இதயத்தை மீண்டும் இயங்க வைக்கும் சிபிஆர் முறையைக் கண்டறிந்தவர் - மிஸ்டர் ரோனி

 

 

 


 

 

 

 



 

 

 

 

அறிவியலால் வெல்வோம்
மிஸ்டர் ரோனி

திடீரென நின்றுபோன இதயத்தை துடிக்க வைக்கும் சிபிஆர் முறையை கண்டறிந்தது யார்?

சிபிஆர் என்றால், கார்டியோபல்மொனரி ரீசஸ்டிகேஷன் என்பது விரிவாக்கம். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அறுவை சிகிச்சை வல்லுநரான வில்லியம் டோசாக், வாய் வழியாக பிராணவாயுவை செலுத்தி ஒருவரைக் காப்பாற்ற முயலும் முறையைக் கண்டுபிடித்தார். அக்காலகட்டத்தில் இம்முறை, பெரிதாக மேம்படுத்தப்படவில்லை. பின்னாளில், எட்வர்ட் ஸ்காஃபர், மூச்சு விடுவதற்கு மார்பில் அழுத்தம் கொடுக்கும் முறையை உருவாக்கினார். 1910ஆம் ஆண்டு அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், எட்வர்டின் மார்பில் கைகளை வைத்து அழுத்தம் கொடுக்கும் முறையை செயல்படுத்த முன்வந்தது.

ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தெல்லோ ஆர் லாங்வொர்த்தி, ஆர் டி ஹூக்கர், வில்லியம் பி குவென்ஹோவன் ஆகியோர் இணைந்து மார்பில் அழுத்தம் கொடுக்கும் இதயத்தை இயங்கச் செய்யும் முறையை மேம்படுத்தினர். இதயத்தில் நின்றுபோன ரத்த ஓட்டத்தை மார்பில் அழுத்தம் கொடுப்பது, மீண்டும் தடையை நீக்கி சீராக ஓடவைக்கிறது என்பதை குவென்ஹோன் புரிந்துகொண்டார். இரண்டு வயது குழந்தையின் நின்றுபோன இதயத்தை அவர் இம்முறையில் துடிக்கவைத்து உயிரைக் காப்பாற்றி புகழ் பெற்றார். 1963ஆம் ஆண்டு, அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், சிபிஆர் முறையை பரவலாக பயன்படுத்த தொடங்கியது. வாய்வழியாக காற்றை உட்செலுத்துவது, சிபிஆர் என இருமுறைகளையும் அவசரகாலத்தில் பயன்படுத்துகிறார்கள்.

மருத்துவ அவசரநிலையில் கூறப்படும் ஏபிசிடி ஆய்வு என்றால் என்ன?

பிராணவாயு செல்லும் வழி, சீராக மூச்சுவிடுவது, ரத்தவோட்ட நிலை, தண்டுவடம், கழுத்து பகுதி காயம் ஆகியவற்றை ஏபிசிடி சர்வே என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். மருத்துவ அவசரநிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் வருவோரை பத்து நிமிடங்களுக்குள் என்ன பிரச்னை என்று பார்த்து உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்க ஏபிசிடி சர்வே உதவுகிறது. வாய், மூக்கு, நுரையீரலில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என சோதிப்பது முதல் பணி. அடுத்து, பிராணவாயு உடலுக்குள் சரியாக சென்று வருகிறதா என்று சோதிக்கவேண்டும். அல்லாதபோது சிபிஆர் செய்யவேண்டும். மூச்சுவிடுவதை பார்த்துக்கொண்டு சிபிஆர் எண்ணிக்கையை அதிகரிப்பதா, குறைப்பதாக என தீர்மானிக்கலாம்.
கழுத்தில் காயம் அல்லது தண்டுவடத்தில் அடிபட்டிருக்கிறதா என்று சோதித்தால்தான் விபத்துக்குள்ளவானவர் சுயநினைவுடன் இருக்கிறாரா இல்லையா என சரிபார்க்க முடியும். இதன்மூலம் உயிருக்கு நேரும் ஆபத்தை தவிர்க்கலாம்.

மின்னல், இடி ஏற்படும்போது செய்யவேண்டியது என்ன?

கட்டிடமோ, மலைப்பகுதி குகையோ ஒதுங்கி நிற்கலாம். உயரமான இடங்களுக்கு செல்லவேண்டாம். தனியாக நிற்கும் மரங்களுக்கு கீழே சென்று நிற்க கூடாது.

நீர்நிலையில் சிறிய படகுகளில் பயணித்தால் அதில் இருந்து உடனே வெளியேற வேண்டு்ம்.

உலோகங்கள் எவற்றையும் பயன்படுத்த கூடாது. அவற்றை கையில் வைத்திருப்பது ஆபத்து.
வாகனங்களில் பயணித்தால், வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளேயே காத்திருக்கலாம்.
ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தக்கூடாது.
எந்தவிதமான எலக்ட்ரானிக் பொருட்களையும் பயன்படுத்தாமலிருப்பது நல்லது. 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்