நிலவொளிரும் மலைகள் - முத்தாரம் கடைசிபக்க நேர்காணல்கள் - மின்னூல் வெளியீடு

 








முத்தாரம் இதழ் தொடக்கத்தில் பொது அறிவுக் களஞ்சியமாக மாற்றப்படாதபோது, கிளுகிளுப்பான தொடர்களைக் கொண்டு சற்று ஜனரஞ்சமாக இருந்தது. வயதான அதன் வாசகர்கள அதில் நிறைய சரித்திரக் கதைகளைப் படித்திருப்பார்கள். எனது பணிக்காலத்த்தில் பொது அறிவுக் களஞ்சியம் என்ற வகையில் அதன் கேப்ஷனுக்கு ஏற்ப ஏதேனும் மாற்றங்களை செய்யவேண்டும் என முயன்றேன் 

தடைகள் இருந்தாலும் விடாப்பிடியாக நின்று பக்க எண்கள் வடிவமைப்பு, தொடருக்கான லோகோ ஆகியவற்றை தனியாக வரைந்து வாங்கி பயன்படுத்தினோம்

இந்தியா டுடேவின் சில நேர்காணல்களை படித்தேன். அதில் கடைசிபக்க நேர்காணல் நன்றாக இருக்கும். குறைந்த கேள்விகள், வடிவமைப்பு நுட்பமாக இருக்கும். இன்று வரைக்கும் அந்த இதழில் அப்பகுதி தடைபடாமல் வருகிறது. பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் வருவார்கள். அந்த ஐடியாவை உருவி, வடிவத்தை மாற்றி முத்தாரத்தில் பயன்படுத்தியதுதான் கடைசிபக்க நேர்காணல், இதை முத்தாரம் மினி என்று பெயர்வைத்து செய்தோம்.

 அப்போது குங்குமம் முதன்மை ஆசிரியர் கே.என். சிவராமன் புதிதாக வந்திருந்தார். பத்திரிகையாளர் தி.முருகன் வேறு இதழுக்கு சென்றிருந்தார். திரு.கே.என்.சிவராமன் அவர்கள் குங்குமத்தில் நிறைய மாற்றங்களைச் செய்தார். அதை வைத்தே முத்தாரத்தில் மாற்றங்களை செய்யலாம் என மல்லுக்கட்டினோம். 

இந்தியா டுடே வார இதழே, அமெரிக்க வார இதழ் டைம் இதழின் காப்பி என பின்னாளில்தான் தெரிந்தது. அதனால் என்ன, வடிவத்தை எடுத்து தமிழுக்கு ஏற்றபடி செய்துகொண்டோம் என திருப்தி. முத்தாரத்தில் நான் உதவி ஆசிரியராக இருந்தவரை முத்தாரம் மினி பகுதியை கொண்டு வந்தேன். 

முத்தாரம் மினி என்று பெயரிட்ட பகுதியில் அந்த வாரத்தில் முக்கியமான ஆட்கள், மனிதர்கள் பற்றிய மொழிபெயர்ப்பு நேர்காணல் வெளியானது. நான்கு கேள்விகள் அல்லது மூன்று கேள்விகள்தான் இருக்கும். பேட்டி எடுப்பவரைப் பற்றிய முன்குறிப்பு கூட கிடையாது. பெயர், அவர் செய்துவரும் தொழில் அல்லது வகிக்கும் பதவி அவ்வளவுதான். வேறு விஷயங்களை நீங்களேதான் தேடி பார்த்துக்கொள்ளவேண்டும். இந்தப் பகுதியில் ஊடகம் பற்றிய ஸ்டிங் ஆபரேஷன் செய்த வலைத்தளம் பற்றிய செய்தியை மட்டுமே முத்தாரத்தில் பிரசுரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. மற்றபடி அனைத்து செய்திகளையும் பிரசுரிக்க அனுமதி கிடைத்தது. 

குறிப்பிட்ட காலத்தை நினைவுபடுத்திக்கொள்வதுதான் நிலவொளிரும் மலைகளைப் படிப்பதன் மூலம் சாத்தியமாகும் விஷயம். வேறெதுவும் இல்லை. நன்றி!



அமேஸான் வலைத்தளத்தில் நூலை தரவிறக்கி வாசிக்க....


https://www.amazon.in/dp/B0BVLL7CFH

கருத்துகள்