கொள்ளலாம். வேறு வழியில்லை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

மேக்ஸ் பெய்னாக வரும் சத்யாவின் காமெடி அதிரடி. அவர் பாரில் அங்கிள் ஃபிக்ஸ் இட்டிடம் பேசும் காட்சி, பாதுகாப்புத்துறை அமைச்சர், ரஷ்ய தொழிலதிபர் ஆகியோருக்கு இடையில் ட்ரான்ஸ்லேட்டராக பேசும் காட்சி ஆகியவற்றைக் கூறலாம்.  

தொடக்க காட்சியில் பேசும் துப்பாக்கி அரசியல், அநேகமாக இயக்குநரின் அரசியல் கருத்தாக இருக்கலாம். அதையும் லாஜிக்காக பொருந்தும்படி அமைச்சரின் பேட்டியில் பொருத்தியிருக்கிறார். கற்பனையான நாட்டில் நடப்பதாக காட்டினாலும் எதிர்காலத்தில் இந்தியாவில் துப்பாக்கி, வெடிகுண்டுகளை வைத்துக்கொள்வதற்கான சட்டங்கள் வரலாம். அத்தனைக்கும் ஆசைப்படு என்பதுதானே இன்றைய வாழ்க்கை….

இந்த உலகமே வேண்டாம். எனக்கு வேறு ஒரு உலகம் வேண்டும் என்றால் ஹேப்பி பர்த்டே படத்திலுள்ள உலகம் உங்களை வசீகரிக்கும். படத்தை இயக்குநர் முடிந்தளவு நன்றாக எடுத்திருக்கிறார். படம் தியேட்டருக்கான படமாக இல்லை. பெரும்பாலும் க்ரீன்மேட் அல்லது செட் போட்டு எடுத்த அனுபவத்தைக் கொடுக்கிறது. இதை மைனஸ் என்றுதான் சொல்லவேண்டும். இதை சற்றேனும் குறைப்பது வினோதமான பாத்திரங்கள்தான். படத்தில் நிறைய ட்விஸ்டுகள் உள்ளன. அதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஜகமே மந்திரம் ஸோ பீ ஹேப்பி

கோமாளிமேடை டீம்

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்