10 ஆயிரம் கோடி ரூபாயை டிராமா ஆடி கொள்ளையடிக்கும் டுபாக்கூர் கில்லாடி - கில்லாடி - ரவிதேஜா, டிம்பிள், மீனாட்சி

 












கில்லாடி 


ரவி தேஜா, டிம்பிள் ஹயாதி, மீனாட்சி சௌத்ரி, முரளி சர்மா, வெண்ணிலா கிஷோர், அனுசுயா


பணம் மட்டுமே முக்கியம் என நம்பும் கில்லாடி ஒருவன், இந்தியாவில் பத்தாயிரம் கோடியை கொள்ளையடிக்கும் கதை. 


இந்திய அரசியல்வாதி ஒருவர், எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து மாநில முதல் அமைச்சர் ஆக நினைக்கிறார். இதற்காக அவர் பத்தாயிரம் கோடியை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வருகிறார். அதை கார்ப்பரேட் நிறுவனம் மூலம் அரசியல்வாதிகளுக்கு விநியோகிக்க நினைக்கிறார். இதை தடுக்கும் வரிவருவாய்துறை, பிற அரசியல்வாதிகளின் குழு, கில்லாடி திருடன் மோகன் காந்தி. இவர்களில் யார் பணத்தை கொள்ளையடித்தார்கள், வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இறுதிப்பகுதி. 


படத்தில் மோகன் காந்தியாக எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் பணம் அதை எப்படியாவது திறமை காட்டி கொள்ளையடிக்கவேண்டும் என ஆர்வத்தோடு திரியும் பாத்திரத்தில் ரவி தேஜா அசத்தியிருக்கிறார். இவருக்கு அடுத்து உடல் வளைத்து உழைத்திருக்கிறவர் வேறு யார் டிம்பிள் ஹயாத்திதான். 


பணத்தை கொள்ளையடிப்பது பற்றி கில்லாடி பாடலில் நெடுக சொல்லிவிடுகிறார்கள். இதில் மோகன் காந்தியின் குழுவில் உள்ளவர்கள் தனியாக திறமை காட்டவோ, அல்லது ஹேக் செய்யவோ பெரிய விஷயம் இல்லை. அதற்கான காட்சிகளும் இல்லை. 


மோகன் காந்தியை படம் நெடுக்க ஈவிரக்கம் பாராத பணத்தாசை பிடித்தவனாக காட்டியிருக்கிறார்கள். இறுதியில் குழந்தையின் கோரிக்கைக்கு தலை சாய்ப்பது போல காட்டியது ஏனென்று தெரியவில்லை. 


கல்லூரி மாணவி(கமிஷனர் மகள்) உளவியல் சார்ந்த ஆய்வு ஒன்றை செய்ய நினைக்கிறார். அப்போதுதான் மாமனார், மாமியார், மனைவி மூவரையும் கொன்ற குற்றத்திற்காக சிறையில் உள்ள கைதி பற்றி கேள்விப்படுகிறார்.


அவரது கதையை அறிய சிறைக்கு செல்கிறார். சிறையில் ரவிதேஜா இருக்கிறார். அவர்தான் இப்படி பாதிக்கப்பட்டாரா என பார்த்தால் ஆம். அவர்தான் என சொல்லி பாடல், குத்துப்பாட்டு என வெகுநேரம் காட்சி ஓடியபிறகு அவர் இல்லை என தெரிய வருவது உண்மையில் செம ட்விஸ்ட்தான். அதைத்தவிர படத்தில் வேறு எந்த ட்விஸ்டும் இல்லை. எனவே, படம் பெரிதாக பார்க்க வைக்கும் சுவாரசியம் கொண்டில்லை. 


கல்லூரி மாணவிதான் மீனாட்சி சௌத்ரி அழகாக இருக்கிறார். எனவே, அவருக்கும் ரவிதேஜாவுக்கும் ஒரு குத்துப்பாட்டை போட்டு சேகர் மாஸ்டரை வைத்து இடுப்பை இப்படி வளைக்க முடியுமா என்று நினைக்கும்படி வளைத்திருக்கிறார்கள். ஆத்தாடி....


மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆஜானுபாகுவாக அறிமுகமாகிறார். அப்படியே பெருமாள் கோவில் பூசாரி மாதிரி இருக்கிறார். அவருக்கும் பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. ஜனதா காரேஜ் படத்தில் கூட நடிக்கும் வாய்ப்பு இருந்தது. இங்கு ஷூ காலில் அடிவாங்க மட்டுமே வாய்ப்பு தந்திருக்கிறார்கள். பரிதாபம்தான். 


சூர மொக்கை கில்லாடி


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்