காலாவதி எனும் குழப்பம்! -பாலில் அச்சிடப்பட்டுள்ள வார்த்தைகள்!
செல் பை, யூஸ்டு பை, பெஸ்ட் இஃப் யூஸ்டு பை என பல தேதிகளை நிறுவனங்கள் தங்களது பால் பொருட்களின் மீது அச்சிடுகிறார்கள்.இது பெரும் குழப்பத்தை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. விளைவு? ஆகா பால் கெட்டுப்போச்சு என பால் பாக்கெட்டை ஃபிரிட்ஜிலேயே கடாசிவிட்டு செல்வதுதான்.
பெஸ்ட் பை - சிறந்த தரத்தில் பாலைப் பயன்படுத்துவதற்கான நாள்
யூஸ் பை - நல்ல தரத்தில் பொருட்கள் இருக்கும் நாள்
செல் பை - இது கடைக்காரருக்கானது. சிறந்த தரத்தில் பால் உள்ள காலத்தைக் காட்டுகிறது.
அமெரிக்காவில் மட்டும் 20 சதவீத பால் பொருட்கள் இதுபோன்ற லேபிள்கள் மூலம் வீணாவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அமெரிக்காவிலுள்ள எஃப்டிஏ, கட்டாயமாக பால் பாக்கெட்டுகளில் அதன் காலாவதி நாட்களை குறிப்பிடக்கூறவில்லை. அதன் தரம் பற்றிய குறிப்புகளை மட்டும் அச்சிடக்கூறுகிறது. அமுல் கோல்டு என்றால் 180 நாட்கள் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்களே அதுதான்.
பாஸ்ட்ரைஸ்டு என்று பாலில் அச்சிடப்பட்டிருக்கும். இதன் பொருள், பாலை சூடுபடுத்தி ஈகோலி, சால்மோனல்லா ஆகிய பாக்டீரியாக்களை அழித்திருப்பார்கள் என்பதே. அழிப்பது என்ற வார்த்தை தவறு. கட்டுப்படுத்தியிருப்பார்கள்.இம்முறையில் 3 வாரங்கள் பால் தாங்கும். அதற்குமேல் கெட்டுப்போய்விடும்.
அதில் அச்சிட்ட நாளைத் தாண்டி ஏழு நாட்கள் கெடாமலிருக்க வாய்ப்பு உள்ளது. அதைத் தாண்டி அறை வெப்பநிலையில் கெடாமலிருப்பது கஷ்டம்..
நாட்களை மட்டும் வைத்து எதனையும் கண்டுபிடிக்க முடியாது. பாலின் நிறம் மஞ்சளாக மாறி, அதன் வாசனை மாறியிருந்தால் அதனை நீங்கள பயன்படுத்த முடியாது.
கெட்டுப்போன பாலைக் குடித்துவிட்டால், உடலே அதனை வெளியேற்றும். அதாவது, வாந்தி, வயிற்றுப்போக்கு வரும். அதற்கு அனுமதித்து உடலுக்கு உணவு எடுக்காமல் வெந்நீரை குடித்தாலே உடல் தன் பழைய நிலைக்கு திரும்பும்.
நன்றி:நியூட்ரிசன் வலைத்தளம்.