பள்ளி வகுப்பறைகளுக்கு மாற்றாக டிஜிட்டல் கல்வி விளங்குகிறது! - ரமேஷ் பொக்ரியால்



The Indian Express | Page 5
INE

ரமேஷ் பொக்ரியால், கல்வித்துறை அமைச்சர்.


சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் பாதியிலேயே நிற்கின்றன. அவற்றை நிறைவு செய்யவும், அவர்களின் கல்வி பற்றியும் உங்களிடம் என்ன திட்டமிருக்கிறது?


தேர்வுகளை விட அதை எழுதும் மாணவர்களின் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம். எனவே தேர்வுகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும். 83 பாடங்கள் குறைக்கப்பட்டு 23 பாடங்களாக மாற்றப்பட்டு விரைவில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும். தேர்வு பற்றிய விவரங்கள் பள்ளிகளுக்கு பத்து நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டு விடும்.


தேர்வுகளை தவிர்க்கும் முடிவை அரசு எடுக்க வாய்ப்புள்ளதா?


தேர்வுகளுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தயாராக இருந்த நேரத்தில் பெருந்தொற்றுநோய் பிரச்னை உருவானது. எனவே, தற்போது பள்ளிகள் தனிமைப்படுத்தல் பணிகளுக்காக பயன்பட்டு வருகின்றன. இந்த நிலை மாறுமா என்பது மே 3க்குப் பிறகுதான் தெரியும். மாணவர்கள் தேர்வு பற்றி மனப்பதற்றம் கொள்ளவேண்டாம். அரசு அவர்களுக்கு ஆதரவான முடிவுகளையே எடுக்கும்.


மதிப்பீடு செய்த விடைத்தாள்களை மாணவர்கள் பெறுவது இச்சூழ்நிலையில் சாத்தியமா?


இப்போது சாத்தியம் இல்லை. நான் முன்னமே சொன்னது போல பள்ளிகள், நோயாளிகளை பராமரிக்கும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. மதிப்பீடு செய்வதற்கான இடங்களை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. ஊரடங்க காலம் முடிவுக்கு வந்த பின்னரே அரசு இதுபற்றி முடிவு செய்யும்.


பல்கலைக்கழகங்களுக்கு இணைய வழியில் தேர்வு நடத்துவது பற்றி கல்வித்துறை அமைச்சகம் என்ன முடிவு எடுத்துள்ளது.


நாங்கள் இணைய வழி தேர்வு பற்றிய குழுவை அமைப்பது இதில் முதல் பணி. யுசிஜியின் அறிக்கைப்படி நாங்கள் விரைவில் அதுபற்றிய அறிவிப்பை வெளியிடுவோம்.


விடுமுறைக்காலத்தை முன்னமே அறிவிக்கலாம் என்று எண்ணமிருந்ததா?


விடுமுறைக்காலமும், ஊரடங்கு காலமும் ஒன்றாக இருக்கும் என்பதை அரசு முன்னரே எதிர்பார்க்கவில்லை. அதற்கான உத்தரவுகளையும் வெளியிடவில்லை. மாணவர்கள் கற்பதற்கான வாய்ப்புகளை விரைவில் உருவாக்கித் தருவோம். ஊரடங்கு காலம் என்பது நோய்களைத் தடுப்பதற்கான காலம். அது விடுமுறைக்காலம் அல்ல.


ஊரடங்கு காலத்தில் இணையக்கல்வியை வலுயுறுத்துகிறீர்க். அதனை வகுப்பறை கற்றலுக்கு மாற்று என்று கூறலாமா?


பெருந்தொற்று காரணமாக மாணவர்களுக்கு வகுப்பறையில அமரவைத்து கற்றுக்கொடுப்பது சாத்தியமில்லை. இதற்கு இணையத்தில் கிடைக்கும் கற்றல் சாதனங்கள் மாற்றாக அமையும். ஒரு சொடுக்கில் அனைத்து தகவல்களையும் பெறலாம். எளிதாக ஆராய்ச்சியும் செய்ய முடியும்.


அடுத்த காலாண்டுக்கான முழுத்தொகையையும் கேட்டு பள்ளிகள் வாங்க கூடாது என்றும் ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்கவும் கூடாது என்று சொல்லியிருக்கிறீர்கள். அரசுக்கு இதுபற்றி ஏதேனும் கருத்துகள் இருக்கின்றனவா?


மனிதர்கள் நோயால் பாதிக்கப்பட்டு விடக்கூடாதென பிரதமர் மோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே, இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பள்ளிகள் மூன்றுமாதங்களுக்கான முழுத்தொகையை மாணவர்களிடம் வாங்க கூடாது. அதேநேரம் தங்களுடைய ஆசிரியர்களுக்கும் முழு சம்பளத்தொகையை வழங்கவேண்டும். பள்ளிகள் விதிமீறலில் ஈடுபட்டால் மாநில அமைச்சர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.


டிஜிட்டல் முறையில் பாடம் கற்பிப்பதில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?


இந்தியாவிலுள்ள அனைத்து டிடிஹெச் சேவைகளிலும் ஸ்வயம் பிரபா என்ற கல்விச்சேவை சேனல் வருகிறது. இந்தியாவிலுள்ள அனைவரும் கூடுதல் கட்டணமின்றி இச்சேனலைப் பார்த்து கல்வி கற்க முடியும். இதுபோலவே ஆல் இந்தியா ரேடியோவிலும் கல்வி கற்பிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் செய்து வருகிறோம்.


கல்வி நிறுவனங்கள் செய்யும் ஆராய்ச்சிகளுக்கு என்னவிதமான ஆதரவை கல்வி அமைச்சகம் வழங்குகிறது?


இந்திய அரசு, கோவிட் -19 பாதிப்பை தடுப்பதற்கான முய்றசியில் ஐஐடி அமைப்புகளை ஈடுபடுத்தியுள்ளது. ஆராய்ச்சி செய்வது, அதனை முறைப்படுத்துவது, அங்கீகரிப்பது சார்ந்த பணிகளுக்கு தனி குழுவை நாங்கள் உருவாக்கியுள்ளோம். 250க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிப்பணிகளை தற்போது செய்து வருகிறோம்.


நன்றி - இந்துஸ்தான் டைம்ஸ், அமன்தீப் சுக்லா


கருத்துகள்