அறிவியல் தூதர் பிரியங்கா!
அறிவியல் தூதர்
பிரியங்கா!
அசாமைச் சேர்ந்த
பிரியங்கா தாஸின் அறிவியல் சாதனைகளில் இது மைல்கல். தற்போது ஃபிரான்சில் பெண்களை
அறிவியல் துறைக்கு ஊக்குவிக்கும் பிரசார இயக்கத்தின் பெருமைமிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் துறையில்
பெண்களை ஊக்குவிக்கும் இப்பிரசார இயக்கம்
2014 ஆம்
ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.
சஃப்ரன் நிறுவனத்தின்
நேவிகேஷன்துறையில் பணியாற்றி வரும் பிரியங்கா,
"பள்ளி,
கல்லூரிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சிகளை தொடங்கியுள்ளோம்"
என நம்பிக்கையுடன் பேசுகிறார். இம்முயற்சியை பிரான்ஸ்
அரசின் தேசியகல்வித்துறையும் லோரியல் பவுண்டேஷனும் ஆதரிக்கின்றன.
பாலிடெக்னிக் படிக்கும்போது சுப்பாரோ
எனும் விண்வெளி நிறுவனம் மூலம் நேவிகேஷன் நிறுவனத்தை விசிட் செய்த பிரியங்கா,
படிப்பில் காட்டிய ஈடுபாடு 2 ஆண்டுகளுக்கு பிறகு
சஃப்ரான் நிறுவனத்தில் வேலை கிடைக்க உதவியது. பின்னர் தன் முனைவர்
படிப்பை சஃப்ரான் நிறுவனத்தின் நிதியுதவியிலேயே முடித்திருக்கிறார் இந்த இருபத்தியாறு
வயது இளம் தூதர்.