ரத்த பிளாஸ்மாவில் ஹெச்ஐவி கிருமி! - சீனாவில் பரபரப்பு
சீனாவின் பிளாஸ்மா சிகிச்சையில் ஹெச்ஐவி கிருமிகள் கலந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ரத்த பிளாஸ்மாவை அரசு நிறுவனமான ஜிங் ஜிங் பார்மசூட்டிகல் கம்பெனி நாடெங்கும் விநியோகித்து வருகிறது. இதில் ஹெச்ஐவி கலப்படம் நிகழ்ந்துள்ளதாக அரசின் தேசிய சுகாதார கமிஷன் மருத்துவமனைகளை எச்சரித்துள்ளது.
லுக்குமியா, ஹெபடைடிஸ், ரேபிஸ் ஆகிய நோய்த்தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்த பிளாஸமா பயன்படுகிறது. இந்த சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகளை சுகாதார கமிஷன் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
- சீனா மார்னிங் போஸ்ட்