விட்டுக்கொடுக்காத போராளிதான் வெற்றியாளர்!

 Image result for manavjeet singh

பிஸினஸ்!

விட்டுக்கொடுக்காத போராளிதான் வெற்றியாளர்!

Related image



விட்டுக்கொடுக்காமல் போராடும் போராளி ஒவ்வொரு வெற்றியாளரிடம் இருக்கிறார் என்பதை அனுபவமொழியாக கூறும் மானவ்ஜீத்சிங், இமாச்சலப்பிரதேச வாரிசுஜலந்தரிலுள்ள டிஏவி பள்ளியில் படித்தவருக்கு சிறுவயதிலேயே நிதிசார்ந்த விஷயங்களில் தீவிர ஈடுபாடு. 25 ஆண்டுகால வங்கி அனுபவத்தை(யெஸ், சிட்டி, எஸ்பிஐ, ரிலையன்ஸ்) ரூபிக் என்ற நிதிநிறுவனம் மூலம் அறுவடை செய்து வருகிறார்.

 "2014 ஆம் ஆண்டு ரூபிக்கைத் தொடங்கும்போது நுகர்பொருள், குறுந்தொழில் வாணிபம், வர்த்தக வாகனங்களுக்கான கடன்கள் ஆகியவற்றில் இடைவெளியை எங்களுக்கான தொழில்வாய்ப்பாக அடையாளம் கண்டோம்" என்கிறார் மானவ்ஜீத்சிங். ரூபிக்குக்கு முன்னோடியாக பெஸ்ட்டீல் ஃபினான்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனத்தை சந்தீப் நம்பியார் என்ற நண்பருடன் இணைந்து தொடங்கினார். வங்கியின் கடன் கொடுக்கும் முறையை அப்டேட் செய்த வடிவம், ஆனால் வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை. இப்போது புதிய மாடலான ரூபிக்கில் கிரடிட் கார்டு வாங்கி அணுகினால் இருபதிற்கும் மேற்பட்ட வங்கிகளின் கட்டணம், வசதிகள், தகுதிகள் என அனைத்தையும் வாடிக்கையாளர்களுக்கு ஒருங்கிணைத்து தந்து தோராயமாக 17 கோடிரூபாய்க்கும் மேல் லாபம் சம்பாதித்திருக்கிறது.

தனிக்கடன்கள், வாணிப கடன்கள், கிரடிட்கார்டு வழங்குவது உள்ளிட்ட சேவைகளை இணையத்தில் எளிதாக செய்ய ரூபிக்கின் அல்காரிதம், செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது. வங்கிகள் ஒருவர் பணத்தை திருப்பிக்கட்டுவாரா என்பதை வேலை செய்யும் நிறுவனம், சம்பளம் மற்றும் அதற்கான ஆர்வம், திறன் ஆகியவற்றை சோதிக்கின்றன. ரூபிக் இதற்கு மாற்றாக ஒருவரின் போன்பில், சமூக வலைதளம், சுற்றுலா, வங்கி கணக்குவழக்கு, உணவகச்செலவு ஆகியவற்றை ஆராய்ந்து கடன் தருவது ரூபிக் மார்க்கெட்டில் வென்று மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய இடங்களில் காலூன்ற முக்கியக்காரணம்.
"ஆன்லைன் வழி நிறுவனம் என்பதால் தொழில்நுட்பத்தில் மேம்பாடு இல்லாத 13 நிறுவனங்களை நீக்கி கடன் வழங்குதலை எளிதாக்கினோம். ஆர்பிஐ விதிப்படி கடன் ஆவணங்களை வாடிக்கையாளரின் வீட்டுக்கு சென்று கையெழுத்து பெற்று எங்களுக்கு வழங்க நிதி அதிகாரிகளை பணியமர்த்தியுள்ளோம்" என்பவர் சந்தையில் தனிஆளாக கோலோச்சவில்லை

RupeePower, BankBazaar, Finrek, Monexo உள்ளிட்ட நிறுவனங்களின் போட்டிகளையும் எதிர்கொண்டுவருகிறது.
"சிறுநடுத்தர தொழில்முனைவோர்களை இணையத்தில் கொண்டுவர முதலில் கொஞ்சம் கஷ்டப்பட்டோம். இன்று அவர்கள் வங்கிகளில் பெறுவதைவிட வேகமாக கடன்பெறமுடிவது தொழில்புரட்சி என்றுதான் சொல்லவேண்டும்" எனும் மானவ்ஜீத்சிங், கடன்பெற தகுதியானவர்களை தங்களின் அல்காரிதம் மூலம் தேர்ந்தெடுத்து கடன்பெற்றுக்கொடுக்க கட்டணமாக சிறுதொகையை பெறுகிறார்.

ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பேரின் விண்ணப்பங்களைப்பெற்று 28 ஆயிரம் கிரடிட் கார்டுகளை வழங்கிய ரூபிக், 4 ஆயிரம் விநியோக மையங்களின் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் கடன்தொகையை தொழில்முனைவோர்களுக்கு வழங்கி சாதனை புரிந்துள்ளது. வேலைவாய்ப்பின்மையை காரணம் காட்டாமல் தற்போதைய சேவைகளுக்கிடையே உள்ள பற்றாக்குறையை, இடைவெளியை மானவ்ஜீத்சிங் போல தீர்க்கும் தீப்பொறி போன்ற ஐடியா உங்களிடம் இருந்தால் பற்றாக்குறை நம் பர்சில் மட்டுமல்ல இந்தியாவிலும் இருக்காது. ஆர்வம், நேர்மறை சிந்தனை, நேர்த்தியான உழைப்பு ஆகியவற்றைக் கொண்டு கனவு கண்டால் வெற்றிவாசல் தானாகவே திறக்கும்!

ரிப்போர்ட் கார்ட்!

இந்தியாவின் கடன்சந்தை - 1.2 பில்லியன்
வளர்ச்சி விகிதம் - 2.3 பில்லியன்(2020), 164 மில்லியன்(2014)    
சிறுதொழில் நிதியுதவி - 57.7 மில்லியன்(4%,2013)
ரூபிக் பெற்ற முதலீடு - 3 மில்லியன்
வருவாய் - 17.5 கோடி
கடன் ஒப்பந்தம் - 90 நிறுவனங்கள்
சேவைகளின் எண்ணிக்கை - 300
வாடிக்கையாளர்கள் - 2 லட்சம்
                                      


தகவல்கள், படங்களுக்கு
https://www.rubique.com/

-ஆக்கமும் தொகுப்பும்: விக்டர் காமெஸி


     

பிரபலமான இடுகைகள்