எச்சரிக்கை பலகைகளில் சிவப்பு ஏன்?



Why are warning signs red? © Getty Images




ஏன்?எதற்கு?எப்படி?

எச்சரிக்கைப் பலகைகள் ஏன் சிவப்பு நிறத்திலேயே இருக்கின்றன?

உயிரியல் அடிப்படையில் சிவப்பு என்பதை நெருப்பு, அபாயம் என நம் நினைவுகளில் பதிந்து வைத்திருக்கிறோம். எனவே சிவப்பு நிறம் என்றால் சடக்கென ஆதிநினைவான நெருப்பின் நிறத்திலிருந்து நிகழுக்கு மீண்டு வண்டி பிரேக்கை இழுத்துப்பிடித்து நிற்போம். அதேசமயம் சில நாடுகளில் நீலநிற விளக்கு போன்ற பரிசோதனைகளையும் செய்கிறார்கள்.

இயற்பியல் காரணத்தைப்  பார்த்தால், சிவப்பு பனியோ மழையோ அனைத்து கண்டிஷன்களிலும் பளிச்சென அனைவரையும் ரீச்சாகும். அதேநேரம் சீனாவில் மஞ்சள் பின்னணியில் கறுப்பு கோடுகள் பயன்படுகின்றன. 


நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்