வயதாவதை எப்படி தடுக்கலாம்?
pexels.com |
வயதாவதை மற்றவர்கள் விரும்புகிறார்கள், விரும்பவில்லை. ஆனால் நீங்கள் விரும்புகிறீர்களா? நிச்சயம் விரும்ப மாட்டீர்கள். அதற்குத்தான் வயதாவதை தடுக்கும் க்ரீம்கள், மருந்துகள் தொடர்ச்சியாக லேபில் ஆராய்ச்சியில் உள்ளன.
. இதனால் என்ன விளைவு கிடைக்கும்?
வயதான செல்கள் சுரக்கும் அமிலங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி இது என தகவல் சொல்கிறார் நிகோலஸ் மியூசி. இவர் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த ஐடியா மூலம் வயதான செல்களை நீக்கி, வயதாகும்போது வரும் நோய்களையும் தடுக்க முடியும் என புதுமையான கருத்துக்களைப் பேசுகிறார் இவர். இது முதல்கட்ட சோதனை ஆகும்.
கடந்த ஜனவரியில் மியூசி மற்றும் அவரது குழுவினர் பதினான்கு நோயாளிகளை வைத்து புதிய மருந்தைச் சோதித்துள்ளனர். சோதித்தவர்கள் பலரும் நுரையீரல் தொடர்பான நோய்களைக் கொண்டவர்கள். சோதனையில் நோயாளிகளின் உடல்நலம் மேம்பட்டிருப்பது பின்னர் தெரிய வந்துள்ளது. எங்களது சோதனையில் வயதாவதால் ஏற்படும் ஐபிஎஃப் போன்ற நோய்களைக்கூட தடுக்க முடிந்தது ஆச்சரியம் அளிக்கிறது. நோய்க்கு வாய்ப்புத்தரும் முதிர்ந்த செல்களை எங்களது மருந்து மூலம் அழிக்கிறோம். என நம்பிக்கையுடன் பேசுகிறார்.
இது எந்தளவு ஒருவரின் உடல் வயதாவதை தடுக்கும் என பின்வரும் ஆய்வுகள்தான் சொல்லவேண்டும்.
நன்றி: ஃப்யூச்சரிசம்.