தனிமையோ தனிமை - ஸிஸோய்ட் மனிதர்களின் அடையாளங்கள்
ராசிகளுக்கான பொதுபலன்களைப் போல் அல்லாமல் ஸிஸோய்ட் பர்சனாலிட்டி டிஸார்டர் ஆட்களின் அறிகுறிகளைப் பார்ப்போமா?
குடும்பம், அலுவலகம் என எங்குமே தனியாகத்தான் ஆவர்த்தனம் செய்வார்கள். இவர்களை குடும்ப நிகழ்ச்சி, சமூக குழு என எதிலும் ஒன்றாக சேர்க்க முடியாது. பெரிதாக எந்த உணர்ச்சியையும் காட்ட மாட்டார்கள். சமூக நிர்பந்தங்கள் அதிகரித்தால் வலியை மட்டும் உணர்ச்சியாக வெளிக்காட்டுவார்கள்.
காதலியுடன் வெளியே சுற்றுவது, டேட்டிங், மெழுகுவர்த்தியுடன் பாய் ஹோட்டலில் நெய்ச்சோறு என கனவுகண்டால் நடக்காது. திருமணம் செய்துகொள்வதிலும் ஆர்வம் இருக்காது. அப்படி வற்புறுத்தினாலும், உடலுறவு சார்ந்தும் பெரிய ஈடுபாடு இருக்காது. உணர்வுரீதியாக வற்றிப்போண கேணி போல இருப்பார்கள். எனவே, காதல், கல்யாணம் என பேசுவது நோ கமெண்ட்ஸ். சிம்ப்ளி வேஸ்ட்தான்.
கடற்கரைக்கு செல்வது, அஸ்தமனச்சூரியன் பார்ப்பது, இனிப்புச்சோளத்தை நண்பனின் காசில் வாங்கி சப்பித் தின்பது என்பதை ஸிஸோய்ட் நோயாளிகள் விரும்பமாட்டார்கள். தங்களது உணர்வை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதும் மிக அரிது.
அப்படியென்றால் என்னதான் செய்வார்கள். அவர்களுக்கான பொழுதுபோக்கை உருவாக்கிக்கொள்ளும் புத்திசாலித்தனம் உண்டு. கணித விளையாட்டுகள், இயந்திரம் சார்ந்த வேலைகள், கணினி ஆகியவற்றை பயன்படுத்தி பிற விஷயங்களிலிருந்து விலகி இருப்பார்கள். வேலை என்றால் தனியாக செய்யும் வேலைகளை செய்வார்கள். குழுவாக சேர்ந்து செய்யும் வேலைகள் கஷ்டம். பிறரோடு தொடர்பு கொள்வதும் படுமோசமான ஆட்கள் இவர்கள். இப்படி குணத்தை கொள்வதற்கு பள்ளியில், கல்லூரியில் ராகிங், புல்லியிங் ஆகியவை காரணமாக இருக்கலாம். இப்படி காரணங்களையும் ஸிஸோய்ட் ஆட்களிடமிருந்து பெறுவது கடினம். பேசினால்தானே? பேசமாட்டேன் போ என தன் போக்கில் வாழ்வார்கள்.
தனிமையாக உணர்ச்சிகள் உறைந்துபோன நிலையில் வாழ்பவர்கள் ஸிஸோ்ய்ட் குறைபாடு கொண்டவர்கள் என தீர்மானிக்கலாம். புதிய நகரம், புதிய சூழலுக்கு மாறும் மனிதர்கள் கூட தங்களை சூழல் அழுத்தங்களிலிருந்து காத்துக்கொள்ள மேற்சொன்ன அறிகுறிகளை வெளியே காண்பிப்பார்கள். இந்த குறைபாட்டில் ஆண்கள்தான் பெண்களை விட அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக