ஆன்டிபயாடிக் அபாயம்! - மக்களை பலிகொள்ளும் துயரம்!
மிஸ்டர் ரோனி
வெப்பமயமாதலை ஆன்டிபயாடிக் அதிகரிக்கிறதா?
பென்சிலின் எதிர் நுண்ணுயிரி என்று நீங்கள் அறிவீர்கள். அதன் பின்னரே காயங்கள் பட்டு இறக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர். நோய்த்தொற்று என்பது அவ்வளவு கொடுமையானதாக அன்று இருந்தது.
இன்றும் கூட பல்வேறு உறுப்பு மாற்ற சிகிச்சைகள், முக்கியமான அறுவை சிகிச்சைகளில் எதிர் நுண்ணுயிரி மருந்துகளின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. ஆனால் தொட்டதற்கெல்லாம் இவற்றை நீங்கள் பயன்படுத்தினால் நம்மைத் தாக்கும் கிருமிகள் வலிமை பெற்று எழும். மீண்டும் இவை நம்மைத் தாக்கும்போது எதிர் நுண்ணுயிரி மருந்து வேலை செய்யாது. இதன் காரணமாக எதிர் நுண்ணுயிரி மருந்துகளை அதிகம் பயன்படுத்தாதீர்கள் என பிரசாரம் செய்து வருகின்றனர்.
தற்போது உலகில் பல நாடுகளிலும் நோய்த்தொற்று காரணமாக ஏழு லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இந்த எண்ணிக்கை இனி குறையாது. இன்னும் கோடிகளுக்கு மேல் பலியாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.
ஆன்டி பயாடிக்கை நான் பயன்படுத்தவே இல்லை என்று யாரும் கூறமுடியாது. நாம் குடிக்கும் பாலில் ஏராளமான ஆன்டி பயாடிக் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவை நம் உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மேலும் இன்று நகரில் விற்கும் ஆர்கானிக் இறைச்சிகளிலும் இப்பிரச்னை உள்ளது. எனவே முடிந்தளவு பாக்டீரியாக்களை வேதிப்பொருட்களைக் கொண்டு சமாளிப்பதை குறைத்தாலே எதிர் நுண்ணுயிரி மருந்துகளின் பிரச்னை இருக்காது.
நன்றி - பிபிசி