ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது மிகப்பெரிய கௌரவம்!

 

 





பதக்கம் பெறுவது மிகப்பெரிய கௌரவம்!

கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி சீன டைவிங் வீரர்கள் லியான் ஜூன்ஜி,யாங் ஹாவோ ஆகியோர் பத்து மீட்டர் உயரத்தில் இருந்து அவ்வளவு அழகாக துல்லியமாக டைவ் அடித்து நீரில் பாய்ந்தனர். இதை அவர்கள் ஒலிம்பிக் நடுவர்கள் முன்னர் செய்தனர். அவர்கள் அதை பாராட்டுவதற்கு முன்னர், சீன ரசிகர்கள் வீரர்களை பாராட்டி குரல் எழுப்பத் தொடங்கினர். சீன இணை, பிரிட்டனை தோற்கடித்து தங்கம் வென்றது. மற்ற எந்த நாடுகளை விட டைவிங்கில் சீனா, ஐம்பது தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. இது வேறெந்த நாட்டையும் விட அதிகம்.

சீனாவைப் பொறுத்தவரை ஒலிம்பிக் பதக்கங்கள் என்பது மிகப்பெரிய கௌரவம். தைவானை அபகரிக்க செய்த முயற்சிகளால், சீனா விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்து 1980ஆம் ஆண்டு முதல் விளையாட்டு போட்டிகளில் சீனா பங்கேற்கத் தொடங்கியது. தொடக்கத்தில் மக்கள்தொகைக்கு ஏற்பவெல்லாம் நிறைய பதக்கங்கள் கிடைக்கவில்லை. அடிப்படைக் கட்டமைப்பு குறைவாக போதாமல் இருந்ததே பதக்கப் பற்றாக்குறைக்கு காரணம், சீன அரசு, அடிப்படை கட்டமைப்பு, பயிற்சிகளுக்கு ஏராளமான யுவான்களை வழங்கத் தொடங்கியது. 1988ஆம் ஆண்டு 2 சதவீதமாக இருந்த பதக்கங்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டு 11 சதவீதமாக அதிகரித்தது. இக்காலங்களில் சீனா மீது ஊக்கமருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சீனா, அதைப்பற்றி மனம் தளரவில்லை.

ஒலிம்பீடியா என்ற தகவல்தளத்தைப் பார்ப்போம். இதில், 1992-2021 காலகட்டத்தில் சீனா அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளது. டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் ஆகிய போட்டிகளில் முன்னிலை வகித்தது. டைவிங்கிலும் தற்போது பதக்கங்களைப் பெற்றுவருகிறது. நீச்சலில், சீன நீச்சல் குழுவினர்.ஊக்கமருந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் 2021ஆம் ஆண்டு ஏழு சதவீத விருதுகளைப் பெற்றுள்ளது. சீனா, உள்அரங்கு விளையாட்டுகளில்(ஒன்று அல்லது அதிகபட்சம் மூன்றுபேர்) அதிகளவு வெற்றிகளை ஈட்டியுள்ளது. அமெரிக்கா குழு விளையாட்டுகளில் நிறைய வெற்றிகளைப் பெற்றுள்ளது. பல்வேறு விளையாட்டுகளில் பங்கெடுத்து பரவலான வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால், சீனா, அந்தளவு விளையாட்டுகளில் சோபிக்கவில்லை. நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் சீனாவும், அமெரிக்காவும் பெற்ற தங்கப்பதங்களின் எண்ணிக்கை ஒன்றுபோலவே உள்ளது.

அமெரிக்கா, சீனாவில் வீரர்களை பாலியல் வல்லுறவு, சீண்டல் செய்துவிட்டு அதை ஊடகங்களில் கூறாதே, நாட்டுக்கு அவமானம் என்று கூறுவார்களா என்று தெரியவில்லை. மக்களவையில் வீரர்களுக்கு செய்யும் செலவை பலமுறை கூறி, அவர்களை பிச்சைக்காரர்கள் போல நடத்துகிறார்களா என்று தெரியவில்லை. சாதி, மதம், இனம் சார்ந்த பாகுபாட்டுடன் நடப்பது, அரசின் உதவியுடன் இணையத்தில் கேலிவதைக்குழுக்கள் மூலம் விளையாட்டு வீரர்கள் இழிவுபடுத்தப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவது நடக்கிறதா என்று தெரியவில்லை. மேற்சொன்ன அனைத்து அசிங்கங்களும் இந்தியாவில் நடந்தும் விளையாட்டு வீரர்கள் ஆறு பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்