கார்பன் குழந்தைகளை பெற்றுக்கொள்ள தயக்கமா?




Prince Harry, Duke of Sussex and Meghan, Duchess of Sussex, pose with their newborn son Archie Harrison Mountbatten-Windsor during a photocall in St George's Hall at Windsor Castle on May 8, 2019 in Windsor, England. The Duchess of Sussex gave birth at 05:26 on Monday 06 May, 2019. (Photo by Dominic Lipinski - WPA Pool/Getty Images)


டாக்டர். எக்ஸ்

குழந்தைகளின் பிறப்பு குறைந்து மக்கள் தொகை குறைந்தால் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா?

வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகை குறிப்பிட்ட கட்டுப்பாட்டில் உள்ளது. காரணம், இங்கு அரசு இடையறாது செய்யும் விளம்பரங்கள், பிரசாரங்கள்தான். மூன்றாம் உலக நாடுகளில் இதுதொடர்பான பிரசாரங்கள் 1970களில் தொடங்கின. என்ன விளைவு ஏற்பட்டது? பெருமளவு குடும்பங்களில் இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தை போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். ஆனால் அரசு இதனைத் தொடர்ச்சியானதாக கடைபிடிக்கவில்லை.

பிரின்ஸ் ஹாரி, மேகன் இரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்வது என முடிவெடுத்துள்ளனர். பாப்புலேசன் மேட்டர்ஸ் எனும் இங்கிலாந்தைச் சேர்ந்த அமைப்பு சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விஷயங்களைப் பற்றி மக்களுக்கு பிரசாரம் செய்து வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த சூழலியலாளர் எம்மா ஆலிஃப், உயிரியல்ரீதியாக குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்ற முடிவில் இருக்கிறார். இது சாத்தியமாகுமா என்பது வேறுகதை. ஆனால், அப்படி ஒரு எண்ணம் மக்களின் மனதில் வந்துவிட்டதற்கான காரணம்தான் முக்கியம்.

இந்தியர்கள் சராசரியாக இரண்டு டன்கள், அமெரிக்கர்கள் இருபது டன்களும், இங்கிலாந்துக்கார ர்கள் ஏழு டன்கள் என கார்பனை வெளியிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதை வைத்துத்தான் இன்று குழந்தை பிறந்தால் எவ்வளவு கார்பன் வெளிவரும் என கணிக்கிறார்கள். இதன் அடிப்படையில் குழந்தைகளின் பிறப்பு வேண்டாம் என்று கூறுகிறார்கள். சரியோ, தவறோ உங்கள் குழந்தைக்கு சரியான வாழ்க்கையை உங்களால் அமைத்துத் தரமுடியும் என்றால் அவர்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். பெற்றுவிட்டவர்கள் பயப்படவேண்டாம். அவர்களை முறையாக மாசுபடுத்துதல் பிரச்னையின்றி விழிப்புணர்வோடு வளர்க்கலாம்.

நன்றி: பிபிசி



பிரபலமான இடுகைகள்