மது, போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் கொடுமையான பாதிப்பு!


சப்ஸ்டன்ஸ் யூஸ் டிஸ்ஆர்டர்

மது அருந்துதல், போதைப்பொருட்களை அனுதினமும் பயன்படுத்துவதால் உடலிலும் மனதிலும் ஏற்படும் பாதிப்பு இது. மது, போதைப்பொருட்களை தினசரி பயன்படுத்துபவர்களுக்கு எடை ஏறும், கவனம் சிதறும், போதைக்காக பொருட்களை, பணத்தை திருடுவார்கள். போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு ஸிசோபெரெனியா, ஆளுமை பிறழ்வு, மன அழுத்தம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

உலகில் 29.5 மில்லியன் (ஒரு மில்லியன் = 10 லட்சம்) மக்கள் தொகையினர் போதைப்பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர்.

இவர்களை சிகிச்சைக்கு இழுத்து வருவது மிகவும் கடினம். போதைப்பொருட்களுக்கு அடிமையாக இருப்பவர்கள் தனக்கு அப்பழக்கம் இல்லவே இல்லை என்று மறுப்பதே முதல் அறிகுறி.

குடிநோய், போதை அடிமைகளை அதிலிருந்து மீட்பது மிகவும் கடினம். சிகிச்சைக்கு அவர்களும் மனம் வைத்தால் மட்டுமே மேம்பாடு சாத்தியம்.

குடும்பம், நட்பு, வேலை என அனைத்தையும் போதைக்கு அடிமையானவர்கள் விட்டுக்கொடுத்துவிடுவார்கள். இதனால் அவர்கள் தனிமையில்தான் இருப்பார்கள்.

இப்பழக்கத்திலிருந்து விடுபடுவது கடினம். உடலில் குமட்டல், வியர்வை பெருகுவது, கை, கால் நடுக்கம் ஆகியவை உடனடி அறிகுறியாக ஏற்படும்.

குடிநோய் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான அமைப்புகள் அனைத்து நாடுகளிலும் உள்ளன. அங்கு நோயாளிகளை அனுமதித்து சிகிச்சைகளை பெறவைக்கலாம்.

தீவிரமான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உடலிலிருந்து நச்சுக்களை அகற்றுவார்கள். இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை சமாளிக்க மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.

 


கருத்துகள்