லவ் இன்ஃபினிட்டி: காதலும் லட்சியமும் ஒன்றாக பயணிக்குமா?




Selective Focus Photography of Woman Holding Clear Glass Bottle
www.pexels.com



எங்கே விட்டோம்... காதல்னா எனக்கு புரியல என்பதில்தானே...

இந்த பூபதி வேற Ladies Kho Kho Match அன்னிக்கு வந்தான். நான் கண்டுக்கலை. அவனும் சும்மாதான் இருந்தான். இந்த பூங்கொடி(White) அவனுக்கு கேட்கிற மாதிரி என்னை கூப்பிட்டுட்டே இருந்தா. அது எனக்கு பிடிக்கவேயில்லை.

அவன் மட்டும் எனக்கு Future இல் என் husband என்றால் நிச்சயம் ஏற்கமாட்டேன்.  சரி,சரி இனிமே Future பத்தி ஏதும் பேச மாட்டேன். நடப்பது நடக்கட்டும்னு எல்லா விஷயத்திலும் இருக்க கூடாது. படிப்பு, மதிப்பு, பணம் எல்லாத்திலயும்.

தாமரை எழுதிய சவிதா வயது பதினொன்று, மாலைப் பொழுதின் மயக்கத்திலே ரெண்டும் Super. சவிதா கதை படிக்கையில் உண்மையிலேயே அழுதுட்டேன்.

தேவையில்லாம அடிக்கடி கண்ணீர் வருது. சின்ன சின்ன ஏமாற்றங்களைத் தாங்க முடியலைன்னா? ஆனா நீங்கல்லாம் எப்படி கட்டுப்படுத்திக்கிறீங்களோ?

Revathy Mam என்கிட்ட சொல்லியிருக்காங்க. நீ என்னதான் முன்னேறி நல்ல நிலையில் இருக்கும்போது Love பண்ண நினைச்சாலும் அப்பக்கூட நல்லவங்க Lover - ஆ அமைவாங்கன்னு என்ன நிச்சயம்னு கேட்டாங்க.
நீ சொன்ன “வயது ஆக ஆக வாழ்க்கை புரியும் ”ங்கிற வார்த்தை ரொம்ப Correct.  நீ IAS ஆகணும்னு எனக்கு ஆசை. நீ நல்லா படிக்கணும், நல்ல நிலைக்கு வரணும்னு சாமி கும்பிடும்போது வேண்டிக்குவேன். இனிமேல் G.K Book எடுத்துட்டு வந்து தர்றேன்.



Four Gray Stones With Carved Texts on Metal Board
Pexels.com






அப்புறம் B.Com இல் 75% மேல் எடுக்க ரெண்டு பேரும் Try பண்ணலாம்; Please நீயும். Class இல் ஹோம்வொர்க் சொல்லறத படிக்காட்டியும் உனக்கு படிச்சத எடுத்துப்படி. காலையில் 5 To 7 மணிவரை படித்தால் நல்லா Interest ஆ இருக்கும்.

உனக்கு நிறைய Time இருக்கு. காலைல ஒரு Plan உடன் செயல்படு. 6.30 க்கு படிக்க ஆரம்பித்தால் கூட 8 0r 7.30 வரை படிக்கலாம். நீ பையன் வேற. College க்கு கிளம்பறதுக்கு Half Hour  இருந்தால் போதும்னு நினைக்கிறேன்.

நான் ரொம்ப தடவை Feel பண்ணியிருக்கேன். சில நேரங்களில் காலையில் படித்தால் சாப்பிட முடியாது. இல்லைனா Bus  விட்டுடுவேன். வீட்டில் எந்த help ம் அம்மாவுக்கு செய்ய முடியாது. இந்த நேரத்தில் கம்முனு டி.சி வாங்கி Navarasam or Cheran இல் சேரலாம் னு நினைப்பேன்.

Life ங்கறது ஒரு Cassete போல ன்னு என்னால கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனா முயற்சி, Aim இதெல்லாம் அதில்தான் அடங்கியிருக்கு. முயற்சிப்பது கூட ஒரு Rewindingதானா? Serious ஆதான் கேட்கிறேன். புரிஞ்சுதா? எப்படி என் கேள்வியை புரிய வைக்கிறதுன்னு தெரியலை.

என்னை மாதிரி மட்டும் இல்ல, உன்னை மாதிரி மட்டுமல்ல யார் மாதிரியும் யாரும் இருக்க முடியாது. Marriage ங்கறது ஒரு சிக்கல். So அதனால நானும் அதில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அடுத்தவங்க விருப்பத்துக்காக ஒவ்வொண்ணும் செய்யணும். சடங்கு, சம்பிரதாயம்னு ஒரே Formalities. ஆனா நாம் நினைப்பது எல்லாம் நடப்பதில்லை.

நீ ஒரு கவிஞன் மட்டுமல்ல; தத்துவ ஞானி மாதிரி தோணுது. கடவுள், கணக்கு, விடைன்னு நிறைய யோசிக்கிற. அதென்ன அடிக்கடி ஏமாற்றம்னு எழுதற. இனி வாழப்போற வாழ்க்கைக்கு இப்ப Decision  எடுக்கிறோம். பலன் கிடைக்குமுன்னே ஏமாற்றம்னு சொல்லக்கூடாது. Ok.

(அடுத்த ரோஜா நாளைக்கு கொடுப்போம்)



லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: அஷ்வத், விக்கி ஸ்டார்

பிரபலமான இடுகைகள்