ஊரடங்கு முடிந்தபின்னும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற சில மாதங்கள் தேவை!



Sponsorships - Quest for Excellence - IDBI Federal

பாட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த்

உங்களது பயிற்சிமையம் சிலமாதங்களாக மூடப்பட்டுள்ளது. திறக்கப்படும் வாய்ப்பு உள்ளதா?

அனைத்து பயிற்சியாளர்களும் வீரர்களும் இணையத்தின் வழியாக இணைந்துள்ளோம். நாங்கள் உடல்ரீதியாக அங்கு இருந்தாலும், அடுத்து நாங்கள் செய்யவேண்டிய செயல்பாடுகளைப் பற்றியே மனம் யோசித்துக்கொண்டிருக்கிறது.

வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பல வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். அதேசமயம் இங்குள்ள முறையைப் பற்றி புகார் தெரிவிக்கிறார்களே?

அது உண்மைதான். நம் நாட்டில் சீனா, கொரியா, ஜப்பான் நாட்டிலுள்ளது போன்ற பயிற்சி முறைகள், அமைப்புகள் கிடையாது. முறையான வசதிகளும் இல்லை. பாட்மின்டன் சங்கம், ஒலிம்பிக் விளையாட்டுகளுக்காக அனைத்து வசதிகளும் கொண்ட அமைப்பு முறையை உருவாக்கவிருக்கிறது. பழைய முறையில் பயிற்சியாளர்களுக்கு சரியான சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்பதால் அவர்கள் புகார் கூறுகிறார்கள்.

;நீங்கள் எப்போதாவது குடும்பத்தை விட்டு தனியாக இருக்கும்படி சூழல் ஏற்பட்டுள்ளதா?

நான் விளையாட்டு வீரன் என்பதால் அடிக்கடி காயங்கள் நேரும். அதற்காக வீட்டில் ஓய்வெடுக்கும்படி சூழ்நிலை இருக்கும். நான் தற்போதுள்ள கட்டடத்தின் இரண்டாவது மாடியில் ஓய்வெடுப்பேன். அது சிறிய இடம்தான். ஆனால் ஊரடங்கு நிலையைப போல பயிற்சி மையத்திற்கு செல்ல முடியாமல் இருந்தது இல்லை.

தற்போதைய ஊரடங்கு நிலை உங்களுக்கு என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது?

கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தபிறகும், விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சிகள், விழாக்கள் திரும்ப பழைய நிலைக்கு வர நாளாகலாம். இந்த விஷயங்கள் திரும்ப சரியான நிலைக்கு வர சில மாதங்கள் தேவை. மற்றபடி வாழ்க்கை யாருக்காகவும் நிற்காது. அது நடப்புப்படியேதான் செல்லும். நான் எங்களது மைய பயிறசியாளர்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். தடை உத்தரவு முடிந்தவுடன் அவர்கள் சரியான உடல், மன தகுதிகளுடன் இருந்தால் மட்டுமே விளையாட முடியும்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்,  இந்தரநீல் தாஸ்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்