உண்மையான காதலைக் கண்டுபிடிக்கும் காதலனின் கதை! - லவ் மாக்டைல் - கன்னடம்



லவ் மாக்டைல் - கன்னடம் - 2020
இயக்கம், வசனம், தயாரிப்பு : டார்லிங் கிருஷ்ணா
இசை - ரகு தீக்ஷித்


பால்ய வயதிலிருந்து கல்யாணம் வரை ஒருவன் சந்திக்கும் காதல்கள்தான் கதை.


ஆதி தான் நாயகன். அவர் காரில் மைசூரு செல்லும் வழியில் ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறார். அவளிடம் தகராறு செய்பவர்களை கனல் கண்ணனாக மாறி புரட்டி எடுக்கிறார். அப்புறம் என்ன யூசுவல்தான். அந்தப்பெண் உங்களுக்கு பெண்தோழி இருக்கா? என கேட்டு வழிய, அவர் தனது காதல் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்.

படத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ட்விஸ்டுகள், சுவாரசியங்கள் என்று எதுவும் கிடையாது. பள்ளியில் படிக்கும்போது தொடங்கும் காதல், திருமணத்தின்போது நிறைவடைகிறது. எது உண்மையான காதல் என ஆதி உணர்வதுதான் முக்கியமான பகுதி.


ஆஹா

படத்தில் எல்லோருமே தங்களுக்கான பகுதியை நன்றாக செய்திருக்கிறார்கள். நாயகன் ஆதி, தனது பகுதியை முதலில் குறும்பாகவும், பின்னர் திருமணத்திற்கு பிறகான காட்சிகளில் முதிர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். ஆதியின் மனைவியாக வரும் நிதிம்மா கொள்ளை அழகு. அழகாக இருந்தால் என்ன சாபமோ, கருப்பை புற்றுநோய் வந்து சாகிறார்.


ஐயையோ


.டி. வேலைக்கு ஆதி ரெடியானதும் கதையில் சுவாரசியங்கள் குறைந்துவிடுகிறது. அவரின் காதலி ஜூ முதலிலேயே அந்தஸ்து விஷயங்களை சொன்னாலும் அது எப்படி ஆதிக்கு தெரியாமலேயே போகிறது என புரியவில்லை. காதல் படம்தான் அதில் ஏன் தாய்மொழி பிரசாரம் தூக்கலாக இருக்கிறது என புரியவில்லை. கதைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? நிதிக்கு புற்றுநோய் வந்தவுடனே படம் முடிந்துவிடுகிறது. பலவீனமான இறுதிக்காட்சிக்கு பார்வையாளர்கள் யாரும் இருக்கப்போவதில்லை.


கோமாளிமேடை டீம்



கருத்துகள்