கல்வி கற்பிக்க 700 கி.மீ பயணம்! -அசத்தும் டெக் இளைஞர்

Image result for gurgaon to uttarakhand for education





கல்விக்காக நீண்டபயணம்!

கல்விக்காக இதுவரை எவ்வளவு தூரம் பயணித்திருப்பீர்கள்?குர்கானில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரியும் ஆசிஷ் தப்ரல், 20 மணிநேரம் பயணித்து மாணவர்களுக்கு கல்வி தந்து தருகிறார்.


குர்கானில் பணிபுரியும் வாலிபர் ஆசிஷ் தப்ரல்,  உத்தர்காண்ட்டுக்கு வார இறுதியில் பயணித்து தன் சொந்த கிராமத்து சிறுவர்களுக்கு கல்வி அறிவு ஊட்டிவருகிறார். "உத்தர்காண்டிலுள்ள பாரி கார்வால் மாவட்டத்திலுள்ள திம்லி என்ற கிராமத்தில் எனது தாத்தா 1882 ஆம் ஆண்டு முதல் சமஸ்கிருத பள்ளி நடத்திவந்தார். அந்த தொடர்ச்சி விட்டுப்போக கூடாது என்பதற்காகவே இந்த கல்வி முயற்சி" என புன்னகைக்கிறார் ஆசிஷ். 1969 ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய இப்பாடசாலை மாணவர்கள் இன்றி தற்போது மூடப்பட்டுவிட்டது. சென்னை, மும்பை, சவுதி என வேலைபார்த்து சேர்த்த பணத்தில் 2014 ஆம் ஆண்டு ஒரு தொடக்கப்பள்ளியையும், ஆறு இலவச கணினி மையங்களையும் மாணவர்களுக்கென தொடங்கியுள்ளார் ஆசிஷ். 23 கிராமங்களை சேர்ந்த 36 மாணவர்களின் கல்விக்காக வாரந்தோறும் பயணித்து வருகிறார் ஆசிஷ்