யானையின் உடம்பில் சுருக்கங்கள் ஏன்?

African Elephant (Loxodonta africana) skin close up, Serengeti National Park, Tanzania


ஏன்? எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

யானையின் உடம்பில் சுருக்கங்கள் ஏன்?

ஆப்பிரிக்க யானை ஒன்றை ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். மைக்ரோஸ்கோப்பில் பார்த்தபோது, அதன் உடலில் சிறுசிறு பள்ளங்களாக தோல் அமைந்துள்ளதை வியந்தனர். இத்தன்மை உடலில் இருந்து நீர் ஆவியாவதைத் தடுக்கிறது. ஏறத்தாழ பிற யானைகளோடு ஒப்பிட்டால் பத்து சதவீதம் நீர் குறைவாக ஆவியாவதால் உடலின் வெப்பநிலை பிரச்னை இன்றி இருக்கும். 
சேறு, மழை என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் யானை தன் கெட்டியான தோலின் மூலம் நீரைச்சேமித்து உடலின் வெப்பநிலையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.                 
ஆசிய யானைகள் சற்று மென்மையான தோலினைக் கொண்டுள்ளதால் அவை ஈரப்பதமான சூழலிலேயே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். 
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்(படம்,தகவல்)- சார்லட் கார்னி