ஸ்டார்ட்அப் மந்திரம் 8!- தோல்வி ஏன்?
ஸ்டார்ட்அப் மந்திரம்
ஸ்டார்ட்அப் தோல்வி ஏன்?
உலகளவில் அதிகளவு ஸ்டார்ட்அப்
முயற்சிகள் உருவாவது இந்தியாவில்தான். ஆனால்
90 சதவிகித ஸ்டார்ட்அப்கள் தோற்றுப்போகின்றன. காரணம்?
கிரியேட்டிவிட்டி இல்லை என ஃபோர்ப்ஸ் தளம் தகவல் தருகிறது. 2015-16
ஆம் ஆண்டு இந்தியாவில் 1,422 பேடண்ட்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதேகாலத்தில் ஜப்பானில் 44 ஆயிரத்து 235, சீனாவில் 29 ஆயிரத்து
846, தென் கொரியாவில் 14 ஆயிரம் பேடண்ட்டுகள் பதிவாகியுள்ளது.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹேக்கத்தான்
மாநாட்டில் இணையம் - 11.5%, ரோபாட் -11.5%, ஏஐ - 9.6%, ஆக்மெண்டட் ரியாலிட்டி - 7.7%, பாட்ஸ் - 5.7% ஆகியவை முன்னிலை பெற்றுள்ளன.
ஸ்டார்ட்அப்பில் ஏன் ஐஐஎம், ஐஐடி படித்தவர்களுக்கே முதலீட்டாளர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள் என மதுரை
வாசகர் முத்துவேலன் கேட்டிருந்தார். "ஐஐடி, ஐஐஎம் படிக்க மிக கடினமான தேர்வுகளை சந்தித்து வருவதால், அவர்களின் பிஸினஸ் ஐடியா ஜெயிக்கும் என முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள்.
இதற்கு மனம் தளராதீர்கள். கல்வித்துறையில் பத்தாண்டுகள்
அனுபவம் உள்ளதா? அதில் பிரச்னைகளை தீர்க்கும் தீர்வு உங்களிடம்
இருந்தால் நம்பிக்கையுடன் ஸ்டார்ட்அப்பை தொடங்கலாம்" என்கிறார்
முதலீட்டு ஆலோசகர் இஷான் சிங்.
ஸ்டார்ட்அப்களில் என்ன பிரச்னை?
புதுமைத்திறன் இல்லாததும், தனித்துவமான பிஸினஸ் மாடலின்மையும், தொழில்நுட்ப திறனின்மையும்
77% ஸ்டார்ட்அப்களை முளையிலேயே அழிக்கிறது என்பது ஐபிஎம்மின் பிஸினஸ்
வால்யூ இன்ஸ்டிடியூட் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸ் ஆகியோரின் அறிக்கை தகவல்.
ஸ்டார்ட்அப் ஐடியா தியரியாக கெட்டி
என்றாலும் பிராக்டிக்கலாக பிசினஸாக மாறாதபோது தோல்வியை தள்ளவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது. திறமையான பணியாளர்களை பெறாத எந்த
நிறுவனமும் சரிவை நிச்சயம் சந்திக்கும். நிறுவனம் எழும் முன்பே
அதிக சம்பளத்தில் ஆட்களை அமர்த்துவது நஷ்டத்தில் ஓடும் நிறுவனம் போனஸ் அறிவிப்பது போலத்தான்.
தொழில்நுட்பம், நம் ஐடியாவை எளிமைப்படுத்தும் கருவி
அவ்வளவே. மார்க்கெட்டின் தன்மைக்கேற்ப பிசினஸை மாற்றும் துணிச்சல்
இருந்தால் ஸ்டார்ட்அப்பில் வெற்றிவாகை சூடலாம்! இவ்வார நூல்:
The First 90 Days- Michale Watkins