நூல்களை வாசி, மூடத்தனத்தை ஒழி - பார்பரா கிட்டிங்ஸ்!
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்
பார்பரா கிட்டிங்ஸ்
1932 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த மாற்றுப்பாலின ஆர்வலர். இன்று ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகளுக்காக இறக்கும் வரை போராடினார். அமெரிக்க நூலகங்களில் மாற்றுப்பாலினத்தவருக்காக பல்வேறு நூல்களை சேகரித்து நாளிதழ்களில் எழுதி அவர்களுக்காகப் பாடுபட்டார்.
மாற்றுப்பாலினத்தவரை சிறந்த முறையில் நாவலில் எழுதுபவர்களுக்கு பார்பார கிட்டிங்ஸ் என்ற பெயரில் விருதும் கூட வழங்கப்பட்டு வருகிறது. 1972 ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கை என்பது மனநல குறைபாடு என்ற கருத்து அமெரிக்க சமூகத்தில் இருந்தது. அதனை நீக்க நிறைய எழுதினார். பேசினார்.
இவர் அமெரிக்காவில் சமூக செயற்பாட்டாளராக இருந்தாலும் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தவர். அமெரிக்க அரசில் தந்தைக்கு வேலை கிடைக்க, இங்கு இடம்பெயர்ந்து வந்தனர். டெலாவரில் இவருக்கு வீடு அமைந்தது. பள்ளிக்குச் சென்றவருக்கு பெண்தோழிகளின் மீது பெரும் பித்து இருந்தது. இதனால் இவரை ஓரினச்சேர்க்கையாளர் என ஆசிரியே முத்திரை குத்தியதுதான் சோகம். இதனால் ஹானர் சொசைட்டி எனும் அமைப்பில் பார்பரா நிராகரிக்கப்பட்டார். அப்போது ஓரினச்சேர்க்கை என்பது மனநல குறைபாடு என்றும் அதனை தீர்க்க முடியும் என்றும் உளவியல் மருத்துவர்கள் புருடா விட்டனர். அதற்கு செல்லவும் பார்பராவிடம் காசு கிடையாது. என்ன செய்வது? என தடுமாறினர். தனக்கு நேர்ந்தது என்ன என்று அறியும் வேகத்தில் நூலகத்திற்கு சென்றார். இதன் விளைவாக பள்ளிப்படிப்பில் கோட்டை விட்டார். ஆனால் தன் பாலினம் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வதில் அவர் தவறவில்லை.
இதுபோன்ற மாற்றங்கள் பெற்றோருக்கு எப்படி தெரியாமல் இருக்கும்? ஆம். பெற்றோருக்கு தெரிய நைட்வுட், தி வெல் ஆப் லோன்லினெஸ் ஆகிய நூல்களைப் பார்த்த பார்பராவின் அப்பா, அவற்றைக் கொளுத்திவிட அவரை வற்புறுத்தினார். ஆனால் பார்பரா அதனைச் செய்யவில்லை. வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தார். டாட்டர்ஸ் ஆஃப் பைலிட்டிஸ், தி லேடர் ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். இடையறாது மாற்றுப்பாலினத்தவர் பற்றிய கவனத்தை மக்களுக்கு ஏற்படுத்தினார். 2007 ஆம்ஆண்டு மறைந்தார்.
ஆங்கில மூலம் - அவுட்.காம்
தமிழில் - வின்சென்ட் காபோ