காஷ்மீரில் இணையம் நிறுத்தம்!






Image result for kashmir




சிறப்பு அந்தஸ்து விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு, ஏறத்தாழ 60 நாட்களுக்கு மேலாக அங்கு இணையம் செயல்படவில்லை. அனைத்து சமூக வலைத்தளங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காரணம் கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு வன்முறை ஏற்படும் பயம்தான். இனி பியூட்டிஃபுல் காஷ்மீர் என நிச்சயம் பாட முடியாது. மாநிலமே கொந்தளிப்பில் கிடக்கிறது. எனவே அங்கு செயல்பட்டு வந்த இணைய இணைப்பு பற்றிய டேட்டா இதோ.....

அக்டோபர் 3 ஆம் தேதியோடு அறுபது நாட்கள் காஷ்மீரில் இணையம் தடைசெய்யப்பட்டு இருக்கிறது.


2012 ஆம் ஆண்டு 180 முறை இணையம் தடை செய்யப்பட்டு உள்ளது. 2019 இல் இதுவரை 55 முறையும், கடந்த ஆண்டில் 68 முறையும் இணையம் தடை செய்யப்பட்டுள்ளதாக மென்பொருள் சுதந்திர சட்ட மையம் தகவல் கூறுகிறது.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் இணைய இணைப்பு துண்டிப்பு 196 முறை நடைபெற்றிருக்கிறது.இதில் இந்தியாவில் மட்டும் 134 முறை நடந்திருக்கிறது. பாகிஸ்தான் என்று கேள்வி வருமே? ஆம் அங்கு 12 முறை இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.


புர்கான் வானி படுகொலையான பின்னர் மொபைல் இணையம் 133 முறை காஷ்மீரில் தடை செய்யப்பட்டுள்ளது.


- இந்தியா டுடே


பிரபலமான இடுகைகள்